Friday 5 October, 2012

செருப்ப தலைமாட்டில் வைத்து

கிங்பிஷர் நிறுவனத்திற்கு மனிதாபிமான அடிப்படையில் வங்கிகள் நிதியுதவி: ஊழியர்களுக்கு சம்பளம் கிடைக்குமா?
வெளியூருக்கு செல்ல வேண்டுமென்றால், எனக்கு இனிப்பு சாப்பிடுவது போல.சிறிய வயதிலேயே வெளியூர்களுக்கு செல்ல ஆரம்பித்ததால் பயம் என்பதோ எங்கு தங்குவது என்ன சாப்பிடுவது என்ற பயமோ யோசனையோ கிடையாது.எங்கு என்ன சாப்பிட கிடைக்கிறதோ சாப்பிட்டு விடுவேன். இது பிடிக்கும் இது பிடிக்காது என்றெல்லாம் வரை முறை எல்லாம் கிடையாது. மாமா வீடு,தாத்தா ஊரு என்று தனியாக செல்ல ஆரம்பித்த பழக்கம் வேலையில் சேரும்போது பயனுள்ளதாக இருந்தது. சேல்ஸ் டாக்ஸ் கணக்கு முடிக்க, ஆர்டர் எடுக்க, வசூல் செய்ய என்று எல்லாவற்றிற்கும் என்னை அலுவலகம் முழுமையாக பயன்படுத்தியது. பல பேசும் மொழிகளை கற்றுக்கொள்ள நல்ல வாய்ப்பாக அமைந்தது மட்டுமல்லாமல் எந்த இடத்தில் என்ன கிடைக்கும்/கிடைக்காது என்பது தெரிந்தது.
வெளியூர்களுக்கு செல்லும்போது இயற்கை காட்சிகளை படம் பிடிக்கும் பழக்கம் ஒட்டிக் கொண்டது. அந்த படங்களுக்கு குறிப்புகள் எழுதி பத்திரிகைகளுக்கு அனுப்புவேன்!!!அதன் மூலம் பெரிய அளவில் காசு கிடைக்கவில்லை என்றாலும் நல்ல நண்பர்கள் கிடைத்தார்கள்.வெளியூர்களிலும்,பயணத்திலும் என்று  நண்பர்கள் வட்டம் பெரிதானது.கான்பூர் சென்றபோது முகம் பார்க்கும் கண்ணாடி போல உள்ள ஷூ வாங்கினேன். அந்த காசுக்கு 6 ஷூக்கள் வாங்கியிருக்கலாம். பயணத்தின்போது பெட்டியை நடுவில் வைத்து தூங்குவேன்.
ஆபீஸ் வேலையா எர்ணாகுளம் செல்ல கொச்சி எக்ஸ்ப்ரஸில் பயணம்.நன்றாக தூங்கிவிட்டேன்.வண்டி ஒரு இடத்தில் வெகு நேரமாக நின்றதால்,கீழே இருந்த ஒருவரிடம், இது எந்த இடம் என்றதற்கு, "ஹார்பர்" என்றார். கையில் செய்தி தாளில் எதையோ சுருட்டி எடுத்து சென்றார். அதுதான் கடைசி ஸ்டேஷன்  என்பதால் இறங்கி பெட்டியை எடுத்துகொண்டு இறங்கினேன். ஷூவை எடுக்க கீழே குனிந்து தேடினேன்.காணவில்லை.ஷூவை யார் எடுக்கப்போகிறார்கள் என்று கீழே  போட்டிருந்தேன். அது விலை உயர்ந்தது என தெரிந்தவன் எடுத்து சென்றுவிட்டான், அரை விலைக்கோ கால் விலைக்கோ வித்துவிட...சுரீல் என நினைவுக்கு வந்தது. "ஹார்பர்" என்று சொன்னானே அவன்தான்!!!  
பேன்ட கழட்டி வைத்துவிட்டு வேட்டிய கட்டிக்கிட்டு வெறும் காலுடன் ஸ்டேசன விட்டு வெளியில் வந்தேன்.
இப்போல்லாம் செருப்ப தலைமாட்டில் வைத்து தான் தூங்குவேன்,பயணத்தின் போது ......

No comments: