கோவையில் இருந்தபோது (1978-1994) வார விடுமுறையில் முதல் இரண்டு வாரங்கள், கொடைக்கானல்,ஊட்டி,அடுத்த இரண்டு வாரங்கள் மருதமலை என்று ஜாலியாக நண்பர்களுடன் செல்லுவேன்.ஆனால் ஊட்டி மலை ரயிலில் பயணம் செய்ய பொறுமை இல்லை.பஸ்ஸில்,காரில் போவதை விட இரண்டு
மடங்கு நேரம் ஆகும் என்பதால் மட்டுமல்ல,டூரிஸ்ட் ,குழந்தைகள்,புதிதாக மணமானவர்கள் என்று ஒரு தினுசான கூட்டம்... நமக்கு ஒத்து வராது..சொந்த
வண்டியில் போகும்போது மரத்தில் காய்த்து தொங்கும் பலா,பழங்கள்,பறிப்பது, கலாட்டா செய்து கொண்டு போவது என்று அது ஒரு தனி கோஷ்டி..ஒரு முறை,மகளுக்கு சிறிய வயதானதால், மலை ரயிலில் அழைத்து சென்றேன்!!ரயில்,குகைக்குள் (இருட்டில்)நுழைந்து செல்லும்போது,குழந்தைகள்"ஓ"வென கூச்சலிடுவதும், தேனிலவு ஜோடிகள், டூரிஸ்டுகள் (ஜோடிகள்தான்) கட்டியணைத்துக்கொள்ளுவதும், ரயில் குகையை விட்டு வெளிச்சத்திற்கு வந்ததும், மறுபடியும்,"ஓ"வென கூச்சல்.வித்தியாசமான அனுபவம். என்னை விட என் மகள் மிகவும் ரசித்தாள் . மலை ரயில் மிகவும் மெதுவாக செல்லும், இரங்கி கூடவே நடந்து சென்று மறுபடியும் ஏறிக்கொள்ளலாம்.
யானைகள்,நீர் குடிப்பதை பார்க்கலாம்,சில நேரங்களில்....அது மட்டுமல்ல ஊட்டி நகரம் முழுமையாக சுற்றி வருகிறது இந்த மலை இரயில்.
2012.
இப்போது,மும்பையில் வந்த வேலை முடிந்தது. இங்குள்ள மக்கள் மழைக்காக எந்த வேலையையும் நிறுத்துவதில்லை. சரி பூனா வரை சென்று வரலாம் என்று கிளம்பினேன்.
மும்பையிலிருந்து மூன்று மணி நேர பயணம். மலையும் மலை சார்ந்த இடம்.இயற்கை எழில் கொஞ்சுகிறது.
மலையை குடைந்து ரயில் பாதை அமைந்துள்ளது. ஒன்றல்ல இரண்டல்ல டன்னல்கள். பத்திற்கு மேல் இருக்கும். அதுவும் "லோனா-வாலா " என்ற இடத்தில் ரயில்
செல்லும்போது அழகாக ஏறி இறங்குகிறது, கொள்ளை அழகு..இரண்டு பக்கமும் பச்சை பசேல் என்றும் மழையும்,சூப்பர். மலையும்
சூப்பர்...மின்சார ரயிலில், நின்று கொண்டிருந்தால், பின்னாடி நிற்பவர், முண்டியடித்துக்கொண்டு சீட் பிடிப்பது இல்லை. தனக்கு முன்னதாக வந்தவரை அழைத்து அமர வைக்கும் பண்பு வியக்கவைக்கிறது. அடுத்த இடம் காலியாகும் போது வந்த வரிசைப்படி அடுத்தவர் அமர்கிறார்.
ஆட்டோ, கால் டாக்சி ஓ ட்டுனர்கள்,மீட்டர்படி காசு வாங்கிகொள்ளுகிறார்கள்.
மீதி தரவேண்டியிருந்தால் சரியான சில்லறை தருகிறார்கள். டிப்ஸ்
வாங்குவதை தவிர்க்கிறார்கள். சென்னைய விட பல விதங்களில் எல்லாம் மலிவே! தென்னிந்திய உணவுதான் விலை அதிகம்.இரண்டு இட்லி இருவது ரூபா.பாவ பாஜி --எட்டு ரூபா..அதே ரொட்டி சப்ஜி சாப்பிட்டால் பதினைந்து ரூபாயில் முடித்து விடலாம்.
மின்சார ரயில்தான் மிகவும் வசதி, வேகமான வாகனம்.சார்ஜும் கம்மி....மெதுவாக,வேகமாக என்று இரண்டு விதமான டிராக்குகளில் வேண்டியதை தேர்ந்தெடுக்கலாம்.ஆஸ்பத்திரியில் வேலை செய்யும் கிளீனரின் சம்பளம் மூவாயிரம்..கேட்டதும் வேதனையாயிருந்தது.
மும்பையின் வெஸ்டில் ஏழை,நடுத்தர மக்களும்,ஈஸ்டில்,பணக்காரர்களும்,பெரும் பணக்காரர்களும் இருப்பதாக சொல்லுகிறார்கள்.
தொடர் மழையால்,மும்பை வெறுத்து போய்விட்டது.சென்னை வெயிலுக்கு மனம் ஏங்க ஆரம்பித்து விட்டது,கேசவன் கடை டீயிற்கும்தான்.
No comments:
Post a Comment