Monday 24 September, 2012

ஷீரடி சாய் பாபா கோவில்


                                                                                   

ஷிர்டி :

ஷீரடி சாய் பாபா கோவில் சென்னையில் மயிலாப்பூரில் ஒன்றும் கிண்டியில் மெயின் ரோடிலேயும் உள்ளது....முதன்முதலில் சென்னைக்கு அப்பாவுடன் வந்த போது, சென்றது நினைவுள்ளது.
கோவையில் மேட்டுப்பாளையம் ரோடில் அமைந்துள்ளது.
சென்ற டிசம்பர் மாதம் மும்பை சென்றிருந்தபோது, ஷீரடி செல்லலாம் என்று பேச்செடுத்தபோது, இரண்டு விதமாக பயமுறுத்தினார்கள். 
1. ஏழு மணி நேர பஸ்  பயணம், மும்பையிலிருந்து.
2. ஷீரடியில் பக்தர்கள் கூட்டத்தில் தள்ளுமுள்ளு அதிகம்.....உங்களால் சமாளிக்க முடியாது.அதனால் போகாமலே திரும்ப வேண்டியதாயிற்று.
இன்னொன்றும் சொன்னார்கள். திருப்பதிக்கு எப்படி அந்த சாமி நினைத்தால்தான் 
போகமுடியுமோ, அதே போல ஷிர்டி சாய் பாபா நினைத்தால்தான் ஷிர்டி செல்லமுடியும் என்றார்கள்.
இந்த தடவை சொன்னதும்,மகள், ஆன் லைனில் (போக, வர) டிக்கட் புக் பண்ணிவிட்டார்.

காலை 7.15 க்கு கிளம்பிய பஸ் இரண்டு இடங்களில் நிறுத்தப்பட்டது. இட்லி,வடை, ரவாதோசை,மசால் தோசை என்று தென்னிந்திய,தமிழக உணவுகள் கிடைத்தது ,ஆச்சர்யம். மூன்றரை மணிக்கு ஷிர்டி போய் சேர்ந்தோம். கோவிலுக்கே எதிரிலேயே (துளசி பார்க்) ஓட்டலில் ஒய்வு எடுத்துவிட்டு, 4 மணிக்கு தரிசனத்திற்கு சென்றோம்.அதிக கூட்டம் இல்லாததால் அரை மணிக்குள்,தரிசனம் செய்ய முடிந்தது.தள்ளு முள்ளும் இல்லை. ஆந்திரா வகை உணவு கிடைத்தது. நண்பர்களுக்கு பிரசாதமும்   சாய்பாபா உருவ பொம்மைகளும் வாங்கிக்கொண்டேன். சிறிது நேர ஓய்விற்கு பிறகு, 7.30 மணிக்கு கிளம்பிய பஸ் விடியலில் (3.30) மும்பை கொண்டு வந்து சேர்த்தது. வால்வோ ஏ ஸி பஸ்.
இதில் என்ன விசேஷம் என்றால் மயிலாப்பூர் சாய் பாபா கோவிலுக்கு அழைத்து சென்றது,
 அப்பா. 
ஷிர்டி சாய் பாபா கோயிலுக்கு அழைத்து சென்றது 
மகள் .