Sunday, 9 September 2012

லக்பினா என்ற, இலங்கையிலிருந்து வெளியிடப்படுகிற ஆங்கிலப் பத்திரிகையில் ஹசந்த விஜெநாயகே என்ற ஓவியர், தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவையும் பிரதமர் மன்மோகன் சிங்கையும் இழிவான முறையில் சித்தரித்து கார்ட்டூன்  வரைந்திருக்கிறார். ஜெயலலிதாவைத்தான் என்றில்லை எந்தப் பெண்ணை இப்படி சித்தரித்திருந்தாலும், மன்மோகன் சிங்தான் என்றில்லை, எந்த ஆணை இப்படி சித்தரித்திருந்தாலும் இது அநாகரிகத்தின் உச்சம். அரசியல் நையாண்டி வரைகலையையே அவமானப்படுத்தியிருக்கிறார் விஜேநாயகே.
 மன்மோகன் சிங், ஜெயலலிதா அரசியல் தொடர்பாகக் கடுமையான விமர்சனங்கள் எனக்கு உண்டு. அதற்காக இப்படிப்பட்ட வக்கிரத்தனமான வெளிப்பாடுகளை ஏற்பதற்கில்லை----oru face-book,nanbar
இந்த படத்தையும் செய்தியையும் பார்த்ததும் சரியான கோபம் வந்தது...நண்பர்களுக்கு தெரிவித்துவிட்டு மெயில் அனுப்ப மட்டுமே முடிந்ததது.மும்பையில் இருப்பதால் நேரில் சென்று விவாதிக்க முடியாததில் வருத்தமே! தமிழர்கள் அனைவரும் கண்டனம் தெரிவிக்கவேண்டும்.

Thursday, 6 September 2012

கன்னிப்பயணம் .....தொடர்ச்சி



விமானம் "ஜிவ்"வென்று மேலே எழும்பியது என்பதை அனுபவிப்பது சுகமோ சுகம். அடி வயிற்றில் ஒரு விதமான இம்சை. வலது பக்க கடைசியில் உட்கார்ந்ததால் இறக்கையின் அசைவுகளை பார்க்க முடிந்தது. ஏர்போர்டின் எல்லைக்குள்ளேயே நல்ல உயரத்திற்கு சென்ற விமானத்தை அழகாக இடது பக்கம் வளைத்து இன்னும் மேலே போக வைத்த விமானியின் திறமையை வியந்தேன்!.கழுகின் பார்வையில் சிங்கார சென்னையை பார்த்துகொண்டிருக்கும்போதே விலகி, மேகத்திற்கு மேலே போக ஆரம்பித்தது.சில நொடிகளில், மேக கூட்டங்கள் கீழே!கண்ணுக்கெட்டிய தூரம் வரை காளான்கள் போல, கொத்து கொத்தாக, வெண் மேகங்கள்.
ஒரே சீராக பறக்க ஆரம்பித்ததும், சீட் பெல்டை விடுவித்துக்கொள்ளலாம் என்ற அறிவிப்பிற்காகவே காத்திருந்தது போல் ரெஸ்ட் ரூமை  நோக்கி படையெடுத்தார்கள்,மக்கள். பணிப்பெண்கள், தண்ணீர் பாட்டில்கள்,பேப்பர் விநியோகித்தார்கள். பிறகு வரிசையாக சாப்பாடு (வீட்டில் சாப்பிடலையா)ஸ்நாக்ஸ்,காபி,டீ,சப்ளை ....மறுபடியும் ஒரு அறிவிப்பு....செல்போன், எலக்ட்ரானிக் சாதனங்களை அணைக்கசொல்லி. சீட் பெல்டை அணியவும்.திடீரென வெளியில் ஒரே வெண்மை. மேக கூட்டத்தினுள் விமானம்.சட்டென இறங்கியது விமானம்.இப்போது
மழை மேகங்கள் வேகமாக எதிர் திசையில்...இப்போது விமானம் இன்னும் த்த
கீழே தாழ்ந்தது. என்ன ஒரு அற்புதமான அனுபவம்.
நகரத்தின் உயரமான கட்டிடங்கள்,மழை ஓடிக்கொண்டிருக்கும் கால்வாய்களும், தெரிய ஆரம்பிக்கும்போதே பக்கத்தில் ஏழு எட்டு விமானங்கள்!ஆமாம்,விமானம் ஓடுபாதையில் பறந்து, மெதுவாக தரையை தொட்டு ஓ..................................டி நின்றது.  மகளை காணும் சந்தோஷத்தில் நான்!!!
,

 

கன்னிப்பயணம் :

  
கன்னிப்பயணம் :
மகளிடமிருந்து போன். "அப்பா, இவர் பதினைந்து நாட்கள் ஆபீஸ் வேலையாக  வெளிநாடு செல்கிறார். நீயோ,அம்மாவோ வந்தால் நல்லது".
"அம்மாவிடம் பேசு" போனை என் மனைவியிடம் கொடுக்க "உங்கப்பாவுக்கு ஹார்ட் ப்ராப்ளம்.உணவெல்லாம் தயார் செய்துகொடுக்க நான் இருந்தால்தான் முடியும். இங்கே உன் தம்பி தங்கைகளை தனியாக விட்டுவிட்டு வருவது கஷ்டம். இரவு சொல்லுகிறேன்". போனை வாங்கி "நான் வர்றேம்மா"நீ கவலைப்படாதே"
என்றேன்.
அடுத்த நாளே (போக- வர) விமான டிக்கட் மெயிலில் வந்தது. 
"ஏம்ப்பா, ஹார்ட் பேஷன்ட் விமானத்தில் போகலாமா!" பீதியை கிளப்பியது, மகன்.
எதற்கு சந்தேகம்! நண்பருக்கும், டாக்டருக்கும் போனை போட்டு கேட்டதில் ஒகே சொன்னார்கள். எப்போதும்போல் மாத்திரைகள் (கை)பையில் இருக்கட்டும் என்றார்கள். மகளுக்கு, வருவதை போனில் உறுதி செய்தேன்.
மதியம் இரண்டரை மணி பிளைட்டிற்கு, 11.30 க்கே கால் டாக்சி வந்து விட்டது."ஏர்போர்டில் சாப்பிடுங்க. அதற்கப்புறம் 2 மணி நேரம் உள்ளது" என்று ஒரு  பொட்டலத்தை பையில் திணித்தாள் மனைவி.12.30க்கெல்லாம் விமான நிலையத்தை அடைந்தோம். உடன்  மகனும், இன்னொரு மகளும். என்கொயரியில்,விமானம் சரியான நேரத்திற்கு புறப்படுமா என்று விசாரித்து
விட்டு, பையில் இருந்த உணவை காலி செய்தேன்! 1.30 மணிக்கு செக்-இன்.அவர்களை அனுப்பிவிட்டு உள்ளே நடக்க ஆரம்பித்தேன். நடை     .    
நீண்டது. மூச்சு வாங்கியது. நின்று நின்று,நடந்து, செக்குரிட்டி செக் முடிந்து அமர்ந்தேன்.மறுபடியும் நீண்ட காரிடாரில் நடந்து உள்ளே சென்றால், ஆம்னி பஸ் போல இருக்கைகள். புஷ் பாக் இல்லை.மிதமான குளிர் காற்று.சரியான நேரத்தில் கேப்டன் பிரதிப்பின் 
அறிவிப்புடனும், ஏர் ஹோஸ்டஸ் (நேபாலியோ(!)-நல்ல உயரம்)சின் அவசர கால அறிவிப்புகளுடன்  விமானம் நகர ஆரம்பித்தது.(டாக்சியிங்). ரன் வேயின் முடிவு எல்லை வரை சென்று திரும்பி நின்றது.(மூச்சு வாங்குகிறதோ!).எல்லா என்ஜின்களும் இயக்கப்பட, சற்று தூரம் வேகமாக ஓடி, "ஜிவ்" வென்று மேலே எழும்பியது.
(தொடரும்) 
 

Friday, 24 August 2012

enna nadakkuthu என்ன நடக்குது: அம்பத்தூரில் டெசோ மாநாட்டு தீர்மான விளக்க கூட்டம்...

enna nadakkuthu என்ன நடக்குது:
அம்பத்தூரில் டெசோ மாநாட்டு தீர்மான விளக்க கூட்டம்...
: அம்பத்தூரில் டெசோ மாநாட்டு தீர்மான விளக்க கூட்டம் : டெசோ மாநாட்டிற்கு மத்திய அரசு அனுமதி அளித்தாலும், மாநில அரசு கொடுத்த தொல்லைகளை குற...

அம்பத்தூரில் டெசோ மாநாட்டு தீர்மான விளக்க கூட்டம் :டெசோ மாநாட்டிற்கு மத்திய அரசு அனுமதி அளித்தாலும், மாநில அரசு கொடுத்த தொல்லைகளை குறிப்பிட்ட கலைஞர்,சிறிலங்காவில் தமிழ் அமைப்புகள் ஒற்றுமையாக இருந்திருந்திருந்தால் சுள்ளி கட்டு  போலவும் உடைக்க முடியாமல் இருந்திருக்கும் எனவும்,பிரிந்ததால் சுலபமாக எதிரி வீழ்த்த முடிந்தது  என்று கூறினார்....
முன்னதாக லூகாஸ் டி.வி.எஸ்.சிலிருந்து, பாடி, எஸ்டேட், அம்பத்தூர் ஒ.டி வரை,தாரை தப்பட்டை,மேளம்,செண்டை,என்று வரவேர்வு பலமாக இருந்தது.பொதுக்கூட்டம் மாநாடு போல இருந்தது.வழியெங்கும் மக்கள் இருபுறமும் நின்று  கலைஞரை காண மூன்று மணி நேரம் காத்திருந்தது அந்த காலத்தை நினைவு படுத்தியது.முன்னதாக அம்பத்தூர் நகர தி.மு.கழக செயலாளர்,ஜோசப் சாமுவேல் வரவேற்புரை ஆற்றினார்.ஜெகத்ரட்சகன் ,துரைமுருகன்,டி.ஆர் பாலு,எம்.பி.வில்லிவாக்கம் முன்னாள் சட்ட சபை உறுப்பினர் ப.ரங்கநாதன்,சுந்தரம்,ஆவடி நாசர்,ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

Thursday, 23 August 2012

enna nadakkuthu என்ன நடக்குது: அம்பத்தூரில் கலைஞர் எழுச்சியுரை:

enna nadakkuthu என்ன நடக்குது: அம்பத்தூரில் கலைஞர் எழுச்சியுரை:: அம்பத்தூரில் கலைஞர் எழுச்சியுரை:   நாளை நடக்க இருக்கும் "டெசோ"மாநாட்டு தீர்மான விளக்க கூட்டத்தில் கலைஞர் பங்கேற்க இருக்கிறார் என்பதால் உ...