விமானம் "ஜிவ்"வென்று மேலே எழும்பியது என்பதை அனுபவிப்பது சுகமோ சுகம். அடி வயிற்றில் ஒரு விதமான இம்சை. வலது பக்க கடைசியில் உட்கார்ந்ததால் இறக்கையின் அசைவுகளை பார்க்க முடிந்தது. ஏர்போர்டின் எல்லைக்குள்ளேயே நல்ல உயரத்திற்கு சென்ற விமானத்தை அழகாக இடது பக்கம் வளைத்து இன்னும் மேலே போக வைத்த விமானியின் திறமையை வியந்தேன்!.கழுகின் பார்வையில் சிங்கார சென்னையை பார்த்துகொண்டிருக்கும்போதே விலகி, மேகத்திற்கு மேலே போக ஆரம்பித்தது.சில நொடிகளில், மேக கூட்டங்கள் கீழே!கண்ணுக்கெட்டிய தூரம் வரை காளான்கள் போல, கொத்து கொத்தாக, வெண் மேகங்கள்.
ஒரே சீராக பறக்க ஆரம்பித்ததும், சீட் பெல்டை விடுவித்துக்கொள்ளலாம் என்ற அறிவிப்பிற்காகவே காத்திருந்தது போல் ரெஸ்ட் ரூமை நோக்கி படையெடுத்தார்கள்,மக்கள். பணிப்பெண்கள், தண்ணீர் பாட்டில்கள்,பேப்பர் விநியோகித்தார்கள். பிறகு வரிசையாக சாப்பாடு (வீட்டில் சாப்பிடலையா)ஸ்நாக்ஸ்,காபி,டீ,சப்ளை ....மறுபடியும் ஒரு அறிவிப்பு....செல்போன், எலக்ட்ரானிக் சாதனங்களை அணைக்கசொல்லி. சீட் பெல்டை அணியவும்.திடீரென வெளியில் ஒரே வெண்மை. மேக கூட்டத்தினுள் விமானம்.சட்டென இறங்கியது விமானம்.இப்போது
மழை மேகங்கள் வேகமாக எதிர் திசையில்...இப்போது விமானம் இன்னும் த்த
கீழே தாழ்ந்தது. என்ன ஒரு அற்புதமான அனுபவம்.
நகரத்தின் உயரமான கட்டிடங்கள்,மழை ஓடிக்கொண்டிருக்கும் கால்வாய்களும், தெரிய ஆரம்பிக்கும்போதே பக்கத்தில் ஏழு எட்டு விமானங்கள்!ஆமாம்,விமானம் ஓடுபாதையில் பறந்து, மெதுவாக தரையை தொட்டு ஓ..................................டி நின்றது. மகளை காணும் சந்தோஷத்தில் நான்!!!
,