திருவள்ளூரும் தி.மு.க.வும்:
தமிழ் நாட்டில் கலைஞர் தலைமையில் ஜனநாயக முற்போக்கு கூட்டணி அமோக வெற்றி பெற்று ஊடகங்களின் கருத்துக்கணிப்பை பொய்யாக்கிவிட்டது. சென்ற முறை 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்ற இந்த கூட்டணியில் இருந்து வெளியேறிய பா.ம.க.,கம்யுனிஸ்ட் கட்சிகளால் பெரிய பாதிப்பு ஏற்படும் என்ற கணக்கை மக்கள் மாற்றிவிட்டார்கள். கூட்டணிக்கணக்கு செல்லாது என்பதை மக்கள் தி,மு,க, கூட்டணிக்கு ஓட்டு போட்டதின் மூலம் நிருபித்து காட்டிவிட்டர்கள். சென்னை, திருபெரும்புதூர் திருவள்ளூர் தொகுதிகளில் வெற்றி பெற்றவர்கள் 25000,31000,19000,33000 என்ற அளவில்தான் அதிக
ஓட்டுக்கள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்கள். திருவள்ளூர் தி.மு.க.கோட்டை என்று இருந்த நிலை இந்த முறை மாறியுள்ளது. தொகுதி சீரமைப்பால் அ.தி.மு.க.ஓட்டு வங்கி அதிகமாக உள்ள தொகுதியாக மாறியுள்ளது, உள்ளங்கை நெல்லிக்கனி போல தெள்ளத்தெளிவாக தெரிகிறது. கூட்டணி ஓட்டுக்களும் சேர்ந்து அ.தி.மு.க.வேட்பாளருக்கு வெற்றி வாய்ப்பை கொடுத்திருக்கிறது. ஊடகங்கள், விலைவாசி, இலங்கைத்
தமிழர் பிரச்சினை, மின்வெட்டு ஆகியவற்றை மையப்படுத்தி பெரும் கூக்குரலிட்டன. ஆனால் மக்கள் மத்தியில் ஒரு பெரும்பான்மையுலள்ள அரசு அமைய வேண்டும் என்பதை நன்றாக உணர்ந்து தி.மு.க.கூட்டணிக்கு
வாக்களித்துள்ளனர். அப்படியானால், திருவள்ளூர் தொகுதியில் ஏன் தோல்வி என்ற கேள்விக்கு பதில்:
தொகுதி சீரமைப்பில் அ.தி.மு.கவும் கூட்டணி கட்சிகளும் அதி அளவிலான வாக்குகளைப் பெற்றன.
2.ஊடகங்களின் தி.மு.க. கூட்டணிக்கு எதிரான பிரச்சாரம்.3.வேட்பாளர், மக்களிடையே மட்டுமல்ல,
கட்சி பிரமுகர்கள், தொண்டர்கள் மத்தியில் அறிமுகம் இல்லாத நிலை. 4.பூந்தமல்லி, ஆவடி போன்ற
பகுதிகளில் இன்னும் அதிகமான வாக்குகள் விழவில்லை.5.மக்கள் ஓட்டிற்கு பணம் எதிர்பார்க்கும் ஒரு சூழ் நிலை. தேர்தல் ஆணையின் கெடுபிடியால் வேட்பாளர் கொடுக்க முடியாத நிலை. இவை எல்லாம் சட்டசபைத்தேர்தலுக்கு வேலை செய்யும் போது கவனத்தில் எடுத்துக்கொண்டால் மறுபடியும் திருவள்ளூர் தி.மு.க.கோட்டை மாறுவது திண்ணம்.
this was written on the outcome of result of last parliment election.
It is applicable for all constituency today for Legislative assembly election-2011.