Tuesday, 18 September 2012

நடு வானில் விமானம் பறந்து கொண்டிருக்கும்போது,

A security personnel stands guard as the Air India's Dreamliner Boeing 787 taxies upon its arrival at the airport in New Delhi காலையில் எழுந்தவுடனே.மகள்,
"அப்பா இப்பவே கொஞ்சம் டிபன் சாப்பிடறியா?"
" பயணத்திற்கு ஒரு மணி நேரம் முன் சாப்பிடறேம்மா!!"

வந்து 15 நாட்கள் ஆகிவிட்டது. மகளுடன் இருந்த நாட்கள் இனிமையானவை. இன்று சென்னைக்கு பயணம்.
உள்நாட்டு பயணமானாலும், ஏர் போர்டில் பண்ணும் அலம்பல் கொஞ்சம் ஓவர்.
ஒரு மணி நேரம் முன்னதாகவே செக்-இன். கொஞ்சம் லேட்டா போனாலும் கதவை  மூடி விடுகிறார்கள்.
ட்ராலியை தள்ளி வந்த மருமகன், இயக்கி காட்டினர்.பெட்டியை தூக்கி அதில் வைத்தார். உள்ளே செல்ல ஆரம்பித்தேன்.பெட்டியை கன்வேயரில் வைத்து டிக்கட்டை கொடுத்தேன்.tag-களை போட்டதும், பத்தாம் நம்பர் கேட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தேன்.
இரண்டு இடங்களில் மெடல் டிடக்டர்,பொருள்களுக்கு ஸ்கான் என்று பயமுறுத்தினார்கள்."கீ,கீ" என கத்தியது,ட்டிடக்டர்.பாக்கட்டில் இருந்த சில்லறை,சாவி ஆகியவைகளை எடுத்து டேபிளில் வைத்ததும்,கத்தலை நிறுத்தியது.
 உடன் நடுத்தர வயதில்,ஒருவர்,"சென்னைக்கா?" என்றார்.
சாதா ரணமாக அறிமுகம் இல்லாதவர்களுடன் யாரும் பேசாத இடம் அது. தயக்கமாக "ஆமாம் " என்றேன்!
"நான் முதல்முறையாக விமானத்தில் செல்கிறேன்!" என்றார்!
"விமானத்தில் அமரும்வரை உங்களுடனேயே இருக்கட்டுமா?"
"சரி"
அறிவிப்பு வந்ததும், நடக்க ஆரம்பித்தோம்
.நீ.......ளமான காரிடாரில் நடந்து திரும்பி ந..........டந்து மூடிய வளைவுக்குள் நுழைந்தோம்.
ஏகப்பட்ட மேக்-அப்புடன் ஒரு  பெண்மணி, டிக்கட்டை வாங்கி சீட் நம்பரை பார்த்து உட்கார வைத்தார்.
"சார் இது பஸ்  தானே!"
" ஆமாம், ஏன் கேட்கிறீர்கள் "
மகன் சொன்னான், "பஸ்சில  போய் ஏணியில ஏறி விமானத்தில் உள்ளே செல்லணும்"னு, அதான் கேட்டேன் "
"இன்னிக்கு அப்படியில்ல, நேரடியா விமானத்தில ஏறிட்டோம்"
 "அப்போ பஸ்- னீங்களே"
இது ஏர்-பஸ்"
"அப்போ நாம்ப பிளேன பாக்க முடியாதா?"
" இப்போ முடியாது இறங்கும்போது பார்க்கலாம்"
" மற்ற விமானங்களை ஜன்னல் வழியாக பாக்கலாம்."

(விமானத்தில் ஏறும்போது கையை காட்டி மகனிடம் விடை பெறலாம் என்று  நினைத்தவர் ஏமாற்றம் அடைந்ததை முகம் காட்டியது.)

அங்கிருந்து வழி அனுப்புபவர்களை பார்க்க முடியாது, என்று விளக்கினேன்.

சென்னை அடையும் வரை அவர் கேட்ட கேள்விகளுக்கு பொறுமையாக பதில் சொல்லிக்கொண்டு வந்தேன்.

அவர் கேட்ட கேள்விகளுள் ஒன்று::.
நடு வானில் விமானம் பறந்து கொண்டிருக்கும்போது,
"இப்போ இஞ்சின் வேலை செய்யலன்னா என்ன ஆகும்?"







Shayad Mere Shaadi Ka Khayal - Tina Munim - Rajesh Khanna - Souten - Old...

Chalte Chalte Mere Ye Geet Yaad Rakna,