Sunday, 9 September 2012

லக்பினா என்ற, இலங்கையிலிருந்து வெளியிடப்படுகிற ஆங்கிலப் பத்திரிகையில் ஹசந்த விஜெநாயகே என்ற ஓவியர், தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவையும் பிரதமர் மன்மோகன் சிங்கையும் இழிவான முறையில் சித்தரித்து கார்ட்டூன்  வரைந்திருக்கிறார். ஜெயலலிதாவைத்தான் என்றில்லை எந்தப் பெண்ணை இப்படி சித்தரித்திருந்தாலும், மன்மோகன் சிங்தான் என்றில்லை, எந்த ஆணை இப்படி சித்தரித்திருந்தாலும் இது அநாகரிகத்தின் உச்சம். அரசியல் நையாண்டி வரைகலையையே அவமானப்படுத்தியிருக்கிறார் விஜேநாயகே.
 மன்மோகன் சிங், ஜெயலலிதா அரசியல் தொடர்பாகக் கடுமையான விமர்சனங்கள் எனக்கு உண்டு. அதற்காக இப்படிப்பட்ட வக்கிரத்தனமான வெளிப்பாடுகளை ஏற்பதற்கில்லை----oru face-book,nanbar
இந்த படத்தையும் செய்தியையும் பார்த்ததும் சரியான கோபம் வந்தது...நண்பர்களுக்கு தெரிவித்துவிட்டு மெயில் அனுப்ப மட்டுமே முடிந்ததது.மும்பையில் இருப்பதால் நேரில் சென்று விவாதிக்க முடியாததில் வருத்தமே! தமிழர்கள் அனைவரும் கண்டனம் தெரிவிக்கவேண்டும்.