Sunday 24 July, 2011

thamizhnaattil therthal 2011

தமிழக சட்டசபை தேர்தல்-2011
 காலை சரியாக 8 மணிக்கு முன்பே எங்களை வர சொன்ன அதிகாரிகள் தாமதமாகவே வந்தனர்.கட்சி முன்னோடிகள்,வாக்காளர் பட்டியல்,வருகையை பதிவு செய்ய ஒன்று,இரண்டு போட்ட தாள்கள்,பென்சில்,பேனா,ரப்பர்,பேடு,அடங்கிய பையை கொடுத்து எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று சிறிய லெக்சர் கொடுத்தனர்.சரியான நேரத்தில் உள்ளே அழைத்தனர்.முகவர்களுக்கு (ஏஜன்ட்ஸ்) ஒரு ஓரமாக பெஞ்ச் போடப்பட்டிருந்தது.எங்க பூத்தில் ஐந்து முகவர்களே இருந்தார்கள்.தேர்தல் பணியாளர்களில் ஒருவர் எங்களை அழைத்து ஒட்டு பதிவு செய்யும் மெசினின் செயல் பாட்டை விளக்கினார். எங்களை மாதிரி ஒட்டு போடச்சொன்னார்.போட்ட பின் சரிபார்த்தோம்!நாங்கள் போட்ட வரிசையில் அந்தந்த சின்னங்களையும் எண்ணிக்கையையும் சரியாக காட்டியது.பிறகு ஜீரோ விற்கு கொணர்ந்து ஒட்டு பதிவை ஆரம்பித்தோம்.வாக்காளர்கள் வர ஆரம்பித்தார்கள்.தேர்தல் பணியாளர்களில் ஒருவர் வருபவரின் அடையாள அட்டை மற்றும் இருப்பிடம் குறித்தவைகளை பரிசோதித்துவிட்டு வரிசை எண்ணுடன் பெயரை படிப்பார்.எங்களிடம் உள்ள வாக்காளர் பட்டியலில் அதை சரிபார்த்து டிக் செய்துவிட்டு "சரி" என்றதும் வாக்காளர் கையில் அடையாள மை இட்டு கையொப்பமோ கட்டை விரல் ரேகை பதிவோ பெற்ற பின் ஒட்டு போட அனுப்புகிறார்கள்.அவர் பொத்தானை அழுத்தியதும் ஒலி வருகிறது.அடுத்தவர் ஒட்டு போட,மறுபடியும் ஒரு கண்ட்ரோல் கீயை அதிகாரி அழுத்தினால் தான் போட முடியும்.(ஒருவரே பல முறை அழுத்தி பல ஓட்டுக்கள் போட முடியாது).காலையில் ஆரம்பித்து மாலை வரை மக்கள் கும்பல் கும்பலாக வந்துகொண்டே இருந்தார்கள்.இந்த தேர்தலில் எழுவது சதவிகிதம் ஒட்டு பதிவானது உண்மையான ஜனநாயகத்தையும் மக்களின் விழிப்புணர்வையும் காட்டுவதாக வியந்தோம்.மாலை சரியான நேரத்திற்கு ஓட்டுபதிவை நிறுத்தி மெஷினை முறைப்படி சீல் செய்தார்கள். விருப்பமின்மை ஓட்டுக்களை இளைஞர்கள் ஆண் பெண் இரு சாராரும் போட்டார்கள். அதற்கு பிறகு ஆண்/பெண் தனித்தனியாக கணக்கிடப்பட்டு (திரு நம்பி/திருநங்கை ஒருவரும் இல்லை)எங்களிடம் கையொப்பம் பெறப்பட்டு,நகலும் அளிக்கப்பட்டது.இந்த தேர்தலில் கள்ள ஒட்டு போடப்பட வாய்ப்பில்லை.செல்லாத ஓட்டுக்களும் இல்லாமல் போனது.தேர்தல் ஆணையரின் அறிவிப்பால் கடைசி நிமிடத்தில் வந்து ஆளும் கட்சி வந்து செய்யும் அட்டகாசங்கள் இல்லாமல் அமைதியாக முடிந்தது மனதிற்கு குதூகலமாக இருந்தது.
கோவையில் நடந்து முடிந்த தி.மு.க.செயற்குழு,பொதுக்குழு கூட்டங்கள்,பேச்சுக்கள் திமுக தொண்டர்கள் மட்டுமல்ல பொது மக்களுக்கும் ஏமாற்றமே!