Friday, 29 June 2012

enna nadakkuthu என்ன நடக்குது:  கிட்டத்தட்ட 35  ஆண்டுகளுக்கு பிறகு தீக்கதிர் (பத்...

enna nadakkuthu என்ன நடக்குது:  கிட்டத்தட்ட 35  ஆண்டுகளுக்கு பிறகு தீக்கதிர் (பத்...:  கிட்டத்தட்ட 35  ஆண்டுகளுக்கு பிறகு தீக்கதிர் (பத்திரிகையின் பொன்விழா ஆரம்ப  விழாவில்) அலுவலத்தில்:  தோழர் சங்கரையாவின்  பேச்சை  கேக்க ...
 கிட்டத்தட்ட 35  ஆண்டுகளுக்கு பிறகு தீக்கதிர் (பத்திரிகையின் பொன்விழா ஆரம்ப  விழாவில்) அலுவலத்தில்:  தோழர் சங்கரையாவின்  பேச்சை  கேக்க
 ஒரு ஆசை.   வயதானாலும் சிங்கம் சிங்கம்தான்.  வெகு  நாட்களுக்கு பிறகு செவிக்கு உணவில்லை,   விருந்தே கிடைத்தது. இன்னும் சில நல்ல(கண்ணு) அரசியல்வாதிகளும் இருக்கிறார்கள், இந்த மக்களை வழி நடத்த.

enna nadakkuthu என்ன நடக்குது: தீக்கதிர்-பொன்விழா :  தினக்கூலி தொழிலாளர்களின் பி...

enna nadakkuthu என்ன நடக்குது: தீக்கதிர்-பொன்விழா :
 தினக்கூலி தொழிலாளர்களின் பி...
: தீக்கதிர்-பொன்விழா :     தினக்கூலி தொழிலாளர்களின் பிரச்சினைக்காக தீக்கதிரில் இருந்து ஒரு தலைவர் வந்து சங்கத்தை பதிவு பண்ண...
தீக்கதிர்-பொன்விழா :
 

 
தினக்கூலி தொழிலாளர்களின் பிரச்சினைக்காக தீக்கதிரில் இருந்து ஒரு தலைவர் வந்து சங்கத்தை பதிவு பண்ணி கொடுத்தார்.அப்படி அறிமுகம் ஆகி, எமர்ஜன்சி பீரியடில் தோழர்களுக்கு சமையல் செய்வது, பொருள்கள் வாங்கி வருவது என்று பழகியதால், தொழிற்சங்க கூட்டங்களுக்கு ஏ.கே.கோபாலன்,
நம்பூதிரி பாடு,கல்யாணசுந்தரம் ஆகியோரை அழைத்து வரும் வாய்ப்புகள் கிடைத்தது.
வயதின் காரணமாக ஏடாகூடமாக கேள்விகள் கேட்பேன். அதில் ஒன்று:நம் கட்சி உழைக்கும் மக்களுக்காகத்தானே போராடுகிறோம்! ஆனால் அவர்கள் நம்மை ஏன் ஆதரித்து ஓட்டு போடுவதில்லை?    இன்றுவரை எனக்கு திருப்தி அளிக்கும் வகையில் பதில் கிடைக்கவில்லை.
ஒரு கட்சி பத்திரிக்கை அதுவும் உண்மையான நடுநிலையோடு,மக்களின் பிரச்சனைகளை மட்டுமே மையப்படுத்தி  நடத்துவது,மிக,மிக,மிக,கடினம்.
கொள்கைபிடிப்போடு, குறைந்த வருமானத்தில் வேலை செய்யும் அந்த தோழர்கள் .............(உங்களுக்கு பிடித்த மிக நல்ல உயர்வான வார்த்தையை போட்டுக்கொள்ளுங்கள்.).
"தோழர் சங்கரையா சொன்ன அறிவுரை எல்லா பத்திரிக்கை நடத்துவோருக்கும் பொருந்தும். விற்பனையை அதிகரிக்க அதிக சந்தாதாரர்களை சேருங்கள்.பத்திரிக்கையின் எண்ணிக்கை லட்சங்களை தொட வேண்டும்."
ஒத்த கருத்துள்ள நண்பர்களை அணுகினால் இது ஒன்றும் முடியாததில்லை.முதல் சந்தா-முக நூல்-நண்பராக நான் தருவதோடு, நண்பர்களையும் வாங்க சொல்லுவேன்.


Thursday, 28 June 2012

enna nadakkuthu என்ன நடக்குது: பிறந்த நாளும், குழப்பங்களும்-பிறந்த நாளை கொண்டாடுவ...

enna nadakkuthu என்ன நடக்குது: பிறந்த நாளும், குழப்பங்களும்-பிறந்த நாளை கொண்டாடுவ...: பிறந்த நாளும், குழப்பங்களும்  : மாலையில் வீடு திரும்பிய மகள் கேட்டாள் "அப்பா, இன்னிக்கு உனக்கு பிறந்த நாளா?" "சர்டிபிகேட் படி ஆமாம்." "ப...

பிறந்த நாளும், குழப்பங்களும்-பிறந்த நாளை கொண்டாடுவது பிடிக்காது.

பிறந்த நாளும், குழப்பங்களும் :
மாலையில் வீடு திரும்பிய மகள் கேட்டாள் "அப்பா, இன்னிக்கு உனக்கு பிறந்த நாளா?"
"சர்டிபிகேட் படி ஆமாம்."
"பேஸ் புகல வாழ்த்துக்கள் பார்த்தேன்!"
"அப்போல்லாம், ப்ளே ஸ்கூல் கிடையாதேம்மா. அதிக குறும்பு செய்ததால், ஒரு வருடம் முன்னேயே 4 வயதிலேயே ஸ்கூலில் சேர்க்க பிறந்த தேதிய மாத்தி குடுத்துட்டாங்க."
"எங்க அம்மா தான் என் பிறந்த நாளை ஞாபகம் வைத்து கொண்டாடுவார்கள்.எனக்கு பிறந்த நாளை கொண்டாடுவது பிடிக்காது.
நான் அன்று வீட்டிற்கே வரமாட்டேன்! இரவு இரண்டாவது ஷோ முடிந்ததும்தான் வருவேன்!
திருமணத்திற்கு பின்பும் இது தொடர்ந்தது. இப்போது கூட உங்கள் மகிழச்சிக்காகதான் புது துணியை கூட அணிகிறேன்!"
"ஆமாம், இப்போதுகூட பிறந்த நாள் அன்னிக்கு காலையில் சென்று  இரவில் தானே வருகிறீர்கள். அப்படி எங்க தான் போறீங்க!"
"ஏதாவது ஒரு முதியோர் இல்லத்திலோ, ஆதரவற்றோர் இல்லத்திலோ உணவு பரிமாறி விட்டு, உண்டு, அன்றைய பொழுதை அவர்களுடன் கழிப்பேன்! "
இதை இன்று வரை யாரிடமும் சொன்னது கூட கிடையாது.