மும்பை அதிசயங்கள்:
கடந்த முப்பது ஆண்டுகளில் பல முறை அலுவலக வேலைக்காக மும்பை வந்திருக்கிறேன்!எந்த ஒரு முக்கிய இடங்களையும் பார்க்க நேரம் இருக்காது.
ஏர்போர்ட்டுக்கோ, ரயில்வே ஸ்டேஷனுக்கோ பிக் அப் வண்டி வரும், மீட்டிங் முடிந்ததும் அதே போல தி ரும்பிவிடுவோம். உறவினர்கள் வீட்டிற்கு கூட செல்ல நேரம் இருக்காது. இந்த முறை மகளின் அழைப்பின் பேரில் செல்வதால், பார்க்க வேண்டிய இடங்களையும், உறவினர்களின் வீடுகளுக்கு செல்லவேண்டும் என்று திட்டமிட்டிருந்தேன்.
வண்டி "தானே" ஸ்டேஷனை அடைந்ததும் வெளியில் வந்து ஆட்டோ பிடிக்க நீண்ட க்யு.
மும்பையும் மகாராஷ்டிராவும் பிரியும் டோல்கேட்டுவரை ஒரு ஆட்டோ, அதற்கு பிறகு மற்றொரு ஆட்டோ.
இதிலென்ன அதிசயம்!!! ஒரு சாதாரண பயணம்தானே என்று நினைப்பீர்கள்.
ஆச்சர்யம் 1.ஆட்டோக்காரர் மீட்டார் போட்டார். வரவேண்டிய இடத்திற்கு சுற்றி வளைக்காமல் சரி யான வழியில் வந்து மீட்டர் காசை வாங்கி மீதி சில்லரையும் கொடுத்தார்! ௪௫ வருட சென்னைவாசியான எனக்கு இது முதல் ஆச்சரியம்!