Tuesday, 17 July 2012

enna nadakkuthu என்ன நடக்குது: வித்தியாசமான எம்.பி.::

enna nadakkuthu என்ன நடக்குது: வித்தியாசமான எம்.பி.::: வித்தியாசமான எம்.பி.: பாராளுமன்ற உறுப்பினர்களை சந்திப்பது என்பது கடினம்.தொகுதியில் பார்ப்பது அரிது.உங்க தொகுதி எம்.பி.யை கடைசியாக எப்போது ...

வித்தியாசமான எம்.பி.::

வித்தியாசமான எம்.பி.:
பாராளுமன்ற உறுப்பினர்களை சந்திப்பது என்பது கடினம்.தொகுதியில் பார்ப்பது அரிது.உங்க தொகுதி எம்.பி.யை கடைசியாக எப்போது பார்த்தீர்கள்.ஏதாவது பொதுக்கூட்ட மேடை அல்லது போராட்டமேடையாகத்தான் இருக்கும்.

ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு, அப்படியில்லை.பாராளுமன்றம்    நடைபெறாத நேரங்களில், தொகுதி அலுவலகத்தில் சந்திக்கலாம். என்றைக்கு சந்திக்க முடியும் என்ற விவரத்தையும் அறிந்து கொள்ளலாம். 
தொகுதி மேம்பாட்டுக்காக ஒதுக்கப்பட்டுள்ள நிதியை, தொகுதியில் உள்ள பொது நல சங்கங்களை கலந்தாலோசித்து,பள்ளிகள்,சமுதாய கூடங்கள்,மின்விளக்குகள், போன்றவற்றிற்கு நிதி ஒதுக்குவதை ஒவ்வொரு வருடமும்,(இது, 2வது ஆண்டு) செய்கிறார். வேலையும் நடக்கிறது.. இவர் வித்தியாசமான எம்.பி.தானே!!

Tuesday, 10 July 2012

enna nadakkuthu என்ன நடக்குது: தெரு நாய்களின் தொல்லைகள்

enna nadakkuthu என்ன நடக்குது: தெரு நாய்களின் தொல்லைகள்: தெரு நாய்களின் தொல்லைகள்:: இன்று சென்னையில் மட்டுமல்ல, இந்தியா பூராவும், பெரு-சிறு நகரங்கள்,கிராமங்கள் என்று எல்லா இடங்களிலும் தெ...

தெரு நாய்களின் தொல்லைகள்


தெரு நாய்களின் தொல்லைகள்::
இன்று சென்னையில் மட்டுமல்ல, இந்தியா பூராவும், பெரு-சிறு நகரங்கள்,கிராமங்கள் என்று எல்லா இடங்களிலும் தெரு நாய் தொல்லை அதிகமாகிவிட்டது. இரவில் வேலை முடித்து வருபவர்களுக்கு இந்த நாய்கள் தொல்லை பற்றி ஒரு புத்தகமே போடும் அளவிற்கு புகார்கள் வருகின்றன.
ஒரு வாரத்திற்கு முன் ஒரு வயதானவர், "என் பெண் ஐ.டி.யில் வேலை செய்கிறாள்.வீட்டு வாசலில் காரில் வந்து இறங்கினாலும் ஐந்தாறு நாய்கள் காரை சுற்றி நின்று கொண்டு குறைக்கின்றன. எனக்கும் நாய் என்றால் பயம்.நீங்க மாநகராட்சியில் சொல்லி பிடிக்க சொல்லுங்களேன்!!"
நேற்று ஒரு தொழிலாளி "சார்,நைட் ஷிப்ட் முடிஞ்சு சைக்கிளில் வருகின்றபோது நாய் கடித்து விட்டது" போன் பண்ணுங்க சார்!!
"பஸ் ஸ்டாண்டிலிருந்து வீட்டிற்கு வருவதற்குள் 60 ,70 நாய்கள்...துரத்துகின்றன.சில நாய்கள் கல் எடுத்தால் பாய்ந்து வருகின்றன. ஏதாவது பண்ணுப்பா" மகன்.
மாநகராட்சியில் விசாரித்தால் ஓரிரு வண்டிகளே உள்ளதாகவும் நகரம் முழுவதையும் கவர் செய்ய போதுமானதில்லை என்கிறார்கள்.


கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கு மேலாக பல நண்பர்கள் இந்த தெரு நாய்களைஎன்ன  செய்வது  என்று பல ஆலோசனைகளை சொன்னார்கள்.ஒருவர் விஷம் வைத்து விடலாம் என்றார். அது பாவம், என்றதும் மயக்க மருந்து கொடுத்து,எங்காவது கொண்டு விட்டு விடலாம், என்றார், மற்றொருவர்.சரி மாநகராட்சியில் புகார் செய்தால் அவர்கள் போதுமான வண்டிகள் இல்லை என்று உண்மையை சொன்னார்கள். அது மட்டுமல்ல,  செல்லுமிடங்களில் மக்கள்  நாயை  பிடிக்க விடுவதில்லை.எதிர்ப்பு.பல வழிகளில் முயன்று இன்று நாய் வண்டி வந்தே விட்டது.5 அல்லது 6 நாய்களை மட்டுமே பிடிக்க முடிந்தது.

Monday, 9 July 2012

enna nadakkuthu என்ன நடக்குது: தீக்கதிர்-பொன்விழா :  தினக்கூலி தொழிலாளர்களின் பி...

enna nadakkuthu என்ன நடக்குது: தீக்கதிர்-பொன்விழா : 
 தினக்கூலி தொழிலாளர்களின் பி...
: தீக்கதிர்-பொன்விழா :     தினக்கூலி தொழிலாளர்களின் பிரச்சினைக்காக தீக்கதிரில் இருந்து ஒரு தலைவர் வந்து சங்கத்தை பதிவு பண்ண...

Friday, 6 July 2012

முதல் கணவரை விட்டு விலகியது ஏன்? பாடல் ஆசிரியர் தாமரை பேட்டி | அட்ரா சக்க

ஒவ்வொருவரும் பிரச்சனைகளை தாங்களேதான் உண்டாக்கி கொள்ளுகிறார்கள்.தீர்வு அவர்களிடமே உள்ளது. அது அவர்களுக்கு தெரியும் வரை கஷ்டம்தான்.தெரிந்த பிறகு சொர்க்கம்தான்.