Friday, 24 August, 2012

enna nadakkuthu என்ன நடக்குது: அம்பத்தூரில் டெசோ மாநாட்டு தீர்மான விளக்க கூட்டம்...

enna nadakkuthu என்ன நடக்குது:
அம்பத்தூரில் டெசோ மாநாட்டு தீர்மான விளக்க கூட்டம்...
: அம்பத்தூரில் டெசோ மாநாட்டு தீர்மான விளக்க கூட்டம் : டெசோ மாநாட்டிற்கு மத்திய அரசு அனுமதி அளித்தாலும், மாநில அரசு கொடுத்த தொல்லைகளை குற...

அம்பத்தூரில் டெசோ மாநாட்டு தீர்மான விளக்க கூட்டம் :டெசோ மாநாட்டிற்கு மத்திய அரசு அனுமதி அளித்தாலும், மாநில அரசு கொடுத்த தொல்லைகளை குறிப்பிட்ட கலைஞர்,சிறிலங்காவில் தமிழ் அமைப்புகள் ஒற்றுமையாக இருந்திருந்திருந்தால் சுள்ளி கட்டு  போலவும் உடைக்க முடியாமல் இருந்திருக்கும் எனவும்,பிரிந்ததால் சுலபமாக எதிரி வீழ்த்த முடிந்தது  என்று கூறினார்....
முன்னதாக லூகாஸ் டி.வி.எஸ்.சிலிருந்து, பாடி, எஸ்டேட், அம்பத்தூர் ஒ.டி வரை,தாரை தப்பட்டை,மேளம்,செண்டை,என்று வரவேர்வு பலமாக இருந்தது.பொதுக்கூட்டம் மாநாடு போல இருந்தது.வழியெங்கும் மக்கள் இருபுறமும் நின்று  கலைஞரை காண மூன்று மணி நேரம் காத்திருந்தது அந்த காலத்தை நினைவு படுத்தியது.முன்னதாக அம்பத்தூர் நகர தி.மு.கழக செயலாளர்,ஜோசப் சாமுவேல் வரவேற்புரை ஆற்றினார்.ஜெகத்ரட்சகன் ,துரைமுருகன்,டி.ஆர் பாலு,எம்.பி.வில்லிவாக்கம் முன்னாள் சட்ட சபை உறுப்பினர் ப.ரங்கநாதன்,சுந்தரம்,ஆவடி நாசர்,ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

Thursday, 23 August, 2012

enna nadakkuthu என்ன நடக்குது: அம்பத்தூரில் கலைஞர் எழுச்சியுரை:

enna nadakkuthu என்ன நடக்குது: அம்பத்தூரில் கலைஞர் எழுச்சியுரை:: அம்பத்தூரில் கலைஞர் எழுச்சியுரை:   நாளை நடக்க இருக்கும் "டெசோ"மாநாட்டு தீர்மான விளக்க கூட்டத்தில் கலைஞர் பங்கேற்க இருக்கிறார் என்பதால் உ...

அம்பத்தூரில் கலைஞர் எழுச்சியுரை:

அம்பத்தூரில் கலைஞர் எழுச்சியுரை:  
நாளை நடக்க இருக்கும் "டெசோ"மாநாட்டு தீர்மான விளக்க கூட்டத்தில் கலைஞர் பங்கேற்க இருக்கிறார் என்பதால் உடன்பிறப்புக்கள் சிறப்பான ஏற்பாடுகள் செய்துகொண்டு இருக்கிறார்கள். தி மு கழக பொருளாளர் மு.க.ஸ்டாலின், விழா நடக்க இருக்கும் மேடையை பார்வையிட்டார். உடன் வில்லிவாக்கம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ப.ரங்கநாதன்,திருவள்ளூர் மாவட்ட கழக பொறுப்பாளர், சுதர்சனம்,அம்பத்தூர் கழக நகர செயலாளர் ஜோசப் சாமுவேல், ஆவடி நகர கழக செயலாளரும், நகராட்சி தலைவருமான மு.நாசர்,, மற்றும்  கழக நிர்வாகிகள்...

Wednesday, 22 August, 2012

enna nadakkuthu என்ன நடக்குது: house tax new card is ready for distribution from...

enna nadakkuthu என்ன நடக்குது:
house tax new card is ready for distribution from...
: house tax new card is ready for distribution from chennai corporation, ambattur zone.the public can collect it by showing the old book w...

house tax new card is ready for distribution from chennai corporation, ambattur zone.the public can collect it by showing the old book without any cost.
16.8.2012 144.jpg
சொத்து வரி கட்ட புதிய அட்டையை மாநகராட்சி வழங்குகிறது. பொது மக்கள் பழைய புத்தகத்தை 
காட்டி பெற்றுக்கொள்ளலாம்!!!
எஸ்.எஸ்.ஆர்.சுகுமார்.
16.8.2012 143.jpg

Monday, 20 August, 2012

enna nadakkuthu என்ன நடக்குது: கலைஞரின் அம்பத்தூர் பொதுக்கூட்டம் -தி.மு.க.வின...

enna nadakkuthu என்ன நடக்குது:கலைஞரின் அம்பத்தூர் பொதுக்கூட்டம் -தி.மு.க.வின...
: கலைஞரின் அம்பத்தூர் பொதுக்கூட்டம் -தி.மு.க.வினரின் ஆலோசனை கூட்டம் :
கலைஞரின் அம்பத்தூர் பொதுக்கூட்டம் -தி.மு.க.வினரின் ஆலோசனை கூட்டம் :

enna nadakkuthu என்ன நடக்குது: பிக் பாக்கட்

enna nadakkuthu என்ன நடக்குது: பிக் பாக்கட்: பிக் பாக்கட் : சம்பள தினத்தன்று மட்டும் சுருசுருப்பாக வேலை(!)செய்து பணத்தை திருடுவது பிக் பாக்கட்காரர்களின் வேலை,தொழில்(!).உலகெங்கும் இதனா...

பிக் பாக்கட்

பிக் பாக்கட் :
சம்பள தினத்தன்று மட்டும் சுருசுருப்பாக வேலை(!)செய்து பணத்தை திருடுவது பிக் பாக்கட்காரர்களின் வேலை,தொழில்(!).உலகெங்கும் இதனால் பாதிக்க படுவது கூலி, சம்பளம் வாங்கும் நடுத்தர வர்க்கம்தான்.

இதை தடுக்க சூரியனே மறையாது ஆட்சி புரிந்த நாட்டில் தலைநகரில்,
 5 பேருக்கு, நடு  ரோட்டில் தூக்கு தண்டனை, நிறைவேற்றப்பட்டது(1945!). பிக்-பாக்கட் அடிப்பவர்கள் பயந்து திருந்துவார்கள் என்ற எண்ணத்தில் செய்யப்பட்ட இந்த நிகழ்ச்சியை  பார்க்க கூடிய கூட்டத்தில் 500 பேர்களுடைய பர்ச்கள் பிக் பாக்கட் அடிக்கப்பட்டன.. எங்கேயோ படித்தது....Wallet

Sunday, 19 August, 2012

Ra.Ki.Rangarajanum punai peyarkalum, nettil vanthathu

” - ஹம்ஸா’ என்ற பெயரில் நகைச்சுவைக் கட்டுரைகள் எழுதியதும், துரைசாமி என்ற பெயரில் துப்பறியும் கதைகள் எழுதியதும் ரங்கராஜன்தான். அது தவிர, சூர்யா, 'மாலதி', 'முள்றி', 'அவிட்டம்' போன்ற பல புனை பெயர்களில் அவர் நிறைய எழுதியிருக்கிறார். கிருஷ்ணகுமார் என்ற புனைபெயரில் ”கோஸ்ட்”, ”எனக்குள் ஒரு ஆவி” போன்ற தலைப்புகளில் இவர் எழுதிய அமானுஷ்யத் திகில் தொடர்கள் அக்காலவாசகர்களால் மறக்க இயலாதவை. மொழிபெயர்ப்பிலும் சாதனை படைத்திருக்கிறார். புகழ்பெற்ற நாவலான பாபிலானை பட்டாம்பூச்சி என்றும், இன்விசிபிள் மேனை கண்ணுக்குத் தெரியாதவன் காதலிக்கிறான் என்றும் தொடர்களாக எழுதியிருக்கிறார். காதல் மேல் ஆணை (டேனியல் ஸ்டீல்), லாரா (ஷிட்னி செல்டன்), ஜெனிபர் போன்றவை வாசகர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றவை. ஷிட்னி செல்டன் தமிழகத்தில் பலருக்குத் தெரியக் காரணம் ரா.கி.ரங்கராஜன்தான் என்று சொன்னால் அது மிகையில்லை. - “
பத்திரிகையாளராக, ‘சக்தி’யில் பணியைத் தொடங்கி, தம் வித்தக எழுத்துகளால், தமிழ்மக்களின் இதயம் நிறைந்த ரா.கி.ரங்கராஜன், தம் பெயரை மறைத்துக் கொண்டு, தம் முகத்தையும் வெளிப்படுத்தாமல், 42 ஆண்டுகளாக, குமுதம் ஆசிரியர் குழுவில் பல்வேறு பொறுப்புகளில் சிறப்பாகப் பணி ஆற்றியவர். அதில் இருந்து ஓய்வு பெற்ற பின்னரும், எழுத்தின் மேல் கொண்ட தணியாத காதலால், எழுதுவது எப்படி? என்று, இளம் எழுத்தாளர்களுக்கு, எழுத்துக்கலையைக் கற்றுத்தர நூல் எழுதியவர்.
குமுதத்தின் புகழ்பெற்ற அரசு பதில்களில், நடுநாயகமான ‘ர’ என்ற எழுத்துக்குச் சொந்தக்காரர்தான், நம்முடைய ரங்கராஜன். குடந்தையில் பிறந்து, தமிழ் அன்னையின் மீது தணியாத பற்றுக்கொண்டு, காலமெல்லாம் எழுதிக் குவித்தவர். இவருடைய எழுத்து ஓவியத்தில் புகழ் பெற்றவை திரைப்படமாக வந்த இது சத்தியம், சுமைதாங்கி, போன்ற காலத்தை வென்ற காவியங்கள் ஆகும்.

பேரறிஞர் அண்ணா அவர்கள், அடையாறு புற்று நோய் மருத்துவமனையில், தாம் இறப்பதற்கு முன்பு கடைசியாக வாசித்துக் கொண்டு இருந்த, தி மாஸ்டர் கிறிஸ்டியன் என்ற மேரி கோரெல்லியின் நாவலை மொழிபெயர்த்து, அண்ணாவின் மறைவுக்கு அஞ்சலி செலுத்துகின்ற வகையில், குமுதம் இதழில் வெளியிட்டார். உலகப் புகழ் பெற்ற குத்துச்சண்டை வீரர் முகமது அலியின் வாழ்க்கை வரலாறையும் எழுதினார். இளைஞர்களுக்கு வழிகாட்டியாக, தன்னம்பிக்கை ஊட்டுகின்ற வகையில் எழுதி வந்தார். அவரது எழுத்தில் இழையோடும் நகைச்சுவை, வயிறு குலுங்க வைக்கும். 

தம் பெயரை மறைத்துக் கொள்வதற்காக, மோகினி, சுந்தர பாகவதர், சூர்யா, ஹம்சா, துரைச்சாமி, கிருஷ்ணகுமார், மாதவி, வினோத் என்று அவ்வப்போது தோன்றிய பெயர்களில் எல்லாம் தன் படைப்புகளை வெளியிட்ட ரங்கராஜன், தம்முடைய உண்மை முகத்தையும், பெயரையும் வெளிப்படுத்தியதே இல்லை. இப்படி புகழை விரும்பாத, ஒரு பற்று அற்ற ஞானியாக வாழ்ந்து மறைந்து உள்ள ரா.கி.ரங்கராஜன், தமிழ் எழுத்து உலகை அரை நூற்றாண்டுக் காலத்துக்கு மேல் அழகுபடுத்திய பெருமகன் ஆவார். 

அன்னாரது மறைவு, தமிழ் எழுத்து உலகத்துக்குப் பேரிழப்பு. அவர் உடலால் மறைந்தாலும், தம்முடைய எழுத்துகளால் தமிழ் அவர் ஏற்றி வைத்த இலக்கியச்சுடர் என்றும் அணையாது. 

Saturday, 18 August, 2012

enna nadakkuthu என்ன நடக்குது: எழுத்தாளர் ரா.கி.ரங்கராஜன் அவர்கள் மரணம.

enna nadakkuthu என்ன நடக்குது: எழுத்தாளர் ரா.கி.ரங்கராஜன் அவர்கள் மரணம.

enna nadakkuthu என்ன நடக்குது: எழுத்தாளர் ரா.கி.ரங்கராஜன் அவர்கள் மரணம.

enna nadakkuthu என்ன நடக்குது: எழுத்தாளர் ரா.கி.ரங்கராஜன் அவர்கள் மரணம.: எழுத்தாளர் ரா.கி.ரங்கராஜன் அவர்கள் மரணம. அவரின் குடும்பத்தாருக்கு என் ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். குமுதத்தில் அ ண்ணாமல...

எழுத்தாளர் ரா.கி.ரங்கராஜன் அவர்கள் மரணம.


எழுத்தாளர் ரா.கி.ரங்கராஜன் அவர்கள் மரணம. அவரின் குடும்பத்தாருக்கு என் ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
குமுதத்தில் அ ண்ணாமலை ர ங்கராஜன் சு ந்தரேசன் அரசு பதில்கள் மிகவும் அருமையாக இருக்கும். 
ரா.கி. ரங்கராஜன் எழுதிய குடும்ப தொடர் கதைகள் சுவாரசியமாக இருக்கும்.Tuesday, 14 August, 2012

enna nadakkuthu என்ன நடக்குது: இந்திய சுதந்திரம் அடைந்து 65 ஆண்டுகள். சும்மா கிடை...

enna nadakkuthu என்ன நடக்குது: இந்திய சுதந்திரம் அடைந்து 65 ஆண்டுகள். சும்மா கிடை...: இந்திய சுதந்திரம் அடைந்து 65 ஆண்டுகள். சும்மா கிடைக்கவில்லை சுதந்திரம்.பல தியாகிகளின் உழைப்பு! தியாகம் .சிறை சென்று கொடுமைகளை அனுபவித்தா...
இந்திய சுதந்திரம் அடைந்து 65 ஆண்டுகள். சும்மா கிடைக்கவில்லை சுதந்திரம்.பல தியாகிகளின் உழைப்பு! தியாகம்.சிறை சென்று கொடுமைகளை அனுபவித்தார்கள்.அதன் பலனை இன்று நாம் அனுபவிக்கிறோம்!!! தமிழ்நாடு சாதி ஒழிப்பிலும் ஒடுக்கப்பட்ட மக்களின் முன்னேற்றத்திலும் முன்னணி மாநிலம்.
 சென்னை மாநகராட்சியின் ஏழாவது மண்டலமான அம்பத்தூரில், மண்டல தலைவர் ஜோசப் சாமுவேல், தேசிய கோடியை ஏற்றுகிறார்.அருகில் மண்டல அலுவலர், சிவஞானம் மற்றும் அலுவலக ஊழியர்கள்,பள்ளி சிறுவர்கள் மற்றும் பொதுமக்கள்.ஈ.வெ.ராமசாமி நாயகர்,    "பெரியார்"  என்று அழைக்கப்பட்டது அவர் பிறந்த  ஜாதியால் அல்ல. 
ஜாதி ஆதிக்கத்தை ஒழிக்கவும் ஒடுக்கப்பட்டவர்கள், வறுமையிலிருந்து விடுபட்டு பொருளாதார மேம்பாடு அடைய வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்திற்காக பாடுபட்டதால்தான்.
அந்த நோக்கத்தை "கக்கன்"அவர்களை அமைச்சர் ஆக்கியதன் மூலம் காமராஜர் நிறைவேற்றினார்.
கலைஞர் தாழ்த்தப்பட்ட மக்களின் பிரதிநிதிகளின் சார்பாக உயர்ந்த பதவிகளை அவர்களுக்கு அளித்து கவுரவ படுத்தினார்.அதன் ஒரு துளியே, இங்கேயே பிறந்து,ராமசாமி உயர்நிலை பள்ளியில் படித்த ஒரு இளைஞனை கழக நகர செயலாளராக பதவியில் அமர வைத்தார். அந்த இளைஞர்,ஜோசப் சாமுவேல், இன்று 7 வது மண்டலமான அம்பத்தூரின் தலைவராக நகராட்சி கட்டிடத்தில் தேசிய கொடி  ஏற்றியது உண்மையான இந்திய சுதந்திரத்தின் பலன் ஆகும்.  
Monday, 6 August, 2012

சென்னை மாநகராட்சியின் 7-வது மண்டலம்-அம்பத்தூர் மண்டல மாதாந்திர கூட்டம்:


அம்பத்தூர் (7-வது மண்டலம்) மாதாந்திர கூட்டம் 30.07.2012,மண்டல தலைவர் ஜோசப் சாமுவேல் தலைமையில் நடைபெற்றது.மாமன்ற உறுப்பினர்கள் நீலகண்டன், ராஜேந்திரன் என்கிற சு.ரவி, தமிழ்செல்வன்,
ஆகியோர் கலந்துகொண்டனர்.
79 -வது வார்டு ராம்நகர் --பூங்கா pபராமரிப்புக்காக                                           5.20
      லெனின் நகர் பூங்கா சுற்று சுவர் -பராமரிப்புக்கு                                         7.25
80  பாரதி நகர் பூங்கா பராமரிப்புக்கு                                                                          1.73
81 கிருஷ்ணாபுரம்  "        "                                                                                                 5.09
91 முகப்பேர் மேற்கு "    "                                                                                                  8.16
     முகப்பேர் ஏரி ஸ்கீம் அபிவிருத்திக்காக                                                           7.29
88 மில்லினம் பார்க், சாலை,நாற்காலி செய்யும் பணிக்காக                       8.58
89 கோல்டன் காலனி சுவர் கடிகாரம் மற்றும் ஆண்டு பராமரிப்பு            1.87
93 ஜெ.ஜெ. நகர் கிழக்கு 1 -வது ப்ளாக்கில் விளையாட்டு பொருள்கள்,குடிநீர் 
     வசதி செய்யும் பணிக்கு                                                                                                    2.58 
ஆகியவற்றிற்கு 24.8.2012 அன்று டெண்டர் விடப்படுகிறது, என்று மண்டல தலைவர்  ஜோசப் சாமுவேல் கூறினார்.   

Saturday, 4 August, 2012

enna nadakkuthu என்ன நடக்குது: கவிஞர் ஜெயந்திகுமார் சாலைவிபத்தில் பலி

enna nadakkuthu என்ன நடக்குது: கவிஞர் ஜெயந்திகுமார் சாலைவிபத்தில் பலி: கவிஞர் ஜெயந்திகுமார் சாலைவிபத்தில் பலி  கவிஞர் ஜெயந்திகுமார் 03-08-2012 இரவு 8.30 மணியளவில் சாலைவிபத்தில் பலிய...

கவிஞர் ஜெயந்திகுமார் சாலைவிபத்தில் பலிகவிஞர் ஜெயந்திகுமார் சாலைவிபத்தில் பலி

 கவிஞர் ஜெயந்திகுமார் 03-08-2012 இரவு 8.30 மணியளவில் சாலைவிபத்தில் பலியானார்.
உடலளவில் மரணம் பிரித்தாலும் எம் உள்ளத்தை விட்டு எவர் பிரிப்பார்?

thanks to south indian crime point and Mr.Yuganesan,Editor.