Friday, 18 May 2012

வாழ்கபோலிஸ்!!! வாழ்க டெக்னாலஜி!!!


வாழ்கபோலிஸ்!!!   வாழ்க டெக்னாலஜி!!!

போலிஸ் என்றால் படத்திலலேட்டா கடைசில வருவாங்க.
நடைமுறையில போலிசு கிட்ட போகவே சாதாரண மக்களிடம்  
இன்றும் அச்சம் உள்ளது.
இது அந்த மாதிரி அல்ல.
சென்னை கிண்டி நூறடி ரோடில் எம்.எம்.டி.எ. நிறுத்தத்தில் நடந்து சென்றுகொண்டிருந்த நடு வயது பெண்மணியிடம் செயினை அறுத்துக்கொண்டு 
ஒரு "பைக்"காரன் வேகமாக சென்றுவிட்டான். 
அந்த பெண்மணி நாடு ரோட்டில் "ஐயோ, என் புருஷன் கொன்று விடுவானே"என்று பெருங்குரலில் அழ, யாரோ ஒரு புண்ணியவான் 
போலிசுக்கு போன் பண்ண 'சர்'ரென ஜீப்பில் வந்த உதவி 
கமிஷனர்,விசாரணையில் இறங்கினார்.
பிறகு, லேப்டாப்பில் தட்டி, கண்காணிப்பு கேமராவில் 
திருடனின் வண்டி நெம்பரை கண்டுபிடித்து 
ஆளை பிடிக்க வைத்து விட்டார்.
அந்த பெண்மணியிடம் ஸ்டேஷனில் வந்து 
செயினை வாங்கிகொள்ளும்படி சொன்னார்.


வாழ்கபோலிஸ்!!!   வாழ்க டெக்னாலஜி!!!! நம்ப முடியுதா? 

Friday, 4 May 2012

அம்மணியும் அணிலும்

அம்மணியும் அணிலும் :
காலையில் குயிலின் குரலை கேட்டு கண்விழிப்போம்.எதிரில் மிகப்பெரிய காலி மனையில், ஏராளமான மரங்கள்.விதவிதமான பறவைகள்.மாலையில் திரும்பி வந்து கூடுகளில் அடையும் இரைச்சல் இனிமை.பலவித குரல்கள்.கூடவே குஞ்சுகளின் கொஞ்சல்கள்!!!! 
நடு இரவில் ஆந்தையின் அட்டகாசம். 
பகலில் கிளியின் குரல்கள் அவைகளை 
தேடவைக்கும்.
அணில்கள் துள்ளி விளையாடுவதே அழகோ அழகு. குயில்கள்  அவ்வளவு எளிதாக கண்ணில் படாது. இதெல்லாம் எங்கோகிராமத்தில் இல்லைங்க.
சென்னையின் மத்தியில்.
இதெல்லாம் போன வருடம்..அந்த காலி மனையை சேட்டு, வீட்டு மனைகளாக்கி விற்றுவிட்டதால், அங்கிருந்த மரங்களை எல்லாம் வெட்டிகொண்டிருக்கும்போது, சில மரங்களையாவது விட்டு வைக்க சொன்னோம்.
ம்ஹும்..
வாங்கியவன் அரசியல்வாதி.ஒரு பிட் இடம் கூட விடாமல் படம் போட்டு விற்று விட்டான். அந்த மரங்களில் இருந்த பறவை கள், அணில்கள் தவித்த தவிப்பு இருக்கிறதே, கொடுமை. அணில் குஞ்சுகள் சிலவற்றை எடுத்து வந்து வளர்த்தோம்.
அம்மணிக்கு இதெல்லாம் அலர்ஜி. ஜன்னலில் வைக்கும் உணவை காகமும், அணிலும் போட்டி போட்டு உண்ணும். ஒரு சமயம் நான் வெளியூர் போயிருந்தபோது, அம்மணி சரியாக ஜன்னலில் உணவு வைக்கவில்லை. அது சமையல் அறைக்குள்ளேயே வர ஆரம்பித்து விட்டது.
அம்மணி போட்ட கூச்சலில் (என்னைத்தான்) வலை போட்டுவிட்டேன் .உணவு வைப்பது தொடர்கிறது. 

Thursday, 3 May 2012

சென்னை மாநகராட்சி 7-வது மண்டலகூட்டங்கள்


சென்னை மாநகராட்சி அதிமுக கையில், ஆனால் 7-வது மண்டலமாகிய, அம்பத்தூர் மண்டல தலைவர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றது, திமுக.
எப்படி?? அதிமுக நண்பர்கள் போட்ட ஓட்டுக்கள்தான். 
இது பழைய கதை!
இப்போ என்னா அதுக்கு? 
மண்டல கூட்டங்கள் நடந்தால் தான் அந்தந்த வார்டு பிரச்சினைகளை பேசி திட்டங்கள் போட்டு, தீர்மானங்கள் இயற்றி மாநராட்சி கூட்டத்தில் வைத்து நிதி ஒதுக்க முடியும். 
 
மண்டலக்கூட்டங்கள் நடக்கலியா? 
அதிமுக 10 கவுன்சிலர்கள் கூட்டத்தை புறக்கணிப்பதால், கூட்டம் நடத்த முடியவில்லை.
கவுன்சிலர்களை கூட்டத்தில் கலந்துகொள்ள கட்டாயப்படுத்த முடியாதாம்.
அப்புறம் எப்புடி ரோடு போடுவாங்க? குப்பை அகற்றுவாங்க?
எங்களுக்கு ஏன்தான் இப்படியெல்லாம் நடக்குதோ?

Tuesday, 1 May 2012

ஈழ தமிழர்களை பற்றி -டி.ஆர்.பாலு


ஈழ தமிழர்களை பற்றி பேச எங்களுக்கு மட்டுமே அதிக உரிமை உள்ளது.நான் சென்னை கழக மாவட்ட செயலாளராக இருந்த 13 ஆண்டுகளில் நடத்திய  90% பொதுக்கூட்டங்கள்,ஆர்பாட்டங்கள் ஸ்ரீலங்கா தமிழ் பிரச்சினை பற்றியதே!!! டெசோ ஆரம்பித்தது மட்டுமல்ல அதில் மதுரையில் நடந்த கூட்டத்தில் வி.பி.சிங், வாஜ்பாய் போன்றவர்களை பங்கு பெற செய்து ஈழ போராளிகளுக்குள் ஒற்றுமை ஏற்பட காரணமாகவும், இருந்தது கலைஞர் தலைமயில் உள்ள திமுகழகமே.
பதவியில் இருந்த போது ஒன்றும் செய்யவில்லை என்று விமர்சனம் செய்பவர்களுக்கு சொல்லுகிறேன்!எல்லா விஷயங்களிலும் வெளிப்படையாக சொல்லவோ செய்யவோ முடியாது.இந்தியாவில்,உலகெல்லாம் வாழும் தமிழர்களின் எதிர்காலத்தையும் மனதில் கொண்டு தான் எந்த நடவடிக்கையையும் எடுக்கமுடியும்.அண்டை நாடான பாகிஸ்தான் எதிரி,பங்களாதேஷ், சீனா என்று எதிரி பட்டியல் இருக்கும்போது, தெற்கில் ஸ்ரீலங்காவையும் பகைக்க முடியாது. சீனா ஸ்ரீலங்காவில் ஆயிரம் மெகா வாட் திறன் கொண்ட மின் உற்பத்தி நிலையத்தை அமைத்து கொடுத்திருக்கிறது. ஒரு லட்சம் சீன படையினர் சீருடை இல்லாமல் அங்கே பணிபுரிகிறார்கள். இந்தியாவின்  பங்களிப்பு அங்கே தேவைப்படுகிறது. முக்கியத்துவம் வாய்ந்தது. எல்லாவற்றையும் போது மேடையில் சொல்ல முடியாது.இதே ஜெயலலிதா பிரபாகரனை கைது செய்து இந்தியாவிற்கு 
கொண்டு வரவேண்டும் என்று சொன்னார்."
அம்பத்தூர் பொதுக்கூட்டத்தில் தொகுதி பாராளுமன்ற உறுப்பினர்,டி.ஆர்.பாலு ஆவேசம்.

Saturday, 28 April 2012

நெருக்கடிகள்-உழைப்பு-கலைஞர்

வெளியில:
சென்ற சட்ட மன்ற பொது தேர்தலில் திமுக பெரும் தோல்வியை சந்தித்தது!!எதிர் கட்சி அந்தஸ்து கூட பறிபோனது.  
கட்சியில:
வெளியிலே அப்படி என்றால் கட்சிக்குள்ளே வேறு மாதிரி பிரச்சினைகள். ஒரு பக்கம் அழகிரியும், முக ஸ்டாலினும் எதிரும் புதிரும் யார் பெரியவர்? அடுத்த தலைவர் என்று முட்டல், மோதல்கள். மற்றொரு பக்கம் பேராசிரியர் அன்பழகன் வயதில் மூத்தவர்கள்(80-90) கட்சி பணியிலிருந்து விலகி இளைஞர்களுக்கு(60-70) வழி விட வேண்டும் என்று ஒரு குண்டை தூக்கி போட்டார். 
வீட்டில:
மூன்றாவதாக இந்த வீட்டில் சகோதரர்களை சமாதானபடுத்த சொல்லியும், அந்த வீட்டில் மகளுக்கு கட்சியில் பதவி கேட்டு நச்சரிப்பு!!!
இதெல்லாம் கலைஞருக்கு சுண்டைக்காய் சமாசாரம்!
இதற்கு எல்லாம் சேர்த்து ஒரே வழி பழையபடி பொதுக்கூட்டம்,ஆர்பாட்டம்,இனம்,மொழி, பொது பிரச்சினை  என தீவிரமாக தானே இறங்கினால், சகோதரர்கள் மட்டுமல்ல, பேராசிரியரும் மௌனமாகிவிடுவார்கள். வீட்டிலும் இருக்கும் பிரச்சினைகள் அடங்கிவிடும் என்று கணக்கு போட்டார்.அனேகமாக வெற்றியும் பெற்றுவிட்டார்.
உடல் ஒத்துழைக்காவிட்டாலும் மனதில் உறுதியுடன் செயல்படும் அவரை பார்த்து வியக்கிறேன்!!! அந்த உழைப்பை வணங்குகிறேன்!!!

ஜனநாயகம் படும் பாடு!!


ஜனநாயகம் படும் பாடு!!

சட்ட சபையில் திமுக உறுப்பினர்களுக்கு பேசுவதற்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை என கூறி மக்கள் மன்றத்தில் எங்கள் கருத்தை கூற தமிழ்நாடு முழுவதும் பொதுக்கூட்டம் வாயிலாக எங்கள் கருத்துக்களை பதிவு செய்வோம் என்று திமுக தலைவர் கூறினார்.அதன்படி முதல் கூட்டம் வட சென்னை பெரவள்ளூரில் நடந்தது. முதலில் பேசிய துரை முருகன் சட்ட சபையில் திமுக உறுப்பினர்கள் நடத்தப்படும் விதம் குறித்து வேதனையான தகவல்களை வேடிக்கையாக கூறினார்.அடுத்து பேசிய மு.க.ஸ்டாலின்,தன் மீதும் தன் மகன் மற்றும் சீப்ராஸ் அதிபர் ஆகியோர் மீதும் செய்யப்பட புகார் பொய்யானது என்றும் அந்த இடம் வாங்கிய கடனை திருப்பி செலுத்தாததால் ஏலத்துக்கு வந்ததாகவும் அதை தன் மகன் உதய நிதியின் நிறுவனம் ஏலத்தில் எடுத்ததாகவும் கூறினார். அந்த ஏலத்தில் பங்கு கொண்ட மற்றொரு பிரமுகர் நடிகர் கமலா ஹாசன் எனபதையும் கூறிய முக ஸ்டாலின் ஜெயலலிதாவிற்கு இது போன்ற தவறான தகவல்களை தரும் அதிகாரிகளை சாடினார்.டான்சி நிலத்தை திருப்பி கொடுக்க நேர்ந்த சூழலை சுட்டிக்காட்டிய அவர், திமுக தலைவர்களில் பலரையும் நில அபகரிப்பு என்ற பெர்யரில் பொய் வழக்குகளை போட்டு பின் ஜாமீனில் வெளிவந்தவர்களை மீண்டும் ஏதாவது பொய் வழக்கு போடுவதும் , குண்டர் சட்டத்தை ஏவுவதையும் வழக்கமாக கொண்டுள்ளதை குறிப்பிட்டார். கடைசியாக பேசிய கலைஞர் ஜெயலலிதாவின் அவல ஆட்சியை பற்றி பேசி கழக ஆட்சியில் மின் பற்றாக்குறையை சமாளித்ததைய்ம், தற்போதுள்ள நிலையை சிந்தித்து பார்க்க வேண்டும் என்றார்.

கடைசியாக பேசிய கலைஞர் ஜெயலலிதாவின் அவல ஆட்சியை பற்றி பேசி கழக ஆட்சியில் மின் பற்றாக்குறையை சமாளித்ததைய்ம், தற்போதுள்ள நிலையை சிந்தித்து பார்க்க வேண்டும் என்றார். தேர்தலின்போது கூடாத பெரும் கூட்டம் கூடியிருந்தது, சிந்திக்க வைக்கிறது...பார்லிமென்ட் தேர்தலை பற்றி....

மதுரை ஆதீனத்தின் ஈனச் செயல்!


மதுரை ஆதீனத்தின் ஈனச் செயல்!


 Inline images 1

அறிவார்ந்த
 நண்பர்களே,
தமிழ்நாட்டின் தொன்மையான ஆதீனங்களில் ஒன்று மதுரை ஆதீனம்.திருஞான சம்பந்தரால் தோற்றுவிக்கப்பட்டு சைவமும் தமிழும் தழைத்தோங்கிநிற்க ஆலென வளர்ந்து அருகென வேரூன்றி தமிழரின் பண்பாட்டுச்சின்னமாய்த் திகழ்ந்து வந்த இந்த ஆதீனத்தின் பாரம்பரியச் சிறப்பைப்பாழ்படுத்தி அதைத் தன் இஷ்டம்போல் நடத்தி அரசியல் கூத்து நடத்தும்அரங்கமாய் மாற்றியிருக்கிறார், இப்போதுள்ள ஆதீனகர்த்தர்.

இவர் ஆதீனமாய்ப் பொறுப்பேற்ற நாள் முதல் கத்தியும் துப்பாக்கியுமாய்அலைந்த துர்ப்பாக்கியவானாகாத்தான் தெரிந்தாரே தவிர, தேவாரம் காத்தஆதீனமாய் அவதானம் செய்யவே இல்லை.
மதுரை ஆதீனத்துக்கும் பிடாதிப் பீடைத் தானத்துக்கும் என்ன தொடர்பு?
தமிழ்த் தொண்டும் தெய்வத்தொண்டும் புரிந்து காலம் காலமாகப் பாரம்பரியம்காத்து வந்த மதுரை ஆதீனம் எங்கே?

அரைகுறை ஆடைகளுடன்-சில சமயம் அதுவுமே இல்லாமல்அரம்பையர்,ஊர்வசிகள் தொண்டு புரிய காமக் களிநடம் புரிந்த பிடாதிப்பித்தாலாட்ட பீடம் எங்கே?

கோவணம் கட்டிய காவிக்கும் கோவணமே கட்டாத பாவிக்கும் கூறு போட்டுப்பொருள் சொல்லத் தெரிந்தவர்கள் நாம் என்பது பிடாதி நித்திக்கும் மதுரைநெத்திக்கும் புரிய வேண்டும்.

உமையவளிடம் ஞானப்பால் அருந்தி தெய்வத் திருப் பாக்களை நாம் அருந்திஉருகப் பொழிந்த திருஞான சம்பந்தர் எங்கே? அவர் பாதம் பட்ட இடத்தில்தலையால் நடக்க வேண்டிய இந்த அஞ்ஞான சம்பந்தர் எங்கே?

இவர் ஆதீன கர்த்தராக வந்த பாதை யாதென இவரது மனச் சான்றுக்குத் தெரியவேண்டும்?


மனச் சான்றே இல்லாத பலவீன கர்த்தராக இந்த 292 ஆவது
ஆதீனம்; எல்லாப் பலவீனங்களின் மொத்த உருவமாக உலாவந்துகொண்டிருக்கும் ஒருவனை, அருவருக்கத்தக்க வகையில் நடந்துகொண்டு,சிறைக் கம்பிகளை எண்ணி விட்டு கொஞ்சம் கூட வெட்கமின்றி,தனக்கிருக்கின்ற பற்களை எல்லாம் வெளியே தெரியக் காட்டிக் கொண்டுஅதற்குப் ’பரம்ஹம்ச நிலை’ என்று விளக்கம் வேறு சொல்லிக் கொண்டுஜாமீனில் திரியும் கபடச் சாமியாரைத் தனது அடுத்த வாரிசென- மதுரைஆதீனத்தின் 293 ஆவது பட்டம் என அறிவித்துக் கொண்டிருக்கிறார்.

நமது இந்து தர்மத்தை வேறு எந்த மதத்தவரும் அழிக்க வேண்டியதில்லை.கோடாரிக் காம்பாய்க் கொலுவீற்றிருக்கும் இத்தகைய ஆதி-ஈனர்களே போதும்.அடுத்தவர் கேலி பேசவும் அந்நியர் கூலி பேசவும் நாம் தலை குனிந்து தரம்இழந்து போக வேண்டியதுதான்.

நித்தியானந்தாவுக்கு துறவி எனச் சொல்லிக் கொள்ளக் கடுகளவும்யோக்கியதை இல்லை. யோகத்தை விற்றுக் காசு பண்ணி போகத்தைஅனுபவிக்கும் விவஸ்தை கெட்ட காவி வியாபாரி; கபடச் சந்நியாசிநித்தியானந்தா,

அந்த நபருக்கு 293 ஆவது மதுரை ஆதீனம் எனும் பட்டம்; இப்போதைய 292ஆவது மதுரை ஆதீனம் அறிவித்துள்ளது.

யாரும் எதிர்பாராத மதுரை ஆதீனத்தின் இந்த ஈனச் செயல் கண்டு உலகத்தமிழர்கள் எல்லோரும் தலை கவிழ்ந்து போய் விட்டார்கள்.

மானமுள்ள தமிழரும் மரபு போற்றும் யாவரும் இந்த
ஈனம்கெட்ட நடத்தையை எதிர்க்க வேண்டும் அல்லவா?

இந்த அக்கிரமத்தை அனைவரும் ஒரே குரலில் கண்டிக்க வேண்டும்;
சான்றோரும் ஆன்றோரும் ஒன்று சேர்ந்து எதிர்க்க வேண்டும்;
தமிழ் நாட்டின் பிற ஆதீன கர்த்தர்களும் மடாதிபதிகளும் வெளிப்படையாககண்டித்து மதுரை ஆதீனத்தைப் புறக்கணிக்க வேண்டும்.அவர்கள் ஒருமித்துக்கூடிக் கலந்து, தகுதி மிக்க தமிழ்ச் சான்றோன் ஒருவரை மதுரைஆதீனகர்த்தராக அறிவிக்க வேண்டும்.
அதற்கேற்ப தமிழக அரசும் சட்டத்தையும் மரபையும் காக்க நடவடிக்கைஎடுத்து நீதி மன்றத்தின் வழிகாட்டுதலைப் பெற்று, மதுரை ஆதீனத்தைத் தகுதிநீக்கம் செய்யவும் இந்து அறநிலையத் துறை மூலம் உரிய கட்டுப்பாடுகளைவிதிக்கவும் தயங்கக்கூடாது.

இந்து அறநிலைத் துறை என்பது இந்து தர்மத்தைக் காக்கவும்
நிலை நிறுத்தவும்தான் என்பதை நிரூபிக்க வேண்டும்.

இப்படியொரு அக்கிரமம்-அநியாயம் நடக்க அரசு அனுமதித்தால்,
இனி இங்கே இந்து தர்மம் நிலைக்காது நண்பர்களே.


இந்து தர்மம் இல்லையேல் இங்கே நாடு நிலைக்காது; நம் நாட்டின் சமத்துவநெறியும் நிலைக்காது.

பேய்கள் அரசாளும்;பிணம் தின்னும் சாத்திரங்கள்.

காறி உமிழ்வீர் மதுரை ஆதீனத்தின் மயான நடத்தைகளை.
சீறி எழுவீர்; அதன் முந்தைய சிறப்புக்களை மீட்க!

இவண்,
கிருஷ்ணன்பாலா 
28.3.2012