தமிழக உள்ளாட்சி தேர்தல்:2011
தமிழக உள்ளாட்சி தேர்தல் ஒரு புதிய எதிர்பார்ப்பை உண்டாக்கியுள்ளது.
1967 வரை எல்லா மாநிலங்களிலும் தனிப்பெரும் கட்சியாக இருந்தகாங்கிரஸ் கட்சி, 1967 இல் நடந்த பொதுதேர்தலில் பலத்த அடி வாங்கி
மிக குறைந்த அளவிலேயே வெற்றி பெற்றது.
இதற்கு முக்கிய காரணம், ரேஷன் கடைகளில் அரிசி போன்ற முக்கிய பொருள்கள் கிடைக்காததே ஆகும்.
விலை வாசியும் சாதாரண மக்களை துன்பப்பட வைத்ததும்,காங்கிரஸ் அரசு எந்த வித நடவடிக்கையும் எடுக்காததும் மற்றொரு காரணம்.
காங்கிரசில் கருத்து வேறுபாடு காரணமாக வெளியேறிய ஈரோட்டு ராமசாமி நாயக்கரும், ராஜகோபாலாசாரியரும் காங்கிரசை அரசுக்கட்டிலில் இருந்து இறக்க முடிவு கட்டினர்.
திராவிட இயக்கத்திலிருந்து வெளியேறிய அண்ணாதுரை திராவிட முன்னேற்ற கழகத்தை ஆரம்பித்து மக்களின் ஆதரவை பெற்றுக்கொண்டிருந்த நேரம்.
ராஜாஜியும் அண்ணாதுரையும் சேர்ந்து தேர்தலில் களம் காண முடிவு எடுத்தனர்.
அப்போது ஆரம்பித்த கூட்டணி அரசியல், சென்ற சட்ட சபை பொது தேர்தல் வரை தொடர்ந்தது.
இந்த கட்சிகளின் கூட்டணி ஆட்சியை பிடிப்பதற்கென்றே அமைக்கப்பட்டது.
கொள்கை(!) ரீதியாக வேறு பட்டிருந்தாலும், ஒரே கூட்டணியில் நின்று பதவி சுகத்தை அனுபவிப்பதற்காக போட்டியிட்டார்கள்.
ஆனால் இன்றைய சூழல் வேறு. காங்கிரசுடன் கூட்டு சேர்ந்த தி.மு.க படு தோல்வி அடைந்து சட்டசபையில் ஒரு குழு என்ற அளவில் குறுகிவிட்டது.
அன்று காங்கிரஸ் தோற்றதற்கும் இன்று காங்கிரஸ்,தி.மு.க.கூட்டணி தோற்றதற்கும் காரணங்கள் வித்தியாசமானது. அன்று
உணவுப்பொருள் தட்டுப்பாடு.விலைவாசி உயர்வு,வேலை இல்லா திண்டாட்டம். இன்று ஊழல்.
பிரதானமாக சொல்லப்படுகிறது. காங்கிரசின் ஊழல் சாமர்த்தியமாக மறைக்கபடுகிறது. தி.மு.க.வின் ஊழல்(!) வேண்டுமென்றே ஊதி பெரிதாக்கப்படுகிறது என்பதே உண்மை.
காங்கிரசுடன் இனியும் சேர்ந்திருந்தால் உள்ள நம்பிக்கையும்(ஓட்டும்)
போய்விடும் என்பதை புரிந்து கொண்ட மு.க. இந்த தேர்தலில் கட்சியின் நிலைமையரிய ஒரு வாய்ப்பாக எடுத்துகொண்டு, கூட்டு இல்லை என்பதை முதலில் அறிவித்தார்.இதன் மூலம், காங்கிரசுக்கும்
ஒரு செக் வைத்துள்ளார்.
எப்படியோ, 44 வருடங்களாக மக்களை ஏமாற்றும் விதமாக அமைந்திருந்த கட்சிகளின் கூட்டணி முடிவுக்கு வந்துள்ளது நல்லதுதான்.
தேர்தல் முடிவுகள் மாற்றத்தை ஏற்படுத்துமா?
No comments:
Post a Comment