enna nadakkuthu என்ன நடக்குது:
அம்பத்தூரில் டெசோ மாநாட்டு தீர்மான விளக்க கூட்டம்...: அம்பத்தூரில் டெசோ மாநாட்டு தீர்மான விளக்க கூட்டம் : டெசோ மாநாட்டிற்கு மத்திய அரசு அனுமதி அளித்தாலும், மாநில அரசு கொடுத்த தொல்லைகளை குற...
Friday, 24 August 2012
அம்பத்தூரில் டெசோ மாநாட்டு தீர்மான விளக்க கூட்டம் :டெசோ மாநாட்டிற்கு மத்திய அரசு அனுமதி அளித்தாலும், மாநில அரசு கொடுத்த தொல்லைகளை குறிப்பிட்ட கலைஞர்,சிறிலங்காவில் தமிழ் அமைப்புகள் ஒற்றுமையாக இருந்திருந்திருந்தால் சுள்ளி கட்டு போலவும் உடைக்க முடியாமல் இருந்திருக்கும் எனவும்,பிரிந்ததால் சுலபமாக எதிரி வீழ்த்த முடிந்தது என்று கூறினார்....
முன்னதாக லூகாஸ் டி.வி.எஸ்.சிலிருந்து, பாடி, எஸ்டேட், அம்பத்தூர் ஒ.டி வரை,தாரை தப்பட்டை,மேளம்,செண்டை,என்று வரவேர்வு பலமாக இருந்தது.பொதுக்கூட்டம் மாநாடு போல இருந்தது.வழியெங்கும் மக்கள் இருபுறமும் நின்று கலைஞரை காண மூன்று மணி நேரம் காத்திருந்தது அந்த காலத்தை நினைவு படுத்தியது.முன்னதாக அம்பத்தூர் நகர தி.மு.கழக செயலாளர்,ஜோசப் சாமுவேல் வரவேற்புரை ஆற்றினார்.ஜெகத்ரட்சகன் ,துரைமுருகன்,டி.ஆர் பாலு,எம்.பி.வில்லிவாக்கம் முன்னாள் சட்ட சபை உறுப்பினர் ப.ரங்கநாதன்,சுந்தரம்,ஆவடி நாசர்,ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
Subscribe to:
Posts (Atom)