Thursday 12 August, 2010

ஓடிப் போனவள்

 பால்காரியின் குரல் வழக்கத்தை விட அதிகமாக இருக்கவே வெளியில் வந்து பார்த்தேன். தெருவின் நடுவில் கூட்டமாக இருந்தது. பால்காரிதான் எங்களுக்கு ஏரியா செய்தியாளர். ஒவ்வொரு வீட்டிற்கும் பாலோடு வம்புகளையும் சேர்த்து ஊற்றிவிடுவாள்.
அயல்நாட்டு வங்கி அதிகாரியின் வீட்டின் முன்னால் போலீஸ் ஜீப் நின்றிருந்தது. அவருடைய மகன் ஓடி வந்து "அங்கிள்" அப்பா உங்களை கூப்பிடுகிறார் என்றான். விசாரிக்க வந்த சப் -இன்ஸ்பெக்டர் என்னைப்பார்த்ததும் சல்யூட் அடித்தார். இவருடைய பெண்ணை காணவில்லை என்றும் எதிர் வீட்டுப்பையனும் அவனுடைய பெற்றோரும்தான் காரணம் என்று புகார் கொடுத்திருக்கிறார். இரு தரப்பினருமே எனக்கு நன்கு அறிமுகமானவர்கள். எஸ்.ஐ.யை, புகாரை பதிவு செய்ய வேண்டாம் சொல்லிவிட்டு இருவரையும் என்னுடைய வீட்டிற்கு அழைத்து வந்தேன். ஜீப் சென்றுவிட்டது. வங்கி அதிகாரியின் பெண்ணிற்கு திருமண ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கின்ற நேரத்தில் அவர் மனம் படும் வேதனையை என்னால் உணர முடிகிறது.
ஒரு வாரம் வரை பொறுமையாக இருப்போம் என்று இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தி அனுப்பிவிட்டு பையனையும் பெண்ணையும் தேடும் பணியை முடுக்கிவிட்டேன்.இரண்டே நாட்களில் இருவரும் பெங்களூரில் இருப்பதை கண்டுபிடித்து தக்க ஆட்களின் மூலம் கோவைக்கு கொண்டு வரப்பட்டார்கள். இருவரையும் தனித்தனியாக விசாரித்ததில் வெளி வந்த செய்தி அதிர்ச்சியானது. பெண்ணிற்கு ஏற்பாடு செய்த பையனை பிடிக்கவில்லை. அப்பாவிடம் எடுத்து கூறியும் கேட்காததால் அம்மாவும் தனக்காக பேசவில்லை என்ற கோபத்தில் பெங்களூரில் உள்ள தோழியின் பெற்றோரிடம் போனில் தகவல் சொல்லிவிட்டு எதிர் வீட்டு பையனுடன் கிளம்பிவிட்டாள். தனக்கு பிடிகாத பையனை திருமணம் செய்து வைக்கிறார்கள். என்பது தான் பெண்ணின் புகார். சரி கூடச்சென்ற பையன்? எட்டு வயது சிறுவன் அவன். வங்கி நண்பரை அழைத்து புத்தி மதி கூறி அனுப்பினேன்.

இடுகையிட்டது thamizhan நேரம் 10:25 am இதை மின்னஞ்சல் செய்க BlogThis! Twitter இல் பகிர் Facebook இல் பகிர் Google Buzz க்கு பகிர்க 0 கருத்துரைகள்:



கருத்துரையிடுக







பழைய இடுகைகள் முகப்பு

இதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom) பக்கங்கள்

முகப்பு

ஒரு வாரம் வரை பொறுமையாக இருப்போம் என்று இரு தரப்பி...

வலைப்பதிவு காப்பகம்

▼ 2010 (2)

▼ August (1)

ஒரு வாரம் வரை பொறுமையாக இருப்போம் என்று இரு தரப்பி...

► July (1)

குஞ்சு மிதித்த கோழிகள்

என்னைப் பற்றி

thamizhan

எனது முழு சுயவிவரத்தைக் காண்க











Simpleடெம்ப்ளேட் உருவாக்கியதுJosh Peterson. இயக்குவது Blogger.