புத்தக விற்பனை திருவிழா :
அண்ணா சாலையில் நடக்கும் புத்தக கண்காட்சி சிறிய இடமாக இருப்பதால் நூறு பேர் வந்தாலே நெரிசலாக இருக்கும்.வரும் கூட்டம் வாங்கும் கூட்டம் என்று சொல்ல முடியாது.
பச்சையப்பன் கல்லூரி எதிரில் பள்ளி வளாகம் சரியான தேர்வு!
இந்த வருடம் எல்லா நாட்களிலும் கூட்டம் அலை மோதியதை பார்த்ததில் ஒரு அலாதி மகிழ்ச்சி...கற்றோரை கற்றோரே காமுறுவர்!
நேருக்கு நேர் இடத்தில் மக்கள் உட்கார்ந்து களைப்பாற மிகவும் உதவியது.
கடைசி நாளன்று ஐந்து பேர் மத்தியில் ஒருவர்."சிறு கதை எழுதுவது எப்படி"என்ற கேள்விக்கு விஸ்தாரமாக பதில் சொல்லிக்கொண்டிருந்தார்.
எல்லா ஸ்டால்களிலும் 4,5 பேர் நின்றுகொண்டு புத்தகங்களை படித்துகொண்டு,
மற்றவர்களை உள்ளே வர விடாமல் நன்மை செய்துகொண்டிருந்தார்கள்.
இந்த வருடம் சில ஸ்டால்களில் கிரடிட் கார்டுகளை அனுமதித்ததால் அதிக அளவில் புத்தகங்கள் வாங்க முடிந்தது.
உயிர்மை,கிழக்கு பதிப்பகங்கள் ஸ்டாலில் கூட்டத்தையும், மனுஷ்ய புத்திரன்,பிரசன்னாவையும் பார்க்க முடிந்தது.
புத்தகங்களின் எடை அதிகமாக இருந்ததால் ஆட்டோ பிடிக்க நேர்ந்தாலும் தேடி வந்த புத்தகங்கள் கிடைத்த மகிழ்ச்சிக்கு அளவேது!