ஈழ தமிழர்களை பற்றி பேச எங்களுக்கு மட்டுமே அதிக உரிமை உள்ளது.நான் சென்னை கழக மாவட்ட செயலாளராக இருந்த 13 ஆண்டுகளில் நடத்திய 90% பொதுக்கூட்டங்கள்,ஆர்பாட்டங்கள் ஸ்ரீலங்கா தமிழ் பிரச்சினை பற்றியதே!!! டெசோ ஆரம்பித்தது மட்டுமல்ல அதில் மதுரையில் நடந்த கூட்டத்தில் வி.பி.சிங், வாஜ்பாய் போன்றவர்களை பங்கு பெற செய்து ஈழ போராளிகளுக்குள் ஒற்றுமை ஏற்பட காரணமாகவும், இருந்தது கலைஞர் தலைமயில் உள்ள திமுகழகமே.
பதவியில் இருந்த போது ஒன்றும் செய்யவில்லை என்று விமர்சனம் செய்பவர்களுக்கு சொல்லுகிறேன்!எல்லா விஷயங்களிலும் வெளிப்படையாக சொல்லவோ செய்யவோ முடியாது.இந்தியாவில்,உலகெல்லாம் வாழும் தமிழர்களின் எதிர்காலத்தையும் மனதில் கொண்டு தான் எந்த நடவடிக்கையையும் எடுக்கமுடியும்.அண்டை நாடான பாகிஸ்தான் எதிரி,பங்களாதேஷ், சீனா என்று எதிரி பட்டியல் இருக்கும்போது, தெற்கில் ஸ்ரீலங்காவையும் பகைக்க முடியாது. சீனா ஸ்ரீலங்காவில் ஆயிரம் மெகா வாட் திறன் கொண்ட மின் உற்பத்தி நிலையத்தை அமைத்து கொடுத்திருக்கிறது. ஒரு லட்சம் சீன படையினர் சீருடை இல்லாமல் அங்கே பணிபுரிகிறார்கள். இந்தியாவின் பங்களிப்பு அங்கே தேவைப்படுகிறது. முக்கியத்துவம் வாய்ந்தது. எல்லாவற்றையும் போது மேடையில் சொல்ல முடியாது.இதே ஜெயலலிதா பிரபாகரனை கைது செய்து இந்தியாவிற்கு
கொண்டு வரவேண்டும் என்று சொன்னார்."
அம்பத்தூர் பொதுக்கூட்டத்தில் தொகுதி பாராளுமன்ற உறுப்பினர்,டி.ஆர்.பாலு ஆவேசம்.
No comments:
Post a Comment