Monday 9 April, 2012

அம்பத்தூர் சிரிப்பானந்தாவின் நிகழ்ச்சியில் விகடன் ஆசிரியர்!
"ஓஷோ" பிரபலமாக தொடங்கிய நேரம். அவருடைய சீடர்களுடன் "கேம்ப்"ஒன்றிற்கு சென்றேன்.கூடியிருந்தவர்கள் சிரிப்புன்னா சிரிப்பு அப்படி சிரித்துக்கொண்டிருந்தார்கள். ஒரு அளவிற்கு மேல் என்னாலும் சிரிப்பை அடக்க முடியவில்லை. இடைவெளியில் சாப்பிட்டு விட்டு சிரிப்பை தொடர்ந்தோம்.ஒரு நாள் சோகம்(அழுகை),ஒருநாள் கோபம்,(கண்டபடி திட்டுதல்) என்று ஒவ்வொரு நாளும் இது தொடர்ந்தது.
பல நேரங்களில் அடக்கி வைக்கப்பட்ட நமது பல்வேறு உணர்ச்சிகள் இதன் மூலம் வெளிப்படுகிறது.
இந்த கேம்பிற்கு பின் மனம் லேசானது மட்டுமல்ல.புத்துணர்ச்சி பெற்றது.
முப்பது வருடங்களுக்கு பிறகு "சிரிப்பானந்தா"வின் சிரிப்பு யோகாவில் அதே உணர்ச்சியை அனுபவிக்க முடிந்தது.
சிரிப்பு பத்திரிகையின் - ஆனந்த விகடன்--ஆசிரியர் பங்கு பெற்று சி(ற)ரிப்புரை ஆற்றியது சிறப்பு!