Friday 21 September, 2012

flight No.6E-279..தொடர்ச்சி ....



தொடர்ச்சி ....
ஓடு பாதையிலேயே நல்ல உயரத்திற்கு சென்ற விமானம், இடது இறக்கையை  கீழிறக்கி சர்ரென்று திரும்பியது..கீழே தண்ணீர், சற்று நேரத்தில் கடலுக்கு மேலே. பத்து நிமிடத்தில் வெண் மேக கூட்டத்திற்கு மேலே, இன்னும் மேலே.......இனி வேடிக்கை பார்க்க ஒன்றுமில்லை..கீழே மேக கூட்டம் .தொலைவில் நீல நிறத்தில் வானமா, கடலா? 
பெல்டை விடுவித்துவிட்டு ரெஸ்ட் ரூம் போக ஒரு கூட்டம் அலை மோதியது. 
அது அடங்கியதும், தள்ளு வண்டியில் காபி, மினி தோசை, என்று வந்ததை வேண்டியவர்கள்  வாங்கி உள்ளே தள்ள ஆரம்பித்தார்கள்.
இந்த உணவெல்லாம் நமக்கு ஒத்து வராது..எடுத்து வந்தால் சாப்பிட அனுமதிப்பார்களோ,மாட்டார்களோ என்ற சந்தேகத்தில் 
உணவு எதுவும் எடுத்து வராததால் ஒரு புத்தகத்தை படிக்க ஆரம்பித்தேன்.
 "விமானியின் அறிவிப்பில்,பறந்து கொண்டிருப்பது 10 ஆயிரம் மீட்டர்(33,000-அடி)உயரத்தில்,விமானத்தின் வேகம் மணிக்கு-800 கிலோமீடர் என்பதும்,வானிலை சாதாரணமாக இருக்கிறது என்பதையும் தெரிந்துகொள்ள முடிந்தது. 
திருப்பதிமலையையும் அடுத்து, நீர்த்தேக்கத்தை பார்க்கவும்,சீட் பெல்டை போட்டுகொள்ளவும், எலக்ட்ரானிக் சாதனங்களை அணைக்க சொல்லி அறிவிப்பு வரவும் சரியாக இருந்தது.
புழல் ஏரியை நெருங்கும்போது மிக கீழே பறக்க ஆரம்பித்த விமானம் திருவொற்றியூர் தாண்டி, கடலில் வெகு தூரம் சென்று வலது பக்கம் திரும்பி, திருவல்லிக்கேணி மயிலை (பறக்கும் ரயில்-மிக அழகாக)வழியாக அடையார் பிரிட்ஜ்,கிண்டி பாலம், கத்தி பாரா, ராணுவ இடத்தின் பசுமையான பகுதியை தாண்டி, இன்னும் கீழே, கீழே, "தட்"டென்று ஓடுபாதையில் டயர்களை இறக்கி இறக்கையின் மேல்பகுதி முழுவதுமாக திறக்கப்பட்டது.
ஒவ்வொரு இஞ்சினாக அணைத்து, வேகத்தை குறைத்து........ஓடு பாதையில் ஓடி சரியாக நிறுத்த வேண்டிய 
இடத்தில் நின்றது. 
இறங்குவதற்கு அவசரப்படும் கூட்டத்தில் முட்டி மோதாமல், அமைதியாக அமர்ந்திருந்தேன்.கார்கோ வண்டி வந்து, கீழே கதவு திறக்கப்பட்டு பெட்டிகள் அதில் ஏற்றப்படுவதை பார்த்தேன்.என் பெட்டி ஏற்றப்பட்டதை பார்த்து விட்டு எழுந்தேன்.
வெளியே வால்வோ பஸ்ஸில் மக்களுடன் கலந்து "காமராஜர் உள்நாட்டு விமான" நிலையத்தினுள் நுழைந்தேன்.
அரை மணி நேரம் காத்திருந்ததில் கன்வேயரில் பெட்டி வந்தது.எடுத்து நாய் குட்டியை இழுத்து வருவது போல் இழுத்து கொண்டு வெளியில் வந்தேன்.
கால் டாக்சிகாரன் அம்பத்தூருக்கு 750 ரூபா, பிக்ஸ்டு ரேட் என்றதும் "சரி" என்று 
ஏறி அமர்ந்தேன். வீட்டிலிருந்து போன்....."சென்னை வந்துட்டேன்,சமைச்சு வை,கொலை பசி".என்றேன்.

enna nadakkuthu என்ன நடக்குது: FLIGHT No.6E-279

enna nadakkuthu என்ன நடக்குது: FLIGHT No.6E-279:        கடைசி நிமிடத்தில் ரயிலில் ஏறும் பழக்கத்தை என் மனைவி மக்கள் கேலி செய்வார்கள்.அதனால் விமானப்பயணத்திற்கு, என்னை சென்னையிலிருந்து மகளும...

FLIGHT No.6E-279

1170351    1170508 1170580
கடைசி நிமிடத்தில் ரயிலில் ஏறும் பழக்கத்தை என் மனைவி மக்கள் கேலி செய்வார்கள்.அதனால் விமானப்பயணத்திற்கு, என்னை சென்னையிலிருந்து மகளும், மும்பையிலிருந்து மற்றொரு மகளும் ஜெய்ப்பூரில் இருந்து மருமகனும் மானீட்டர் பண்ணிக்கொண்டே இருந்தார்கள். பயணத்தின் போது 
இடையூறாக இருக்கக்கூடாதென தண்ணீர்,காப்பி, குடிப்பதையும் தவிர்த்தேன்!!திட உணவின் அளவை குறைத்தே சாப்பிட்டேன்!!!  ஆனால் அதிக அளவு தண்ணீர் குடிக்கவேண்டும் என்றது விமான டிக்கட்டின் வாசகம்.மிதமான தூக்கத்தையும்,உணவையும் 
வலியு றுத்தியது.
ஊட்டி,கொடைக்கானல் போன்ற உயரமான இடங்களுக்கு பயணம் செய்யும்போது சிலர் வாந்தி எடுப்பதை கண்டதில் இருந்து, நான் வெறும் வயிற்றுடன் அல்லது ஜூஸ்,காபி போன்றவைகளோடு நிறுத்தி கொள்ளுவேன்.
பயணத்தில் சீனியர் சிடிசனுக்கு சலுகைகள் உண்டு. கவுண்டரில் இருந்த பெண், சீட் விருப்பத்தை கேட்டபோது, "ஜன்னல் அருகில் இறக்கைக்கு 
பின்னால்(கிட்டத்தட்ட) வால் பகுதிக்கு முன் என்றேன்."
மொத்தம் 30 வரிசைகள் கொண்டது, ஒவ்வொவொரு வரிசையிலும் 6 சீட்டுகள்.
ஒவ்வொறு வரிசைகளிலும் A - மற்றும் F , ஜன்னல் சீட்டுகளாகும். எனக்கு விமானத்தின் வலது இறக்கையின் பின்னால் உள்ள ஜன்னல் சீட்(26-F) ஒதுக்கினார்,அந்த பெண்மணி.(வாழ்க).
எத்தனை தடவை பயணம் செய்தாலும் வெளியில் வேடிக்கை பார்ப்பது ஒரு தனி சுகம்.
லக்கேஜ்களை ஏற்றி ஒரு சிறிய வண்டி நேர் கீழே நின்றது.விமானத்தின் சிறிய கதவு திறக்கப்பட்டு கன்வேயர் பொருத்தி,இயக்கியதும் ஒவ்வொருத்தரின் பெட்டியும் உள்ளே சென்றது.நிறத்தை வைத்து என் பெட்டி ஏற்றப்பட்டதை பார்க்க முடிந்தது.
("அதிக வெயிட் தூக்காதே.பேக்கேஜில்  போடு."
  "இறங்கும் இடத்தில் நேரம் ஆகுமே".
."இப்போல்லாம் 15 நிமிடத்தில் வந்து விடுமப்பா"
"சரி")
கார்கோ டோரை மூடியதும் சிறிய டிராக்டர் அந்த கார்கோ வேனை இழுத்து சென்றது.
ஒரு ஏர்- ஹோஸ்டஸ் அபாய சமயங்களில் எப்படி செயல பட வேண்டும் என்பதை செய்து காட்டினார்.சீட் பெல்டை போடுவது,கழற்றுவது,ஆக்சிஜன் கருவியை எப்படி பொருத்தி கொள்ளுவது? லைப் ஜாக்கட்டை அணிந்து கொள்ளுவது பற்றி இந்தி,ஆங்கிலத்தில் விளக்கப்பட்டது.சீட் பெல்ட் போட சொன்னார்கள்.முடியாதவர்களுக்கு ஏர் ஹோஸ்டஸ் உதவினார்கள். கேப்டனின் அறிமுக விளக்கத்துடன் விமானம் புறப்பட தயாரானது. இரண்டு இறக்கைகளையும் மூடி திறந்து செயல்படுகிறதா என்று செக் செய்வதை பார்க்க முடிந்தது. தரை என்ஜினீயர் கட்டை விரலை உயர்த்தி காட்ட, இஞ்சின் இயக்கப்பட்டு நகர ஆரம்பித்தது.
இது  டாக்சியிங்.
சாதாரண வாகனம் போல ஓடு பாதையில் ஓ..................டி  திரும்பி நின்றது. 
அடுத்த கட்டம் எல்லா இஞ்சின்களையும் இயக்கி முழு வேகத்தில் மேலே எழும்ப வேண்டும்.. ஏன் நின்று கொண்டிருக்கிறது...  
சத்தத்துடன் ஒரு விமானம் 
சற்று தூரத்தில் தாழ பறந்து, தூரத்தில் டயர்களை தேய்த்து,புகையுடன் ஓட்டத்தை சிறிது சிறிதாக குறைத்து நின்றது...அது போல ஐந்து விமானங்கள் தொடர்ச்சியாக இறங்கின...கண்கொள்ளா காட்சி.
டவரிலிருந்து இந்த விமானம் பறக்க அனுமதி வந்ததும், அனைத்து இன்ஜின்களும் இயப்பட்டன. வேகம் எடுத்து ஓட ஆரம்பித்தது. இப்போது 
இறக்கையில் உள்ள கதவுகள் பாதி திறக்கப்பட்டதை பார்க்க முடிந்தது.முன்பக்கம் உயர்ந்து,  சர்ரென சீறி மேலெழும்புவதை உணர முடிந்தது.
உயர.
  உயர 
      உயர கீழே கட்டிடங்கள் சிறியதாக, ஓடைகள் கால்வாய்களாக வீடுகள் பொம்மை வீடுகளாக....அற்புதமான காட்சி.