Friday 29 October, 2010

anna parri chokkan

ஈரோட்டு பெரியவரால் வெளிச்சத்திற்கு வந்தவர்கள் அதிகம்.அதில் நாத்திகம் பேசி பேச்சுத்திறமையால் பாமர மக்களை கவர்ந்தவர் அண்ணா,புள்ளிவிவரங்களை கூறி பேசும் நாவலர்,மக்களின் பிரச்சனைகளை பேசும் மதியழகன்(அவர் தம்பி தான் கே.எ.கிருஷ்ணசாமி)பார்ப்பனர்களை ஆவேசமாக திட்டும் என்.வி.நடராசன்,சொல்லின் செல்வர்
ஈ வே.கி.சம்பத், இவர்களைத்தான் ஐம்பெரும் தலைவர்கள் என்று அழைப்பார்கள்.அதில் கருணாநிதி இல்லை.
காங்கிரெஸ் எதிர்ப்பு,ரேஷனில் அரிசி கிடைக்காதது,வேலை கிடைக்காதது என்று மக்களின் கோபத்தை அண்ணாவின் பேச்சு ஆட்சியில் அமர்த்தியது.இது அண்ணாவே எதிர்பார்க்காத ஒன்று. ம்ம்ம் இதெல்லாம் பேசி என்ன பயன்.ஈரோடு செல்ல காசில்லாதவர் இன்று ஆசியாவில் குறிப்பிடத்தக்க பணக்காரர்! எப்படி?ஈரோட்டுக்காரர் நிலம் உழைப்பு,அண்ணாவின் மார்கட் தந்திரம்!மு.க.அறுவடை செய்துகொடிருக்கிறார்! ஆனால் ஒன்று நிச்சயமையா! ஒரு அந்நிய மொழியை மைய்யப்படுத்தி(பூச்சாண்டி காட்டி மாணவர்களை போராட்ட களத்தில் இறக்கி ஆட்சியை பிடித்து கோடி கொடியாக சம்பாதிப்பதற்கு வழி வகுத்த அண்ணா தீர்கதரிசி !! ஆனால் அவர் வளர்த்த மகன் பரிமளம் வறுமையில் இறந்துபோனார் என்கிறார்கள் வயித்தெரிச்சல் பிடித்த மக்கள்! அண்ணா நாமம் நல்லா விலை போகுது.

No comments: