Monday 24 October, 2011

விடிந்தால் தீபாவளி!

விடிந்தால் தீபாவளி!கை(பை)யில் சுத்தமாக காசில்லை.கோவையில் குண்டு வெடித்ததில் இருந்து இதே நிலைமை.மில்லில் வேலை செய்யும் நண்பர்கள்  நிலைமை அதை விட மோசம்.இன்னும் போனஸ் பிரச்சினை தீர்ந்தபாடில்லை.வீட்டிலிருந்து போன்.தயக்கமாகவே ஆன் செய்து பேசினேன்."அப்பா, உனக்காக வெள்ளிங்கிரி அங்கிள் காத்துக்கிட்டிருக்காரு.பேசுங்க." ஹலோ! குமாரு வீட்டுக்கு வா.நிறைய விசயம் பேசணும்"."டேய்! எப்படா துபாயிலிருந்து வந்த! அங்கேயே இரு வந்துர்றேன்!" 14  வருடங்கள் முன்பு ஊரை விட்டு சென்றவன் வந்திருக்கிறான்.இனிய நண்பன்.வெள்ளந்தியானவன்.யாரும் கிண்டல் செய்து பேசினாலும் சீரியசாக பதில் சொல்லிக்கொண்டிருப்பான்.வீட்டிற்கு வந்ததும் கட்டிப்பிடித்துகொண்டவனின் கண்களில் நீர் வழிந்தது."என்னடா எப்படி இருக்கே!" ரொம்ப நல்ல இருக்கேன் குமாரு!குழந்தைங்க அடையாளமே தெரியல!" "டே! நீ மாறவே இல்ல! வேலையெல்லாம் எப்படி? கலியாணம்?"ஆமாம் இதெல்லாம் என்ன?" ஸ்வீட் பாக்ஸ்,பட்டாசு,துணி மணிகள் அடுக்கி வைத்திருந்தது.
"அன்னைக்கு மட்டும் நீ எனக்கு பாஸ்போர்ட் எடுத்து வெளிநாட்டுக்கு போக பணம் தரலேன்னா என் வாழ்க்கையே பால்காரனாவே முடிந்திருக்கும்.உன்ன என் வாழ் நாளில் மறக்கவே மாட்டேன்! இந்த பணத்தையும் இந்த பரிசுகளையும் எடுத்துக்கணும்.அப்போதான் எனக்கு சந்தோசம்.வேண்டாம்னு மட்டும் சொல்லாதே!"
அதற்குள் மற்றொரு நண்பனும் வந்து சேர்ந்தான்.இவன் அமெரிக்கவாசி.இருவரும் சேர்ந்து எனது நெடு நாள் கொள்கையை உடைத்துவிட்டார்கள்.பிறகென்ன! கே.ஜி.தியேடரில் அன்றிரவு ஒரே ரகளைதான்.திரும்பி வந்ததும் பட்டாசு கொளுத்தி அக்கம்பக்கத்துக்காரர்களின் தூக்கத்தை கெடுத்து எழுப்பினோம்.