Thursday 29 March, 2012

ஒரு சாமியார் சம்சாரியான கதை

ஒரு சாமியார் சம்சாரியான கதை:மனிதனுக்கு சிக்கல் வரும்போது ஜாதகம் ஜோசியம் என்பது கடைசி புகலிடமாகிவிட்டது.சர்வ சாதாரணமாக ஐந்து லட்சம் ரூபாய்க்கு காசோலை கொடுத்தவனுடைய 500 ரூபா செக், பணமில்லை என்று திரும்பி வந்து அசிங்கபடுத்திக்கொண்டிருக்கும் நேரம். வியாபாரத்தில் வெறுப்புற்று கோவில் கோவிலாக சுற்றிக் கொண்டிருந்த நேரம், கடையை மனைவி நடத்திக்கொண்டு இருந்தார். 
சாமியார்கள் கடைக்கு வந்தால் நல்லது என்று உபசரிக்கும் நண்பரை தேடி ஒரு இளவயது சாமியார் வந்தார்.கடையில் இருந்த பெண்மணி: "எப்போது சாமியார் ஆனீர்கள்?"
சாமியார்:" மூன்று   வருடங்கள் ஆயிற்று."
பெ::இதனால் என்ன பயன்?
"      என்னை சேர்ந்தவர்கள் (தாய் தந்தை மற்றும் 6  தலைமுறையினர் மோட்சம் பெறுவார்கள்."
"எப்படி இ(ந்த கூட்டத்)தில் சேர்ந்தீர்கள்?"
"நான் அக்ரி காலேஜில் படித்துக்கொண்டிருக்கும்போது பிரசங்கத்தை கேட்டு சேர்ந்தேன்". 
"பெற்றோர்?"
"விவசாயிகள்!"
"எப்படி இவ்வளவு செலவு செய்து இந்த கல்லூரியில் சேர்ந்தீர்கள்?"
"நிலத்தை விற்றுதான்!"
"படிப்பை பாதியில் விட்டுவிட்டு இதில் சேர்ந்து சாமியார் ஆகி விட்டீர்கள்.உங்களுடைய பெற்றோரின் கதி?"
"இறைவன் பார்த்து கொள்ளுவார்"
"நிலத்தை விற்று படிக்க வைத்த பெற்றோரின் கனவை பொய்யாக்கி விட்டு அவர்களின் வாழ்வாதாரத்தையும்   கேள்விக்குறியாக்கிய உங்களுக்கு எப்படி கடவுள் மோட்சத்தை கொடுப்பார்?." அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்"அவர்களை தவிக்க விட்டுவிட்டு அந்த பாவத்தை சுமந்திருக்கும் உங்களுக்கு மோட்சம் கிடைக்கும் என்பது பொய்."நீங்கள் நரகத்திற்கு தான் செல்வீர்கள்."வீட்டிற்கு போயி, அவர்களை காப்பாற்றும் வழியை பாருங்கள்"
அம்மிணி போட்ட போட்டில்,அன்றே, சாமியார் காஷாயத்தை துறந்து சொந்த ஊருக்கு போய்விட்டார். 

Sunday 25 March, 2012

வலியும் காய்ச்சலும் தனக்கு வந்தால் தெரியும்!

வலியும் காய்ச்சலும் தனக்கு வந்தால் தெரியும்! 
மதிய உணவை சாப்பிட்டுக்கொண்டிருந்தபோது,  வலது பக்க மார்பில் ஒரு மாதிரி இம்சை. கை கழுவி, படுத்தேன். வலி விநோதமாக இருந்தது.வாய்வாக இருக்குமோ! படுத்தாலும் குறையவில்லை. ஆட்டோவை தேடினால் உணவு நேரமாதலால் ஒன்றையும் காணவில்லை. ஓட்ட தெரியாத ஒருவன், நண்பன் வண்டியை ஓட்டி வந்தான். முதல் உதவியாவது எடுக்கலாம் என்று பார்த்தால் தனியார் டாக்டர் ஒருவரும் இல்லை.
ஹார்ட் அட்டாக்:
அருகிலிருந்த மருத்துவமனைக்கு வந்ததும் வலியே இல்லை. இருந்தாலும் மனது கேட்கவில்லை.வந்தது வந்தோம் டாக்டரை பார்த்து விடுவோம் என்று உள்ளே போய் பார்த்தால் பயிற்சி டாக்டர் வந்து விவரம் கேட்டு இ சி ஜி எடுத்து விட்டு உங்களுக்கு வந்தது "இருதய வலி", என்று சிறப்பு டாக்டரிடம் தகவல் சொல்ல அவர் வந்து பரிசோதித்து விட்டு உடனடியாக மருத்துவ மனையில் சேர்ந்து பை-பாஸ் அறுவை சிகிச்சை செய்து கொள்ளுங்கள், இல்லையென்றால் உயிருக்கே ஆபத்து என்று அறிவுறித்தினார்.
 நாற்பது ஆயிரத்திற்கு   மேல் பில்,பை-பாஸ், பண்ண 1.75,லக்ஷம்  
 உடனடியாக MMM மருத்துவமனையில் சேர்ந்து,  ஆஞ்சியோ எடுத்தார்கள். கண்டிப்பாக பை-பாஸ், பண்ண 1.75,லக்ஷத்திற்கு பில்லை போட்டு உடனடியாக கொடுத்தார்கள்.  
இதற்கே நாற்பது ஆயிரத்திற்கு   மேல் பில்லாகிவிட்டது. 
ஒரு பக்கம் பயம். கடன் வாங்கி செய்ய தயக்கம். 

பணம் தயார் செய்துகொண்டு வருகிறோம் என்று சொல்லிவிட்டு வீடு திரும்பினோம்.
மகளும் மகனும் சம்பாதித்தாலும் மற்றொரு மகள் படித்துக்கொண்டிருந்தாள். ஒரு பக்கம் அவர்களுக்கு பயம். எனக்கு இவ்வளவு பணம் கடன் வாங்கி செய்ய தயக்கம்.
 ஏழைகளுக்கென்றே இருக்கும் பொது மருத்துவமனை:

மீடியா நண்பர்களின் ஆலோசனைப்படி, ஏழைகளுக்கென்றே இருக்கும் பொது மருத்துவமனைக்கு சென்று உயர் அதிகாரியிடம் சொன்னதும், உடனடியாக இருதய மருத்துவருக்கு தெரிவித்து, கவனிக்க சொன்னார்.
தனியார் மருத்துவமனையின் ரிபோர்ட்டுகளை பார்த்துவிட்டு, மாத்திரைகளையே சாப்பிடுங்கள் அறுவை சிகிச்சை வேண்டாம் என்று ஆலோசனை கூறினார். விசாரித்ததில், அறுவை சிகிச்சைக்காக காத்திருப்போர் பட்டியல் நீளமானது என்றார்கள்.
கடவுள் பேரில் பாரத்தை போட்டுவிட்டு மாத்திரைகளை முழுங்கி, வேலைகளை, அலைச்சல்களை குறைத்துக்கொண்டேன்.
மறுபடியும் வலி :
அடுத்த வருடம் ஒரு வி.ஐ.பி.யை சந்திக்க சென்ட்ரல் ஸ்டேஷனில் இருந்து எதிர்புறம் செல்ல சப் வே யில் நடந்தபோது, மார்வலி ஆரம்பித்தது.
அந்த ஏரியா எம்.எல்.ஏ, நண்பரிடம் போனில் விவரத்தை கூறியதும் உடனடியாக ஸ்கூட்டரில் வந்து, அவசர பிரிவில் அனுமதிக்க செய்தார். இ.சி.ஜி.,எக்கோ போன்ற டெஸ்டுகளை ஒவ்வொரு இடத்திலும் நீண்ட கியு இருந்தாலும் உடன் வந்த உதவியாளர் எடுத்துசொல்லி எல்லா இடங்களிலும் உடனுக்குடன் டெஸ்டுகளை எடுத்த வேகம் நம்ப முடியாதது.
எமர்ஜென்சி வார்டில்  

துறைத்தலைவர் உடனடியாக அட்மிட் ஆக வேண்டும் என்று சொன்னதால், எமர்ஜென்சி வார்டில் படுக்க வைத்துவிட்டார்கள்.
எனக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை. மனைவிக்கு தகவல் கொடுத்தால் பயப்படுவார்கள். உடன் ஒருவர் இருக்கவேண்டும் என்று சொல்லிவிட்டார்கள்.யாரை அழைப்பது. மகனும் மகள்களும் வேலைக்கும், கல்லூரிக்கும் சென்றுவிட்டார்கள்.
மகனுக்கு போனில் தகவல் சொல்லி, வேறு  யாரிடமும் போனில் தகவல் சொல்லாமல் ஆஸ்பிடலுக்கு வரவழைத்தேன்.
தலைமை செவிலியர் வந்து என் பெயரை கேட்டார். எதற்கு என்று கேட்டதற்கு "உங்களுக்கு என்று நோயாளி-ரிபோர்ட் தயார் செய்ய" என்றார். 
"அப்போ இவ்வளவு சோதனைகளும் பெயரில்லாமலா எடுத்தார்கள்?"
அதில் எம்.எல்.ஏ-வி.ஐ.பி. என்றிருந்தது.
பத்து நாட்கள் முதல் தரமான சிகிச்சை அளித்தது மட்டுமல்லாமல் மூன்றிற்கும் மேற்பட்ட மூத்த மருத்துவர்கள், தினமும் வெளி நோயாளிகளை பார்த்த பிறகு, உள்நோயாளிகளையும் பார்த்து உரிய ஆலோசனைகளை வழங்கிவிட்டு மதிய உணவிற்கு சென்றது அவர்கள் மேல் மிகுந்த மரியாதையை ஏற்படுத்தியது.
அவசர சிகிச்சைக்கு வந்துகொண்டே இருக்கும்   நோயாளிகளுக்கு, படுக்கை தரமுடியாமல் இருக்கும் நிலைமையை, தினமும் பார்த்ததால், மிகவும் சங்கடமாயிருந்தது. என்னால் ஒரு நோயாளிக்காவது   படுக்கை வசதி கிடைக்கும் என்பதை எண்ணி, வற்புறுத்தி டிஸ்சார்ஜ் ஆகி, வீட்டிற்கு திரும்பினேன். 
 படுக்கைகள், வேலை செய்பவர்கள் குறைவாக இருப்பதால் ஈடு கொடுக்க முடியவில்லை  

பொது மருத்துவ மனைக்கு ஆயிரக்கணக்கில் வரும் நோயாளிகளை, படுக்கைகள், (வேலை செய்பவர்கள்) குறைவாக இருப்பதால் ஈடு கொடுக்க முடியவில்லை என்ற உண்மையை உணர முடிந்தது. 
மக்கள் அசுத்தப்படுத்துவதை தடுக்க 

வரும் மக்கள் அந்த இடத்தை அசுத்தப்படுத்துவதை தடுக்க சுழற்சி முறையில் மாணவர்கள், தன்னார்வ தொண்டர்களை பயன்படுத்தலாம்.

Thursday 8 March, 2012

திருவள்ளூர் மாவட்ட (தெற்கு)மாணவரணி தமிழக முதல்வரின் பிறந்த நட்சத்திரமான மகத்தன்று, (7.3 .2012 ) விசேஷ பிரார்த்தனை

திருவள்ளூர் மாவட்ட (தெற்கு)மாணவரணி செயலாளர் மைக்கேல்ராஜ் தமிழக முதல்வரின் பிறந்த நட்சத்திரமான மகத்தன்று, (7.3 .2012 ) விசேஷ பிரார்த்தனை கூட்டத்தை நடத்தினார்.
அம்பத்தூர்,ஓரகடம் தேவாலயத்தில்,மாணவர் அணியை  சேர்ந்தவர்களும், அதிமுக பிரமுகர்களும் பகுதி மக்களும் திரண்டு மெழுகு வர்த்தி ஏற்றி தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதா அவர்கள் நீண்ட ஆயுளோடும் ஆரோக்கியத்தோடும் இருந்து நல்லாட்சி புரிய சிறப்பு ஜெப வழிபாடு செய்தனர்.

தேவாலயத்தை சேர்ந்த Rev .ஜெ.ஜான், பாஸ்டர் எபினேசர்,  Rev .ஜோசப், எஸ்.பி.அபிரஹாம், ஆகியோர் விசேஷ பிரார்த்தனையும் உரைகளையும் நிகழ்த்தினர்.


டாக்டர் கோதண்டம் சென்னை மாமன்ற உறுப்பினர்கள்(கவுன்சிலர்கள்)குரு,விஜயகாந்தன்,சிறுபான்மை பிரிவு தலைவர் சிமியோன் பிரபு, அன்பு ரோஸ், உமாபதி,சிவபாலன்,விஜயபாபு,ஆர் எஸ் எம் பாண்டியன், ஒய்.ராஜா,நாகா,எல்.ஜி.பிரகாஷ், வட்ட செயலாளர்கள் ஏ.பி.நாகேஷ்,சோக் கோவிந்தராஜ்,எம்.மோகன்,கே.பி.முகுந்தன்,ரஞ்சன், மாணவர் அணி நிர்வாகிகள் வி வி கிரி ஆதி கேசவன் அப்துல் காதர்,ரஜனி பாபு ராபின் முரளி பாலசுப்பிரமணியன் வினோத் கார்த்திகேயன் கொரட்டூர் கணேஷ் பொய்யாமொழி லக்ஷ்மிகாந்த் தென்னரசு ஜார்ஜ் தீபக் தினேஷ் இன்பகாந்தன் மார்கட் புருஷோத் சுரேஷ் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
விழாவில் எளியோருக்கு புடவை, மாணவர்களுக்கு டிக்ஷனரி, கிரிகட் பேட், ஆகியவை வழங்கப்பட்டன.