Wednesday, 6 March 2013




 ஏழ்மை  ஒழிக்கப்பட வேண்டும் என்பதில் கருத்து வேறுபாடே இருக்க முடியாது.கொடிது கொடிது வறுமை கொடிது....அதனினும் கொடிது இளமையில் வறுமை....ஔவையார்.பெருந்தலைவர் காமராஜர் தமிழக முதல்வராக இருந்த போது,  காரில் ஒரு பொட்டல் வெளியை கடக்கும்போது மழை. ஒரு இடத்தில் ஆடு,மாடு மேய்க்கும் சிறுவர்கள் கூட்டமாக இருந்தனர்.எல்லோருடைய ஆடைகளும் நனைந்திருக்க ஒரு சிறுவனின் உடை மட்டும் நனையாமல் இருப்பதை பார்த்து வியந்து அவனை அழைத்து விசாரித்தார்.கஞ்சி கலயத்தில் உடையை திணித்து தலையில் கவிழ்த்து   வைத்ததால் உடை நனையவில்லை என்றான் அச்சிறுவன்.கலங்கிய தலைவர் இவர்கள் இவ்வளவு புத்திசாலியாக இருக்கிறார்களே! இவர்களை படிக்க வைத்தால் இவர்களும் நாடும் உயர்வடையுமே, இதற்கு என்ன செய்யலாம் என்று அதிகாரிகளுடன் ஆலோசித்து, கொண்டு வந்த திட்டம்தான் மதிய உணவு திட்டம்....(அடுத்தது sslc வரை இலவச கல்வி பிறகு puc வரை நீட்டிக்கப்பட்டது.)எம்ஜியார் அவர்கள் சிறு வயதிலேயே பசியின் கொடுமையை அனுபவித்தவர் ஆதலால் சத்துணவு திட்டத்தை அமல்படுத்தினார்.அதில் ஆதரவற்றோர்,வயதானவர்கள்,கணவன் இல்லாதவர்கள் எல்லோரையும் இணைத்தது
அவர்களுடைய துயரத்தை,பசியை போக்க வழி வகுத்தது.ஆனால் இன்று ஏழை மக்களுக்காக மலிவு விலையில் இட்லி ரூ.1/- க்கும் சாம்பார் சாதம் ரூ.5/-,தயிர் சாதம் ரூ.3/-க்கும் கிடைக்க செய்த முதல்வர் ஜெ.உழைக்கும் மக்களின் ஆதரவையும், அன்பையும் ஆசிகளையும் பெறுவது உறுதி.....

No comments: