Wednesday 25 April, 2012

தமிழக   சட்டசபையில் திமுக உறுப்பினர்களுக்கு பேச வாய்ப்பளிக்காததால் அடிக்கடி வெளிநடப்பு செய்தும் புறக்கணித்தும் எதிர்ப்பை காட்டினார்கள். கலைஞர் அவர்கள் மக்கள் மன்றத்தில் எடுத்து கூறலாம் என திட்டமிட்டு தமிழ் நாடு முழுவதும் பொதுக்கூட்டம் நடத்த கட்சியினருக்கு கட்டளை இட்டார். முதல் கட்டமாக சென்னை பெரம்பூரை அடுத்த பெரவள்ளூரில் புதன்கிழமை கலைஞர் தலைமையில் கூட்டம் நடைபெற்றது.
துவக்க உரை ஆற்றிய துரைமுருகன், சட்டசபையில் தாங்கள் படும் பாட்டையும்,ஜனநாயகம் படும் பாட்டையும் சிரிக்க சிரிக்க எடுத்துரைத்தார். தொடர்ந்து பேசிய முக ஸ்டாலின், தான், சேஷாத்திரி என்பவரை மிரட்டி வாங்கியதாக போடப்பட்ட பொய் வழக்கில் தன மகனையும் சேர்த்திருந்தை சுட்டி காட்டி, அது மிக அபாண்டமான பொய்,புழுகின் உச்சம் என்றார். தான் வசித்து வரும் வீடு தன் மகன் உதய நிதியின் கம்பனி வாங்கியது என்றார். அந்த வீட்டு உரிமையாளர் வங்கியில் வாங்கிய கடனை செலுத்தாததால் ஏலத்து வந்தது.அதை செய்தி தாளில் படித்த உதயநிதியின் கம்பனி ஏலத்தில் கலந்து கொடு முறைப்படி வாங்கியது. அந்த ஏலத்தில் நடிகர் கமல ஹாசனும்   கலந்து கொண்டார். 
அதற்காகன  பத்திர பதிவில் கையெழுத்திட்டது அந்த வங்கியின் அதிகாரிதான். 
டான்சி நிலையத்தை, அரசு க்கு சொந்தமான நிலத்தை ஜெயா பப்ளிகேஷன் மூலம் வாங்கி பிறகு சுப்ரீம் கோர்ட் தீர்ப்பின் படி திருப்பி வழங்கிய ஜெயலலிதாவிற்கு என்ன தகுதி இருக்கிறது என கேட்ட ஸ்டாலின்,
இன்னும் நிறைய ஆதாரங்களுடன் பேச இருந்ததாகவும் நேரமின்மை காரணமாக இத்துடன் முடித்துகொள்ளுவதாக கூறி உரையை முடித்தார்.
நிறைவாக பேசிய கலைஞர் அதிமுக வின் அவல ஆட்சியின் அவலங்களை பட்டியிலிட்டபோது பெரும் கை தட்டலும் விசில்களும் பறந்தன.
இதன் தாக்கத்தை  எதிர்வரும் நாடாளு மன்ற தேர்தலில் பார்க்கலாம்.

2 comments:

ராம்ஜி_யாஹூ said...

நன்றி

கலைஞரின் பேச்சை இன்னும் விரிவாக எழுதி இருக்கலாம்
அல்லது அடுத்த பதிவில் எழுதுங்கள்;

Unknown said...

varugaikku nanri!