கோபமும் தாபமும்::
ஜெர்மன் நாட்டு விமான பயணி, பெட்டிகளை அடுக்கி எடுத்து செல்லும் ஆளிடம் பெட்டியை இப்படி வைக்காதே, அப்படி வை, அதன்மேல் எந்த லக்கேஜையும் போடாதே என்று டார்ச்சர் செய்து கொண்டிருந்தார். ஆனால் பணியாளரோ மிகவும் பொறுமையாக கோவம் கொள்ளாமல்
தன் பணியை செய்து முடித்துவிட்டு திரும்பினார்.
அவரிடம் எப்படி உங்களால் இவ்வளவு பொறுமையாக இருக்க முடிகிறது என்று கேட்டதற்கு," நம் கோவத்தை பயணிகளிடம் காட்ட
கூடாது, வேலையில் காட்ட வேண்டும் என்றார்"
"வேலையிலா? எப்படி?"
"அவர் ஜெர்மனிக்கு போகிறார். அவர் பெட்டியை லண்டனுக்கு அனுப்பிவிட்டேன்" என்று பதில் வந்தது.
---தென்கச்சி சுவாமிநாதன்.
நன்றி:யுகநேசன்.