Friday, 4 May 2012

அம்மணியும் அணிலும்

அம்மணியும் அணிலும் :
காலையில் குயிலின் குரலை கேட்டு கண்விழிப்போம்.எதிரில் மிகப்பெரிய காலி மனையில், ஏராளமான மரங்கள்.விதவிதமான பறவைகள்.மாலையில் திரும்பி வந்து கூடுகளில் அடையும் இரைச்சல் இனிமை.பலவித குரல்கள்.கூடவே குஞ்சுகளின் கொஞ்சல்கள்!!!! 
நடு இரவில் ஆந்தையின் அட்டகாசம். 
பகலில் கிளியின் குரல்கள் அவைகளை 
தேடவைக்கும்.
அணில்கள் துள்ளி விளையாடுவதே அழகோ அழகு. குயில்கள்  அவ்வளவு எளிதாக கண்ணில் படாது. இதெல்லாம் எங்கோகிராமத்தில் இல்லைங்க.
சென்னையின் மத்தியில்.
இதெல்லாம் போன வருடம்..அந்த காலி மனையை சேட்டு, வீட்டு மனைகளாக்கி விற்றுவிட்டதால், அங்கிருந்த மரங்களை எல்லாம் வெட்டிகொண்டிருக்கும்போது, சில மரங்களையாவது விட்டு வைக்க சொன்னோம்.
ம்ஹும்..
வாங்கியவன் அரசியல்வாதி.ஒரு பிட் இடம் கூட விடாமல் படம் போட்டு விற்று விட்டான். அந்த மரங்களில் இருந்த பறவை கள், அணில்கள் தவித்த தவிப்பு இருக்கிறதே, கொடுமை. அணில் குஞ்சுகள் சிலவற்றை எடுத்து வந்து வளர்த்தோம்.
அம்மணிக்கு இதெல்லாம் அலர்ஜி. ஜன்னலில் வைக்கும் உணவை காகமும், அணிலும் போட்டி போட்டு உண்ணும். ஒரு சமயம் நான் வெளியூர் போயிருந்தபோது, அம்மணி சரியாக ஜன்னலில் உணவு வைக்கவில்லை. அது சமையல் அறைக்குள்ளேயே வர ஆரம்பித்து விட்டது.
அம்மணி போட்ட கூச்சலில் (என்னைத்தான்) வலை போட்டுவிட்டேன் .உணவு வைப்பது தொடர்கிறது.