Tuesday 9 July, 2013

DSCN3361

அம்மா திட்டம் :Assured Maximumservice to Marginal people in All villages --AMMA :
அரசு அலுவலங்களில், அது தாலுக்காபீஸ் என்றழைக்கப்படும் வட்டாட்சியர் அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், குடும்ப அட்டை எனப்படும் ரேஷன் கார்டு வழங்கப்படும், சிவில் சப்பளை அலுவலகத்தில் ஒரு சாதாரண வேலைக்கு ஒரே நாளிலோ அல்லது ஒரு மாதத்திற்குள்ளாகவோ முடித்து விட முடியாத நிலைதான் உள்ளது.கிராம அலுவலர், வருவாய் ஆய்வாளர், தாசில்தார், மாவட்ட ஆட்சியர் ஆகியோர் ஒவ்வொரு திங்கட்கிழமையும் அலுவலகத்தில் கண்டிப்பாக இருக்கவேண்டும். ஆனால் மக்களுக்கு அலைக்கழிப்பு அதிகம்.இதனால் வேலையை முடிக்க லஞ்சம், இல்லை புரோக்கர் மூலமாக செல்ல பணச்செலவு....
இதை தவிர்க்க இந்த துறை அதிகாரிகளை ஒரே இடத்தில் குறிப்பிட்ட நாளை அறிவித்து மனுக்களை பெற்று தீர்வு காண்பதுதான் அம்மா திட்டம்.
இன்று, 9.7.2013, அம்பத்தூர், மகா கணேசா பள்ளியில் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
ஆயிரத்திற்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டு உடனடியாக பரிசீலிக்க தகுந்தவைகள், பரிசீலிக்கப்பட்டு, இன்றே சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.நிகழ்ச்சியில் அமைச்சர் மாதவரம் மூர்த்தி, கலெகடர்,தாசில்தார் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டார்கள்.அம்பத்தூர்  கழக செயலாளர் அலெக்சாண்டர், மாணவரணி மைக்கேல்ராஜ், ஜி.ஆர்.ஸ்ரீனிவாசன் (மாமன்ற உறுப்பினர்) ஆகியோர் சிறப்பாக ஏற்பாடுகள் செய்திருந்தனர்.