Saturday 25 February, 2012

அண்ணா   திமுக பொது செயலாளர் ஜெயலலிதாவின் பிறந்தநாளான பிப்ரவரி 24 ஒவ்வொரு முறையும் வித்தியாசமான முறையிலும், மக்களுக்கு உபயோகமான வகையிலும் இருக்கவேண்டும் என்பதில் முதலமைச்சர் அறிவுறுத்துவதும், வழக்கமான ஒன்றுதான்.





முதலில் கடுமையான வெய்யிலை தணிக்க தண்ணீர் பந்தல் அமைத்து நீர் மோர்,தண்ணீர், ஆகியவைகளை மக்களுக்கு அளிக்க கட்டளை இட்ட தலைவி,அடுத்த ஆண்டு அன்ன தானம் செய்ய சொன்னார். இந்த ஆண்டு மரம் நடும் விழாவை தானே  முன் நின்று ஆரம்பித்து வைத்தார்.
அரசு மூலம், மழை நீர் சேகரிப்பு,மகளிர் காவல் நிலையம், டாஸ்மாக், பள்ளிப் பிள்ளைகளுக்கு இலவச சைக்கிள், இலவச சீருடைகள், இல்லத்தரசிகளுக்கு, மிக்சி,கிரைண்டர்,மின் விசிறி, என்று அவர் செய்யும் நலத்திட்டங்கள்   நீண்டு கொண்டே போகிறது. மின் தட்டுப்பாட்டை சரி செய்துவிட்டால் மக்கள் பாராட்டுவார்கள். 

Monday 20 February, 2012

enna nadakkuthu nattula என்ன நடக்குது நாட்டில: enna nadakkuthu nattula என்ன நடக்குது நாட்டில

enna nadakkuthu nattula என்ன நடக்குது நாட்டில: enna nadakkuthu nattula என்ன நடக்குது நாட்டில

enna nadakkuthu nattula என்ன நடக்குது நாட்டில

enna nadakkuthu nattula என்ன நடக்குது நாட்டில

தமிழக அரசியலும், அரசியல் கைதுகளும்:::

தமிழக அரசியலும், அரசியல் கைதுகளும்:
தமிழகத்தில் தினமும்   ஒரு அரசியல் வாதி கைது செய்தி வந்தவண்ணம் உள்ளது. சிலர் ஜாமீனில் வெளி வருகின்றனர். ஆளும் கட்சியை சேர்ந்தவர்களும், முதலில் கட்சியிலிருந்து விலக்கப்பட்டு, பிறகு கைது செய்யப்படுகிறார்கள். மந்திரிகள் மாற்றப்படுகிறார்கள். இலாக்காக்கள் பறிக்கப்படுகின்றன. கொடுக்கப்படுகின்றன. மந்திரிகள் பெயர் பத்திரிகையாளர்களுக்கே தெரியவில்லை. முந்தைய திமுக ஆட்சியில் இந்த குழப்பங்கள் எல்லாம் இல்லை. பேராசிரியர் நிதி அல்லது, கல்வி. துரைமுருகன் பொதுப்பணித்துறை,பொன்முடி கல்வி-(உயர்)? ..ஆற்காடு வீராசாமி-மின்சாரம்... நம்பி செ    (ர் )ல்லலாம். நெடுஞ்செழியன் இருந்த வரை அவர்தான் கல்வி அமைச்சர்.
அடுத்து திமுக ஆட்சிக்கு வந்தால் இதே நடைமுறைய பின்பற்றினால் பாதி பேரை கோர்டில் பார்க்கலாம். வாழ்க ஜன நாயகம்.

அந்த காலமும் இந்த காலமும்.....நினைவுகள்:::

அந்த காலமும் இந்த காலமும்.....நினைவுகள்:::
அறுபதுகளில் சைகிள், பணக்கார வீட்டு பசங்க மட்டுமே வைத்திருப்பார்கள்.காலில் செருப்பு கூட இல்லாத நாங்க வாடக சைகிள் எடுத்து ஓட்டி பழகுவோம். சிங்கப்பூர் சைகிள் மிகவும் அதிசியமாக பார்க்கப்படும்.
நான் வேலைக்கு போக சைகிள் தேவைப்பட்டது. வீட்டில் இருந்து ( பஸ் ஸ்டாண்டின் தூரம் + இறங்கி) ஆபீஸ் நடக்கும் தூரத்திற்கு, வீட்டில் இருந்தே  சென்றால் மிகவும் குறைவான தூரம். சம்பளம் Rs .125/= சைக்கிள் விலை 750 ரூபாய். செகண்ட் ஹான்டில் வாங்கினால் நானூறு, ஐநூறு  ரூபாய்க்கு கிடைக்கும்.வீட்டில் ஒத்துக்கொள்ளமாட்டார்கள். முதலாளி நல்ல மனிதர், காரில் வீட்டிற்கு செல்லும் வழியில் என்னை இறக்கி விடுவார். அதற்காகவே அவர் கிளம்பும் வரை ஏதாவது வேலை செய்து கொண்டிருப்பேன்! ஒரு நாள் அவராகவே கூப்பிட்டு, பிராட்வேயில் உள்ள ஒரு கம்பனியில்,ராபின் ஹூட் சைகிள் வாங்கி கொடுத்தார். அங்கிருந்து சைதாபேட்டை வரை ஓட்டிக்கொண்டு வந்தது வாழ் நாளில் மறக்க முடியாதது.
நான் சொந்தமாக தொழில் தொடங்கியபோது, சாவி ஸ்டாண்டில் ஒரு ஸ்கூட்டர் சாவியும், இரண்டு மோட்டார் பைக் சாவிகளும், ஒரு கார் சாவியும் இருக்கும்.அலுவல வேலையாக யார் வேண்டுமானாலும் எந்த வண்டியையும், எடுத்து செல்லலாம்.

Thursday 2 February, 2012

சென்னை விமான நிலையமா இது?




         I-DISO - Alitalia Boeing 777-200ER aircraft
                             


சென்னை விமான நிலையமா இது?

.சென்னை விமான நிலையமா இது?
நம்ப முடியாத அளவிற்கு மாற்றங்கள்!!!!
எண்பதுகளில் டக்கோடா,பிரன்ஷிப்,போயிங், ஜம்போ என பல வகையான விமானங்கள், அலுமினிய பறவைகளாக வீடு அதிரும்படி மேலே பறக்கும். அப்போது கிண்டியில் இருந்தோம். அண்ணாந்து பார்த்தால் முன்பக்க சக்கரம்
மெதுவாக இறக்கப்படுவதை காணலாம். விமானங்களின் நிழல் வீடுகளின் மீது போய்க்கொண்டிருக்கும். மீனம்பாக்கத்தில் இறங்கும்போது பெரிய ஓசை  இங்கே கேட்கும். காரவீல் எனும் விமானம் வீட்டை கடக்கும்போது அதிர்வும்,ஓசையும் மிகவும் அதிகமாக இருக்கும்.
அப்பாவுடன் :::
அப்பாவுடன் முதலில் விமான நிலையத்திற்கு சென்று பார்த்தபோது நுழைவுக் கட்டணம் இல்லை.ஹிந்து பேபரின் இரண்டு குட்டி விமானங்களும்(பெங்களூர்,மதுரை,கோவை,விஜயவாடா ஆகிய இடங்களுக்கு இங்கிருந்துதான் பேப்பர் செல்லும்) பிளையிங் கிளப் குட்டி விமானங்களும் வரிசை கட்டி நிற்கும்.
15 ஆண்டுகளுக்கு பிறகு ::::
அதற்கடுத்து 15 ஆண்டுகளுக்கு பிறகு ஒரு முக்கியமான மீடிங்கிற்காக அவசரமாக பெங்களூருக்கு வரசொல்லி விமான டிக்கட் அனுப்பினார்கள். ஊர் நமக்கு புதியதல்ல.வாகனம் புதியது. (அப்பாவுடன், பல வருடங்களுக்கு முன் வந்தது நினைவிற்கு வந்தது மட்டுமல்லாமல், அப்போது அவர் உயிருடன் இல்லாததும் வருத்தமாயிருந்தது.
அம்மாவிடம் சொன்னால் பயப்படுவார்கள் என்று சொல்லவில்லை.இரவே திரும்பிவிட்டதால் பிரச்சினை இல்லை.)
உடன் மேலதிகாரியும் வந்ததால் மீட்டிங்கில் என்ன எடுத்து சொல்லவேண்டும் 
என்பதை பற்றி விவாதித்துக்கொண்டே வந்ததில் ஊர் வந்ததே தெரியாமல் உட்கார்ந்து பேசிக்கொண்டேயிருந்தோம். ஏர்-ஹோஸ்டஸ் வந்து சொன்னதும், தெரிந்தாற்போல சமாளித்து வெளியே வந்தோம்.
மூன்றாவது முறை ::::::
அடுத்தது கொச்சியில் இருந்தபோது, மாலை சென்னையில் இருக்கவேண்டிய கட்டாயம்.அலுவலகத்தில் இருந்து உடனே வரச்சொன்னார்கள்.அந்த பயணம் தான் நின்று நிதானமாக வெளியில் பார்த்து ரசித்து வந்தேன்.
எல்லா பயணங்களிலும், பயணிகளின் எண்ணிக்கை, 15 லிருந்து 30 ஐ தாண்டாது.
இன்று காலை 
இன்று காலை மகனும் மகளும் மும்பைக்கு செல்ல டிக்கட் எடுத்திருந்தார்கள்.இன்றும் நாளையும் விடுமுறை திங்கள் செவ்வாய் சேர்த்தால் 4 நாட்கள்.
காலையில் அவர்களை எழுப்பி (இரவு இரண்டு மணிக்குத்தான் படுத்தார்கள்)கால் டாக்சியில் சென்று திருசூலம் உள்நாட்டு நிலையம் அடைந்தோம்.
பிராட்வே பஸ் ஸ்டாண்ட்   
விசிட்டர்கள் உள்ளேஅனுமதி இல்லை. வெளியே சங்கீதா ஹோட்டல் (டீ கடை  லுக்கு!)
மேம்பாலத்திற்கு கீழே, நாற்காலிகளில், விமானத்தில் வந்த பயணிகள்.சூபர் பஜாரில் இருப்பது போல தள்ளு வண்டிகள்.அதில் பெட்டி லக்கேஜுகள்.
பிராட்வே பஸ் ஸ்டாண்ட் ரேஞ்சுக்கு இருந்ததை பார்த்ததும் ஜீரணிக்கவே முடியவில்லை.
வாரிசுகளிடம் சொல்லிவிட்டு கிளம்பிய போது என்னவோ போல இருந்தது.
எதிரே இருக்கும் திருசூலம் ஸ்டேஷனில் பிளாட்பார்மில் நின்று பிளைட் டேக் ஆப்- ஆகும்வரை காத்திருந்தபோது சிவப்பு பட்டையுடன் சரியான நேரத்தில் 
பரங்கிமலைக்கு மேலே "மீன் கொத்தி"போல அலுமினிய பறவை பறந்தது,என் மக்களை சுமந்து கொண்டு. 
அப்பாவின் நினைவு வந்து கண்களை நீரால் நிரப்பியது.

0 கருத்துரைகள்: