Thursday, 29 March 2012

ஒரு சாமியார் சம்சாரியான கதை

ஒரு சாமியார் சம்சாரியான கதை:மனிதனுக்கு சிக்கல் வரும்போது ஜாதகம் ஜோசியம் என்பது கடைசி புகலிடமாகிவிட்டது.சர்வ சாதாரணமாக ஐந்து லட்சம் ரூபாய்க்கு காசோலை கொடுத்தவனுடைய 500 ரூபா செக், பணமில்லை என்று திரும்பி வந்து அசிங்கபடுத்திக்கொண்டிருக்கும் நேரம். வியாபாரத்தில் வெறுப்புற்று கோவில் கோவிலாக சுற்றிக் கொண்டிருந்த நேரம், கடையை மனைவி நடத்திக்கொண்டு இருந்தார். 
சாமியார்கள் கடைக்கு வந்தால் நல்லது என்று உபசரிக்கும் நண்பரை தேடி ஒரு இளவயது சாமியார் வந்தார்.கடையில் இருந்த பெண்மணி: "எப்போது சாமியார் ஆனீர்கள்?"
சாமியார்:" மூன்று   வருடங்கள் ஆயிற்று."
பெ::இதனால் என்ன பயன்?
"      என்னை சேர்ந்தவர்கள் (தாய் தந்தை மற்றும் 6  தலைமுறையினர் மோட்சம் பெறுவார்கள்."
"எப்படி இ(ந்த கூட்டத்)தில் சேர்ந்தீர்கள்?"
"நான் அக்ரி காலேஜில் படித்துக்கொண்டிருக்கும்போது பிரசங்கத்தை கேட்டு சேர்ந்தேன்". 
"பெற்றோர்?"
"விவசாயிகள்!"
"எப்படி இவ்வளவு செலவு செய்து இந்த கல்லூரியில் சேர்ந்தீர்கள்?"
"நிலத்தை விற்றுதான்!"
"படிப்பை பாதியில் விட்டுவிட்டு இதில் சேர்ந்து சாமியார் ஆகி விட்டீர்கள்.உங்களுடைய பெற்றோரின் கதி?"
"இறைவன் பார்த்து கொள்ளுவார்"
"நிலத்தை விற்று படிக்க வைத்த பெற்றோரின் கனவை பொய்யாக்கி விட்டு அவர்களின் வாழ்வாதாரத்தையும்   கேள்விக்குறியாக்கிய உங்களுக்கு எப்படி கடவுள் மோட்சத்தை கொடுப்பார்?." அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்"அவர்களை தவிக்க விட்டுவிட்டு அந்த பாவத்தை சுமந்திருக்கும் உங்களுக்கு மோட்சம் கிடைக்கும் என்பது பொய்."நீங்கள் நரகத்திற்கு தான் செல்வீர்கள்."வீட்டிற்கு போயி, அவர்களை காப்பாற்றும் வழியை பாருங்கள்"
அம்மிணி போட்ட போட்டில்,அன்றே, சாமியார் காஷாயத்தை துறந்து சொந்த ஊருக்கு போய்விட்டார்.