Thursday 24 November, 2011

அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா!

அரசியலில்  இதெல்லாம் சாதாரணமப்பா!
உள்ளாட்சி தேர்தல்:
 சென்னை மாநராட்சி  மண்டல தலைவர்கள்:
நகராட்சியில் சேர்மன் பதவிக்கு சற்றும் குறைவில்லாத பதவிதான் சென்னை  மண்டல தலைவர் பதவியும்.எல்லா மண்டலங்களிலும் அதிமுகவினரே மெஜாரிட்டியாக இருப்பதால்,எல்லா மண்டலங்களிலும் அவர்களே தலைவர்களாக வருவதில் எந்த வித சந்தேகமும் எழவில்லை.
ஒரு மண்டலத்தில் மட்டும் போட்டி:
ஒரு மண்டலத்தில் மட்டும் போட்டி என்றார்கள்.எந்த மண்டலம் என்று விசாரித்ததில், 7  வது மண்டலமான அம்பத்தூர் என்றார்கள்.15 கவுன்சிலர்கள்   கொண்ட அந்த மண்டலத்தில்,admk 10, dmk  4, காங்-1,. இந்த நிலையில் தி.மு.க.எந்த அடிப்படையில் போட்டிக்கு மனு போடுகிறார்கள் என்று யாரும் சந்தேகப்படவில்லை.பத்து கவுன்சிலர்களின் வோட்டில் அதிமுக அலக்சாண்டர்  வெற்றி உறுதி என்று இருந்தார்கள்.
மேயர் மற்றும் கமிஷனர் முன்னிலையில் ரகசிய வாக்கு பதிவு நடந்தது. 
ஒட்டு எண்ணிக்கையில் திமுகவிற் எட்டு ஓட்டுக்களும் அதிமுகவிற்கு ஏழு ஓட்டுக்களும் பதிவாகியிருந்தது.திமுக கவுன்சிலர் ஜோசப் சாமுவேல் மண்டல தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
அன்றிரவே அம்பத்தூர் அதிமுக நகர செயலாளர் (இவர் எம்.எல்.ஏ வும்,கூட)பதவி பறிக்கப்பட்டு, அலக்சாண்டரிடம் தரப்பட்டது.
உள்கட்சி பூசலால் தி.மு.க. ஒரு மண்டல தலைவர் பதவியை
கைப்பற்றியுள்ளது. 
இதில் பணம் விளையாடியுள்ளது என்கிறார்கள் பொறாமை பிடித்தவர்கள்.

No comments: