Thursday 3 May, 2012

சென்னை மாநகராட்சி 7-வது மண்டலகூட்டங்கள்

சென்னை மாநகராட்சி அதிமுக கையில், ஆனால் 7-வது மண்டலமாகிய, அம்பத்தூர் மண்டல தலைவர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றது, திமுக.
எப்படி?? அதிமுக நண்பர்கள் போட்ட ஓட்டுக்கள்தான். 
இது பழைய கதை!
இப்போ என்னா அதுக்கு? 
மண்டல கூட்டங்கள் நடந்தால் தான் அந்தந்த வார்டு பிரச்சினைகளை பேசி திட்டங்கள் போட்டு, தீர்மானங்கள் இயற்றி மாநராட்சி கூட்டத்தில் வைத்து நிதி ஒதுக்க முடியும். 
 
மண்டலக்கூட்டங்கள் நடக்கலியா? 
அதிமுக 10 கவுன்சிலர்கள் கூட்டத்தை புறக்கணிப்பதால், கூட்டம் நடத்த முடியவில்லை.
கவுன்சிலர்களை கூட்டத்தில் கலந்துகொள்ள கட்டாயப்படுத்த முடியாதாம்.
அப்புறம் எப்புடி ரோடு போடுவாங்க? குப்பை அகற்றுவாங்க?
எங்களுக்கு ஏன்தான் இப்படியெல்லாம் நடக்குதோ?

3 comments:

sankaranarayanan balasubramanian said...

கவர்னர் ஆட்சி மாதிரி அம்பத்தூர் மண்டலத்தில் மண்டல கூட்டத்துக்கு வராத மாமன்ற உறுப்பினர்களை உடனடியாக பதவி நீக்கம் செய்துவிட்டு அந்த பொறுப்புக்களை அந்த மண்டலத்தில் உள்ள பொறுப்புள்ள அதிகாரிகள் அப்பகுதிகளின் முன்னேற்றத்துக்கு பாடு படலாம்.

Unknown said...

kavunsilarkalaiyum neekka mudiyaathu.mandala thalaivaraiyum maaravo irakkavo mudiyaathu.sattam appadi. makkalin thalai ezhuththu pol aakattum.