Friday, 29 June 2012

தீக்கதிர்-பொன்விழா :
 

 
தினக்கூலி தொழிலாளர்களின் பிரச்சினைக்காக தீக்கதிரில் இருந்து ஒரு தலைவர் வந்து சங்கத்தை பதிவு பண்ணி கொடுத்தார்.அப்படி அறிமுகம் ஆகி, எமர்ஜன்சி பீரியடில் தோழர்களுக்கு சமையல் செய்வது, பொருள்கள் வாங்கி வருவது என்று பழகியதால், தொழிற்சங்க கூட்டங்களுக்கு ஏ.கே.கோபாலன்,
நம்பூதிரி பாடு,கல்யாணசுந்தரம் ஆகியோரை அழைத்து வரும் வாய்ப்புகள் கிடைத்தது.
வயதின் காரணமாக ஏடாகூடமாக கேள்விகள் கேட்பேன். அதில் ஒன்று:நம் கட்சி உழைக்கும் மக்களுக்காகத்தானே போராடுகிறோம்! ஆனால் அவர்கள் நம்மை ஏன் ஆதரித்து ஓட்டு போடுவதில்லை?    இன்றுவரை எனக்கு திருப்தி அளிக்கும் வகையில் பதில் கிடைக்கவில்லை.
ஒரு கட்சி பத்திரிக்கை அதுவும் உண்மையான நடுநிலையோடு,மக்களின் பிரச்சனைகளை மட்டுமே மையப்படுத்தி  நடத்துவது,மிக,மிக,மிக,கடினம்.
கொள்கைபிடிப்போடு, குறைந்த வருமானத்தில் வேலை செய்யும் அந்த தோழர்கள் .............(உங்களுக்கு பிடித்த மிக நல்ல உயர்வான வார்த்தையை போட்டுக்கொள்ளுங்கள்.).
"தோழர் சங்கரையா சொன்ன அறிவுரை எல்லா பத்திரிக்கை நடத்துவோருக்கும் பொருந்தும். விற்பனையை அதிகரிக்க அதிக சந்தாதாரர்களை சேருங்கள்.பத்திரிக்கையின் எண்ணிக்கை லட்சங்களை தொட வேண்டும்."
ஒத்த கருத்துள்ள நண்பர்களை அணுகினால் இது ஒன்றும் முடியாததில்லை.முதல் சந்தா-முக நூல்-நண்பராக நான் தருவதோடு, நண்பர்களையும் வாங்க சொல்லுவேன்.


No comments: