Wednesday, 12 September 2012

enna nadakkuthu என்ன நடக்குது: கோவையில் இருந்தபோது (1978-1994) வார விடுமுறையில் ம...

enna nadakkuthu என்ன நடக்குது: கோவையில் இருந்தபோது (1978-1994) வார விடுமுறையில் ம...: கோவையில் இருந்தபோது (1978-1994) வார விடுமுறையில் முதல் இரண்டு வாரங்கள், கொடைக்கானல்,ஊட்டி,அடுத்த இரண்டு வாரங்கள் மருதமலை என்று ஜாலியாக நண்ப...
 

கோவையில் இருந்தபோது (1978-1994) வார விடுமுறையில் முதல் இரண்டு வாரங்கள், கொடைக்கானல்,ஊட்டி,அடுத்த இரண்டு வாரங்கள் மருதமலை என்று ஜாலியாக நண்பர்களுடன் செல்லுவேன்.ஆனால் ஊட்டி மலை ரயிலில் பயணம் செய்ய பொறுமை இல்லை.பஸ்ஸில்,காரில் போவதை விட இரண்டு
 மடங்கு நேரம் ஆகும் என்பதால் மட்டுமல்ல,டூரிஸ்ட் ,குழந்தைகள்,புதிதாக மணமானவர்கள் என்று ஒரு தினுசான கூட்டம்... நமக்கு ஒத்து வராது..சொந்த 
வண்டியில் போகும்போது மரத்தில் காய்த்து தொங்கும் பலா,பழங்கள்,பறிப்பது, கலாட்டா செய்து கொண்டு போவது என்று அது ஒரு தனி கோஷ்டி..ஒரு முறை,மகளுக்கு சிறிய வயதானதால், மலை ரயிலில் அழைத்து சென்றேன்!!ரயில்,குகைக்குள் (இருட்டில்)நுழைந்து செல்லும்போது,குழந்தைகள்"ஓ"வென கூச்சலிடுவதும், தேனிலவு ஜோடிகள், டூரிஸ்டுகள் (ஜோடிகள்தான்) கட்டியணைத்துக்கொள்ளுவதும், ரயில் குகையை விட்டு வெளிச்சத்திற்கு வந்ததும், மறுபடியும்,"ஓ"வென கூச்சல்.வித்தியாசமான அனுபவம். என்னை விட என் மகள் மிகவும் ரசித்தாள் .  மலை ரயில் மிகவும் மெதுவாக செல்லும், இரங்கி கூடவே நடந்து சென்று மறுபடியும் ஏறிக்கொள்ளலாம்.
யானைகள்,நீர் குடிப்பதை பார்க்கலாம்,சில நேரங்களில்....அது மட்டுமல்ல ஊட்டி நகரம் முழுமையாக சுற்றி வருகிறது இந்த மலை இரயில்.
2012.
இப்போது,மும்பையில் வந்த வேலை முடிந்தது. இங்குள்ள மக்கள் மழைக்காக எந்த வேலையையும் நிறுத்துவதில்லை. சரி பூனா வரை சென்று வரலாம் என்று கிளம்பினேன்.
மும்பையிலிருந்து மூன்று மணி நேர பயணம். மலையும் மலை சார்ந்த இடம்.இயற்கை எழில் கொஞ்சுகிறது.
மலையை குடைந்து ரயில் பாதை அமைந்துள்ளது. ஒன்றல்ல இரண்டல்ல டன்னல்கள். பத்திற்கு மேல் இருக்கும். அதுவும் "லோனா-வாலா " என்ற இடத்தில் ரயில்
செல்லும்போது அழகாக ஏறி இறங்குகிறது, கொள்ளை அழகு..இரண்டு பக்கமும் பச்சை பசேல் என்றும் மழையும்,சூப்பர். மலையும்
சூப்பர்...மின்சார ரயிலில், நின்று கொண்டிருந்தால், பின்னாடி நிற்பவர், முண்டியடித்துக்கொண்டு சீட் பிடிப்பது இல்லை. தனக்கு முன்னதாக வந்தவரை அழைத்து அமர வைக்கும் பண்பு வியக்கவைக்கிறது. அடுத்த இடம் காலியாகும் போது  வந்த வரிசைப்படி அடுத்தவர் அமர்கிறார்.
ஆட்டோ, கால் டாக்சி ஓ ட்டுனர்கள்,மீட்டர்படி காசு வாங்கிகொள்ளுகிறார்கள்.

மீதி தரவேண்டியிருந்தால் சரியான சில்லறை தருகிறார்கள். டிப்ஸ்
வாங்குவதை தவிர்க்கிறார்கள். சென்னைய விட பல விதங்களில் எல்லாம் மலிவே! தென்னிந்திய உணவுதான் விலை அதிகம்.இரண்டு இட்லி இருவது ரூபா.பாவ பாஜி --எட்டு ரூபா..அதே ரொட்டி சப்ஜி சாப்பிட்டால் பதினைந்து ரூபாயில் முடித்து விடலாம்.
மின்சார ரயில்தான் மிகவும் வசதி, வேகமான வாகனம்.சார்ஜும் கம்மி....மெதுவாக,வேகமாக என்று இரண்டு விதமான டிராக்குகளில் வேண்டியதை தேர்ந்தெடுக்கலாம்.ஆஸ்பத்திரியில் வேலை செய்யும் கிளீனரின் சம்பளம் மூவாயிரம்..கேட்டதும் வேதனையாயிருந்தது.
மும்பையின் வெஸ்டில் ஏழை,நடுத்தர மக்களும்,ஈஸ்டில்,பணக்காரர்களும்,பெரும் பணக்காரர்களும் இருப்பதாக சொல்லுகிறார்கள்.
 தொடர் மழையால்,மும்பை வெறுத்து போய்விட்டது.சென்னை வெயிலுக்கு மனம் ஏங்க  ஆரம்பித்து விட்டது,கேசவன்  கடை டீயிற்கும்தான்.



 

Tuesday, 11 September 2012

thanks to:::Svaradharaj Sriram

really worth reading this article as we use a lot of mobile phones these days... cid:1.3205252287@web94712.mail.in2.yahoo.com

cid:2.3205252288@web94712.mail.in2.yahoo.com

cid:3.3205252288@web94712.mail.in2.yahoo.com
...



cid:4.3205252288@web94712.mail.in2.yahoo.com


cid:5.3205252288@web94712.mail.in2.yahoo.com

cid:6.3205252288@web94712.mail.in2.yahoo.com

cid:7.3205252288@web94712.mail.in2.yahoo.com

cid:8.3205252288@web94712.mail.in2.yahoo.com

cid:9.3205252288@web94712.mail.in2.yahoo.com


cid:10.3205252288@web94712.mail.in2.yahoo.com


cid:11.3205252288@web94712.mail.in2.yahoo.com

cid:12.3205252288@web94712.mail.in2.yahoo.com

cid:13.3205252288@web94712.mail.in2.yahoo.com

cid:14.3205252288@web94712.mail.in2.yahoo.com

cid:15.3205252288@web94712.mail.in2.yahoo.com

cid:16.3205252288@web94712.mail.in2.yahoo.com
See More





Sunday, 9 September 2012

லக்பினா என்ற, இலங்கையிலிருந்து வெளியிடப்படுகிற ஆங்கிலப் பத்திரிகையில் ஹசந்த விஜெநாயகே என்ற ஓவியர், தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவையும் பிரதமர் மன்மோகன் சிங்கையும் இழிவான முறையில் சித்தரித்து கார்ட்டூன்  வரைந்திருக்கிறார். ஜெயலலிதாவைத்தான் என்றில்லை எந்தப் பெண்ணை இப்படி சித்தரித்திருந்தாலும், மன்மோகன் சிங்தான் என்றில்லை, எந்த ஆணை இப்படி சித்தரித்திருந்தாலும் இது அநாகரிகத்தின் உச்சம். அரசியல் நையாண்டி வரைகலையையே அவமானப்படுத்தியிருக்கிறார் விஜேநாயகே.
 மன்மோகன் சிங், ஜெயலலிதா அரசியல் தொடர்பாகக் கடுமையான விமர்சனங்கள் எனக்கு உண்டு. அதற்காக இப்படிப்பட்ட வக்கிரத்தனமான வெளிப்பாடுகளை ஏற்பதற்கில்லை----oru face-book,nanbar
இந்த படத்தையும் செய்தியையும் பார்த்ததும் சரியான கோபம் வந்தது...நண்பர்களுக்கு தெரிவித்துவிட்டு மெயில் அனுப்ப மட்டுமே முடிந்ததது.மும்பையில் இருப்பதால் நேரில் சென்று விவாதிக்க முடியாததில் வருத்தமே! தமிழர்கள் அனைவரும் கண்டனம் தெரிவிக்கவேண்டும்.

Thursday, 6 September 2012

கன்னிப்பயணம் .....தொடர்ச்சி



விமானம் "ஜிவ்"வென்று மேலே எழும்பியது என்பதை அனுபவிப்பது சுகமோ சுகம். அடி வயிற்றில் ஒரு விதமான இம்சை. வலது பக்க கடைசியில் உட்கார்ந்ததால் இறக்கையின் அசைவுகளை பார்க்க முடிந்தது. ஏர்போர்டின் எல்லைக்குள்ளேயே நல்ல உயரத்திற்கு சென்ற விமானத்தை அழகாக இடது பக்கம் வளைத்து இன்னும் மேலே போக வைத்த விமானியின் திறமையை வியந்தேன்!.கழுகின் பார்வையில் சிங்கார சென்னையை பார்த்துகொண்டிருக்கும்போதே விலகி, மேகத்திற்கு மேலே போக ஆரம்பித்தது.சில நொடிகளில், மேக கூட்டங்கள் கீழே!கண்ணுக்கெட்டிய தூரம் வரை காளான்கள் போல, கொத்து கொத்தாக, வெண் மேகங்கள்.
ஒரே சீராக பறக்க ஆரம்பித்ததும், சீட் பெல்டை விடுவித்துக்கொள்ளலாம் என்ற அறிவிப்பிற்காகவே காத்திருந்தது போல் ரெஸ்ட் ரூமை  நோக்கி படையெடுத்தார்கள்,மக்கள். பணிப்பெண்கள், தண்ணீர் பாட்டில்கள்,பேப்பர் விநியோகித்தார்கள். பிறகு வரிசையாக சாப்பாடு (வீட்டில் சாப்பிடலையா)ஸ்நாக்ஸ்,காபி,டீ,சப்ளை ....மறுபடியும் ஒரு அறிவிப்பு....செல்போன், எலக்ட்ரானிக் சாதனங்களை அணைக்கசொல்லி. சீட் பெல்டை அணியவும்.திடீரென வெளியில் ஒரே வெண்மை. மேக கூட்டத்தினுள் விமானம்.சட்டென இறங்கியது விமானம்.இப்போது
மழை மேகங்கள் வேகமாக எதிர் திசையில்...இப்போது விமானம் இன்னும் த்த
கீழே தாழ்ந்தது. என்ன ஒரு அற்புதமான அனுபவம்.
நகரத்தின் உயரமான கட்டிடங்கள்,மழை ஓடிக்கொண்டிருக்கும் கால்வாய்களும், தெரிய ஆரம்பிக்கும்போதே பக்கத்தில் ஏழு எட்டு விமானங்கள்!ஆமாம்,விமானம் ஓடுபாதையில் பறந்து, மெதுவாக தரையை தொட்டு ஓ..................................டி நின்றது.  மகளை காணும் சந்தோஷத்தில் நான்!!!
,

 

கன்னிப்பயணம் :

  
கன்னிப்பயணம் :
மகளிடமிருந்து போன். "அப்பா, இவர் பதினைந்து நாட்கள் ஆபீஸ் வேலையாக  வெளிநாடு செல்கிறார். நீயோ,அம்மாவோ வந்தால் நல்லது".
"அம்மாவிடம் பேசு" போனை என் மனைவியிடம் கொடுக்க "உங்கப்பாவுக்கு ஹார்ட் ப்ராப்ளம்.உணவெல்லாம் தயார் செய்துகொடுக்க நான் இருந்தால்தான் முடியும். இங்கே உன் தம்பி தங்கைகளை தனியாக விட்டுவிட்டு வருவது கஷ்டம். இரவு சொல்லுகிறேன்". போனை வாங்கி "நான் வர்றேம்மா"நீ கவலைப்படாதே"
என்றேன்.
அடுத்த நாளே (போக- வர) விமான டிக்கட் மெயிலில் வந்தது. 
"ஏம்ப்பா, ஹார்ட் பேஷன்ட் விமானத்தில் போகலாமா!" பீதியை கிளப்பியது, மகன்.
எதற்கு சந்தேகம்! நண்பருக்கும், டாக்டருக்கும் போனை போட்டு கேட்டதில் ஒகே சொன்னார்கள். எப்போதும்போல் மாத்திரைகள் (கை)பையில் இருக்கட்டும் என்றார்கள். மகளுக்கு, வருவதை போனில் உறுதி செய்தேன்.
மதியம் இரண்டரை மணி பிளைட்டிற்கு, 11.30 க்கே கால் டாக்சி வந்து விட்டது."ஏர்போர்டில் சாப்பிடுங்க. அதற்கப்புறம் 2 மணி நேரம் உள்ளது" என்று ஒரு  பொட்டலத்தை பையில் திணித்தாள் மனைவி.12.30க்கெல்லாம் விமான நிலையத்தை அடைந்தோம். உடன்  மகனும், இன்னொரு மகளும். என்கொயரியில்,விமானம் சரியான நேரத்திற்கு புறப்படுமா என்று விசாரித்து
விட்டு, பையில் இருந்த உணவை காலி செய்தேன்! 1.30 மணிக்கு செக்-இன்.அவர்களை அனுப்பிவிட்டு உள்ளே நடக்க ஆரம்பித்தேன். நடை     .    
நீண்டது. மூச்சு வாங்கியது. நின்று நின்று,நடந்து, செக்குரிட்டி செக் முடிந்து அமர்ந்தேன்.மறுபடியும் நீண்ட காரிடாரில் நடந்து உள்ளே சென்றால், ஆம்னி பஸ் போல இருக்கைகள். புஷ் பாக் இல்லை.மிதமான குளிர் காற்று.சரியான நேரத்தில் கேப்டன் பிரதிப்பின் 
அறிவிப்புடனும், ஏர் ஹோஸ்டஸ் (நேபாலியோ(!)-நல்ல உயரம்)சின் அவசர கால அறிவிப்புகளுடன்  விமானம் நகர ஆரம்பித்தது.(டாக்சியிங்). ரன் வேயின் முடிவு எல்லை வரை சென்று திரும்பி நின்றது.(மூச்சு வாங்குகிறதோ!).எல்லா என்ஜின்களும் இயக்கப்பட, சற்று தூரம் வேகமாக ஓடி, "ஜிவ்" வென்று மேலே எழும்பியது.
(தொடரும்)