Thursday, 6 September 2012

கன்னிப்பயணம் :

  
கன்னிப்பயணம் :
மகளிடமிருந்து போன். "அப்பா, இவர் பதினைந்து நாட்கள் ஆபீஸ் வேலையாக  வெளிநாடு செல்கிறார். நீயோ,அம்மாவோ வந்தால் நல்லது".
"அம்மாவிடம் பேசு" போனை என் மனைவியிடம் கொடுக்க "உங்கப்பாவுக்கு ஹார்ட் ப்ராப்ளம்.உணவெல்லாம் தயார் செய்துகொடுக்க நான் இருந்தால்தான் முடியும். இங்கே உன் தம்பி தங்கைகளை தனியாக விட்டுவிட்டு வருவது கஷ்டம். இரவு சொல்லுகிறேன்". போனை வாங்கி "நான் வர்றேம்மா"நீ கவலைப்படாதே"
என்றேன்.
அடுத்த நாளே (போக- வர) விமான டிக்கட் மெயிலில் வந்தது. 
"ஏம்ப்பா, ஹார்ட் பேஷன்ட் விமானத்தில் போகலாமா!" பீதியை கிளப்பியது, மகன்.
எதற்கு சந்தேகம்! நண்பருக்கும், டாக்டருக்கும் போனை போட்டு கேட்டதில் ஒகே சொன்னார்கள். எப்போதும்போல் மாத்திரைகள் (கை)பையில் இருக்கட்டும் என்றார்கள். மகளுக்கு, வருவதை போனில் உறுதி செய்தேன்.
மதியம் இரண்டரை மணி பிளைட்டிற்கு, 11.30 க்கே கால் டாக்சி வந்து விட்டது."ஏர்போர்டில் சாப்பிடுங்க. அதற்கப்புறம் 2 மணி நேரம் உள்ளது" என்று ஒரு  பொட்டலத்தை பையில் திணித்தாள் மனைவி.12.30க்கெல்லாம் விமான நிலையத்தை அடைந்தோம். உடன்  மகனும், இன்னொரு மகளும். என்கொயரியில்,விமானம் சரியான நேரத்திற்கு புறப்படுமா என்று விசாரித்து
விட்டு, பையில் இருந்த உணவை காலி செய்தேன்! 1.30 மணிக்கு செக்-இன்.அவர்களை அனுப்பிவிட்டு உள்ளே நடக்க ஆரம்பித்தேன். நடை     .    
நீண்டது. மூச்சு வாங்கியது. நின்று நின்று,நடந்து, செக்குரிட்டி செக் முடிந்து அமர்ந்தேன்.மறுபடியும் நீண்ட காரிடாரில் நடந்து உள்ளே சென்றால், ஆம்னி பஸ் போல இருக்கைகள். புஷ் பாக் இல்லை.மிதமான குளிர் காற்று.சரியான நேரத்தில் கேப்டன் பிரதிப்பின் 
அறிவிப்புடனும், ஏர் ஹோஸ்டஸ் (நேபாலியோ(!)-நல்ல உயரம்)சின் அவசர கால அறிவிப்புகளுடன்  விமானம் நகர ஆரம்பித்தது.(டாக்சியிங்). ரன் வேயின் முடிவு எல்லை வரை சென்று திரும்பி நின்றது.(மூச்சு வாங்குகிறதோ!).எல்லா என்ஜின்களும் இயக்கப்பட, சற்று தூரம் வேகமாக ஓடி, "ஜிவ்" வென்று மேலே எழும்பியது.
(தொடரும்) 
 

No comments: