Wednesday 21 November, 2012

ambatturum ---developmentum...

 உள்ளாட்சி தேர்தலின் போதே அம்பத்தூர் ராம் நகர் ஏரியாவில் தார் ரோடு போட்டுக்கொண்டிருந்தார்கள். அதன் பிறகு மெட்ரோ,drainage என்று ரோடுகளை தோண்டியதில், அம்பத்தூர் என்றாலே ஆட்டோ,கால் டாக்சி காரர்கள் வர தயங்கினார்கள்.வந்தாலும் உள் ரோடுகளுக்கு வர மறுத்தார்கள்.சொந்த வண்டிக்காரர்கள் எல்லாம் ட்ராக்டரில்  பயணிப்பதை போல குதித்து குதித்து பயணம் செய்து எலும்புகள் இடம் மாறியதும்,ஆங்காங்கே சதை பிடிப்பால் அவதியுடன் டாக்டரிடம் ஓடியதும், வண்டிகளுக்காக செலவு செய்ததும் தனி கதை.
பஸ் ஓடும் பாதைகள் புதிதாக போட ஆரம்பித்ததும், ரோடை  ஓரடி ஆழத்திற்கு நோண்டி எடுத்து பிறகு சரளை கல் மண் போட்டு அதன் மேல் தார் ரோடு grid road போட்டதால் வீடுகள் தாழ்வான நிலைக்கு செல்லுவது தவிர்க்க பட்டுள்ளது.