Sunday, 12 December 2010

In My View: IFLASH FOR IPHONE AND IPOD TOUCH

In My View: IFLASH FOR IPHONE AND IPOD TOUCH: "If you are feeling that you are not able to take full advantage of your iphone camera functions, and also can not use the camera function in..."

Saturday, 4 December 2010

IdlyVadai - இட்லிவடை: 2G - சோ பேட்டி

IdlyVadai - இட்லிவடை: 2G - சோ பேட்டி: "நேற்று இரவு 7 மணிக்கு ஜெயா டிவியில் வந்த சோ பேட்டி மற்ற பாகங்கள் கீழே... ( நன்றி: ஜெயா டிவி, மற்றும் இதை அப்லோட் செய்த நண்..."

Wednesday, 1 December 2010

தீராத பக்கங்கள்: இணையவெளி ஒன்றுகூடி நிற்கட்டும்!

தீராத பக்கங்கள்: இணையவெளி ஒன்றுகூடி நிற்கட்டும்!: "    ஏற்கனவே உங்களோடு பேசியதுதான். இந்த முக்கியமான காரியத்தில் நம்மை ஈடுபடுத்திக்கொள்ள மீண்டுமொருமுறை வேண்டுகிறேன். இந்த தேசத்தின் மகத்தான் ..."

Wednesday, 10 November 2010

Raasaa....Raasaa.

Ramasamy - இன் குறிப்புக்கள் என்னதான் செய்திட இயலும் என்னால்???? எனக்குத் தனிப்பட்ட வகையில் வந்த மின்னஞ்சல் பதிவு இதுby Ramasamy Duraipandi on 11 நவம்பர் 2010, 02:44 க்கு
எனக்குத் தனிப்பட்ட வகையில் வந்த மின்னஞ்சல் பதிவு இது

ஒரு லட்சத்து முப்பத்தொன்பதாயிரத்து அறுநூற்று ஐம்பத்திரண்டு கோடி ரூபாய்கள்
1,39,652,00,00,000. ஒரு சராசரி இந்தியன் இந்தத் தொகையைக் குழப்பமின்றி எழுத்துக் கூட்டிக் கணக்கிட சில நிமிஷங்கள் ஆகும். ஒரு லட்சத்து முப்பத்தொன்பதாயிரத்து அறுநூற்று ஐம்பத்திரண்டு கோடி ரூபாய்கள். இந்தியத் தொலைத்தொடர்புத் துறையின் இரண்டாம் தலைமுறைக்கான அலைக்கற்றை ஒதுக்கீட்டில், நாட்டுக்கு ஏற்பட்டிருக்கும் வருவாய் இழப்பாக தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் அலுவலகம் உச்ச நீதிமன்றத்தில் அண்மையில் அளித்திருக்கும் அறிக்கையில் குறிப்பிட்டிருக்கும் தொகை இது.



இந்திய வரலாற்றின் மிகப் பெரிய ஊழல். நேற்று வரை உத்தேசமாகக் கணக்கிட்டு ஆளாளுக்கு ஒரு தொகை - ரூ. ஐம்பதாயிரம் கோடி - ரூ. எழுபதாயிரம் கோடி - என்று பேசிக்கொண்டிருந்தோம். ஆனால், இப்போது நாட்டின் உயரிய கணக்குத் தணிக்கை அமைப்பு நாட்டின் உச்சபட்ச நீதி அமைப்பிடம் அதிகாரப்பூர்வமாக -அறிக்கையாக அளித்திருக்கிறது. இன்னமும் ஏன் மெüனம்?



இந்த ஒதுக்கீட்டுக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்ட நாளிலேயே இது மாபெரும் ஊழலுக்கான சூதாட்டம் என்பது தெரிந்துவிட்டது. தொலைத்தொடர்புத் துறையின் இணையதளத்தில் திடீரென்று ஒதுக்கீடு குறித்து அறிவிப்பு வெளியானதும், முதலில் வருவோருக்கே முன்னுரிமை என்று அறிவிக்கப்பட்டதும், ஒரு மணி நேரத்தில் அவசர அவசரமாக விண்ணப்பங்கள் பெறப்பட்டதும், விண்ணப்பங்கள் பெறப்பட்ட "சஞ்சார் பவ'னில் நடந்த அடிதடியும்... இவையெல்லாமும் ஊடகங்களில் உடனுக்குடனே வெளியாயின. அரசு நேர்மையானதாக இருந்தால், அப்போதே நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும், எடுக்கவில்லை.



தொலைத்தொடர்புத் துறையின் வர்த்தகச் செயலகம், தொலைத்தொடர்புக் கட்டுப்பாட்டு ஆணையத்தின் வழிகாட்டுதல்களை மீறி ஒதுக்கீட்டில் ஏல முறைக்குப் பதிலாக முதலில் வருவோருக்கு முன்னுரிமை முறையைக் கையாள அமைச்சகம் முடிவெடுத்ததாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. அரசு நேர்மையானதாக இருந்தால், அப்போதே நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். அதுவும் செய்யவில்லை. தொலைத்தொடர்புத் துறையில் அதுவரை எந்தச் சம்பந்தமுமில்லாத நிறுவனங்களுக்கு உரிமங்கள் வழங்கப்பட்டிருப்பதையும் உரிமங்களைப் பெற்ற நிறுவனங்கள் தாம் பெற்ற ஒதுக்கீட்டின் பெரும் பகுதியை பல மடங்கு லாபத்தில் பிற நிறுவனங்களுக்கு விற்றதையும் ஊடகங்கள் வெளியிட்டன. எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பின. அரசு நேர்மையானதாக இருந்தால், அப்போதே நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். அப்போதும் அசையவில்லை.



பிரச்னை நீதிமன்றப் படியேறியது. ""நாட்டின் மதிப்புமிக்க வளமும் பொதுமக்களின் பணமும் வீணடிக்கப்பட்டிருப்பது அதிரவைக்கிறது'' என்று கூறி விசாரணைக்கு உத்தரவிட்டது நீதிமன்றம். அரசு நேர்மையானதாக இருந்தால், அப்போதாவது விழித்துக் கொண்டு செயல்பட்டிருக்கும். அரசியல் நிர்பந்தம் மற்றும் நீதித் துறையின் நெருக்கடியால் மத்திய புலனாய்வு அமைப்பு விசாரிக்கத் தொடங்குகிறது. பல ஆதாரங்கள் சிக்கியிருப்பதாகத் தகவல்கள் கசிகின்றன. முக்கியமாக அதிகாரத் தரகர் ஒருவருக்கும் அமைச்சருக்கும் இடையேயான தொலைபேசி உரையாடல்களின் பதிவு மத்திய புலனாய்வு அமைப்புக்குக் கிடைத்திருப்பதாகவும், அந்த உரையாடலில் இந்த ஊழல் தொடர்பான குறிப்புகள் இடம்பெற்றிருப்பதாகவும் ஊடகங்கள் செய்தி வெளியிடுகின்றன. அரசு நேர்மையானதாக இருந்தால், உடனடியாகச் செயல்பட்டிருக்க வேண்டும்.



தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் அலுவலகம் மேற்கொண்ட தணிக்கையில், இந்த ஒதுக்கீட்டில் பெரும் முறைகேடு நடந்திருப்பது தெரியவருகிறது. தொலைத்தொடர்பு அமைச்சகத்திடம் விளக்கம் கேட்கிறது தணிக்கை அலுவலகம். அளிக்கப்பட்ட விளக்கங்கள் திருப்திகரமாக இல்லை என்றும் அறிவிக்கிறது. உச்ச நீதிமன்றத்தில் தன்னுடைய அறிக்கையை அளிக்கிறது. அரசு நேர்மையானதாக இருந்தால், இனியும் மௌனம்காப்பது சரியல்ல என்று உணர்ந்து நடவடிக்கையில் இறங்கி இருக்க வேண்டும்.



இந்த வழக்கின் விசாரணையில் மத்திய புலனாய்வு அமைப்பு காட்டிவரும் அசாதாரண தாமதத்துக்குக் கடுமையான கண்டனத்தைத் தெரிவிக்கிறது உச்ச நீதிமன்றம் ""அரசு செயல்படும் லட்சணம் இதுதானா?'' என்று கேள்வி எழுப்புகிறது. அரசு நேர்மையானதாக இருந்தால், இவ்வளவு கண்டனங்களுக்குப் பிறகாவது மௌனம் கலைத்திருக்க வேண்டும்.



ஒரு லட்சத்து முப்பத்தொன்பதாயிரத்து அறுநூற்று ஐம்பத்திரண்டு கோடி ரூபாய்கள். சாதாரண தொகையல்ல. இந்த ஊழல் நடந்த 2007-08-ம் நிதியாண்டில், நாட்டிலுள்ள அனைத்து மாநில அரசுகளுக்கும் சேர்த்து மத்திய அரசு ஒதுக்கீடு செய்த மொத்தத் தொகைக்கு ஏறத்தாழ இணையான தொகை இது.



இந்தத் தொகையில் நாடு முழுவதும் தலா ரூ. 25 லட்சத்தில் 5,58,608 பள்ளிக்கூடங்களை அமைத்திருக்கலாம்; ரூ. 1 கோடியில் 1,39,652 தரமான ஆரம்ப சுகாதார நிலையங்களை அமைத்திருக்கலாம்; ரூ. 5 கோடியில் 27,930 கல்லூரிகளை அமைத்திருக்கலாம்; ரூ. 100 கோடியில் எல்லா வசதிகளையும் கொண்ட 1,396 மருத்துவமனைகளை அமைத்திருக்கலாம்; 11,63,766 கி.மீ. தொலைவுக்கு சாலைகள் அமைத்திருக்கலாம்; 27,930 கி.மீ. தொலைவுக்கு புதிய மின் ரயில் பாதைகளை அமைத்திருக்கலாம். ஆனால், சில தனிப்பட்ட நபர்களின் கைக் காசாக மாறியிருக்கிறது நாட்டின் வளமும் மக்களின் பணமும். ஏறத்தாழ 45.58 கோடி பேர் வறுமைக்கோட்டுக்குக் கீழ் வாழும் ஒரு நாட்டில் - ஒரு நாளைக்கு 100 ரூபாய் சம்பாதிக்கக் குடும்பத்தோடு சேர்ந்து உழைக்கும் கோடிக்கணக்கானோர் வாழும் ஒரு நாட்டில் - இந்த ஊழல் எவ்வளவு பெரிய குற்றம்?



ஆனால், குற்றஞ்சாட்டப்பட்டிருக்கும் ஆ. ராசா மீண்டும் அமைச்சராகி "நாளை மற்றுமொரு நாளே' என்று தன் பணிகளைத் தொடர்கிறார்; பிரதமர் மன்மோகன் சிங், அரசு தன் கடமையைச் செய்வதாகக் கூறுகிறார்; எதிர்க்கட்சிகள் சில மணி நேரக் கூச்சலோடும் அறிக்கைகளுடனும் முடித்துக் கொள்கின்றன; ஊடகங்கள் சில பத்திச் செய்திகளோடு முடித்துக் கொள்கின்றன; மக்களோ எல்லாவற்றையும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.



"ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே, ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோம் என்று ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே...'! Please forward this message to all of your friends..... Think and act -- *உங்கள் நண்பன் ............. *S.SENTHILKUMAR. Lecturer, Department of Management studies, 

கருத்து · பகிர்தல்
Sanjeevi Manoharan சீ..நாமெல்லாம் முட்டாள்கள்!
Ssr Sukumar முட்டாள்கள் அல்ல நண்பா.உடனடியாக செயல்பட் முடியாதவர்கள்.ஐந்து வருடத்திற்கு ஒரு முறை வரும் வாய்ப்பையும் முறையாக பயன்படுத்தாதவர்கள்?????
சில வினாடிகள் முன்னால் · விருப்பம்விருப்பமின்மைஉங்கள் கருத்தைச் சொல்லுங்கள்...
முட்டாள்கள் அல்ல நண்பா.உடனடியாக செயல்பட் முடியாதவர்கள்.ஐந்து வருடத்திற்கு ஒரு முறை வரும் வாய்ப்பையும் முறையாக பயன்படுத்தாதவர்கள்?????...
thank you ramasamy duraipandi....

enna nadakkuthu nattula என்ன நடக்குது நாட்டில: ஜல் புயலும் மகனின் அமெரிக்க பயணமும்

enna nadakkuthu nattula என்ன நடக்குது நாட்டில: ஜல் புயலும் மகனின் அமெரிக்க பயணமும்

Sunday, 7 November 2010

ஜல் புயலும் மகனின் அமெரிக்க பயணமும்

சந்தானம் என் அக்கா மகன்.புற்று நோய் சம்பந்தமான ஆராய்ச்சியில் டாக்டர் பட்டம் வாங்கியவன்.ராத்திரி பகலாக ஆராய்ச்சி செய்து இப்போதுதான் பட்டம் வாங்கினான்.
அவனுக்கு கல்யாணத்திற்கு தீவிரமாக பெண் பார்த்தோம்.ஒன்றும் சரியாக அமையவில்லை.மேல் ஆராய்ச்சிக்கு அமெரிக்கா செல்ல வேண்டும் என்பது அவனது திட்டம். மனைவியுடன் அனுப்பவேண்டும் என்பது சகோதரியின் விருப்பம்.இந்த காலத்தில் பெண் அமைவது கடினமாக உள்ளது.

அமெரிக்காவிலிருந்து அழைப்பு கடிதம் வந்துவிட்டது.நவம்பர் மாதம் 8 ந்தேதி அதிகாலையில் நான்கு மணிக்கு பிரிட்டிஷ் ஏர்வேஸ்-ல் செல்லவேண்டும்.ஒரு மாதம் முன்பே டிக்கட் அனுப்பிவிட்டது அமெரிகக அலுவலகம்.

நூறு பேருக்குமேல் உள்ள பெரிய குடும்பத்தில் அமெரிக்கா போகும் முதல் ஆள்.நல்ல பெட்டியாக வாங்கு.தேவையான மாத்திரைகள் எடுத்துக்கொள்.சைவ உணவு அதிகம் கிடைக்காது.எல்லாவற்றிலும் மாட்டிறைச்சி இருக்கும்.கேட்டு சாப்பிடு.என்று ஆளாளுக்கு ஆலோசனைகள்.உள்ளூரிலிருந்தும், வெளிநாட்டிலிருக்கும் நண்பர்களிடமிருந்தும் போனில் அழைப்புகள் வந்தவண்ணமிருந்தன.இதில் தீபாவளி வேறு.

எல்லாம் நல்லாத்தான் போய்க்கொண்டிருந்தது.திடீரென்று இந்த 'ஜல்'புயல் பற்றி செய்தி வரும்வரை.கிளம்புவதற்கு நான்கு நாட்களுக்கு முன் மழை கொட்ட ஆரம்பித்துவிட்டது.வழியனுப்ப உறவினர் கள கூட்டம் வீடு நிரம்பி வழிய கல்யாண வீடு மாதிரி ஜே ஜே என்றாகிவிட்டது.காலையிலிருந்து கரண்டை கட் பண்ணி விட்டார்கள்.புயல் கரையை கடந்த பிறகுதான் மின்சாரம் வரும் என்றார்கள். புயல் சென்னைக்கும் நெல்லூருக்கும் இடையே தரையை கடக்கும், என்று வந்த செய்திகள் எல்லாம் வயிற்றை கலக்கின.

பாவம் சந்தானம் சரியாக தூங்கி பத்து நாளாகிவிட்டது.வீட்டிலோ கூட்டம்.படுக்க கூட இடம் இல்லை.புயலால் பயணத்தை தொடரலாமா என்று ஒரே குழப்பம்.அதிகாலை நான்கு மணிக்கு கிளம்பும் விமானத்திற்கு,ஒரு மணிக்கே அங்கு இருக்க வேண்டும்.
மாலை ஆறு மணிக்கு மின்சாரம் வந்தது.மோட்டார் போடாமல் மக்கள் குளிக்காமல்,சாப்பிட்ட பாத்திரங்கள் கழுவாமல் ஒரே இம்சை.மழை தண்ணீர்,கேன் வாட்டர் என்று ஓரளவிற்கு நிலைமையை சமாளித்தோம்.
பன்னிரண்டு மணிக்கு காரில் கிளம்பினோம்.கிண்டியருகே மரம் ரோடின் குறுக்கே கிடந்ததால் நீளமாக வண்டிகள் நின்றுகொண்டிருந்தன.வேளச்சேரி ஆதம்பாக்கம் நங்கநல்லூர் என்று சுற்றி ஒரு வழியாக ஏர்போர்ட்டுக்கு வந்து சேர்ந்தோம்.

இன்று பிளைட் இருக்குமா இருக்காதா, தாமதமாகுமா என்றெல்லாம் கவலையுடன் வந்த எங்களுக்கு பிரிட்டிஷ் விமானத்தை பார்த்ததும் நிம்மதியாயிற்று. சரியான நேரத்திற்கு விமானம் கிளம்பிச்சென்றது."வெள்ளைக்காரன், வெள்ளைக்காரன்தான் என்றார் ஒரு பெரியவர்."ஜல்"புயல் பலவீனமடைந்து வருகிறது என்றது டி.வி.செய்தி.இத்தனை கலாட்டாவில் பலவீனம் ஆனது நாங்கதான்.

Tuesday, 2 November 2010

Interview with Jeyamohan

Interview with Jeyamohan

Iron Lady of TN - Part2

Walk the Talk: M Karunanidhi

See My Iron Lady!!! Part 3

See My Iron Lady!!! Part 1 of 3

soorya kathir.com

sooryakathir.com charu-vin

charu niveditha writer:வரும் தேர்தலில் தி.மு.க.தோற்பது உறுதி.-சாரு.

‘‘எழுதி வைத்துக் கொள்ளுங்கள்; வரும் தேர்தலில் திமுக தோற்கப் போவது உறுதி. காங்கிரஸைப் பொறுத்தவரை ராகுல் காந்தி அதிமுகவுடன் கூட்டணி வைக்கலாம் என்ற எண்ணம் கொண்டவர். சோனியாவின் விருப்பம் அதற்கு மாறானது. காரணம், தன்னுடைய அடியாளான ராஜபக்ஷேவை வைத்து இலங்கைத் தமிழர்களை ஒழித்துக் கட்டிய படுபாதகச் செயலை கருணாநிதி கண்டுகொள்ள வில்லை; முரசொலி என்ற பத்திரிகையில் கவிதை மட்டுமே எழுதினார் என்பதால் சோனியாவுக்கு கருணாநிதியின் மீது தனிப்பட்ட நன்றி உணர்வு உண்டு. ஆனால் தமிழ்நாட்டில் காங்கிரஸில் உள்ள தொண்டர்களின் எண்ணிக்கையை விட தலைவர்களின் எண்ணிக்கை ஜாஸ்தி என்பதால் காங்கிரஸ் திமுகவுடன் இருந்தாலும் இல்லாவிட்டாலும் திமுக தோற்பது உறுதி. இது கருணாநிதிக்கும் தெரியும். தமிழ்நாட்டின் உளவுத்துறை அதிகாரிகள் அவ்வளவு ஒன்றும் திறமைக் குறைவானவர்கள் இல்லை. இதற்குள் கருணாநிதியிடம் மக்களின் எண்ண ஓட்டத்தை அவரிடம் சொல்லியிருப்பார்கள். இந்த விஷயத்தில் கருணாநிதி பரவாயில்லை. குறைந்த பட்சம், அதிகாரிகள் சொல்வதை காது கொடுத்தாவது கேட்பார். ஜெயலலிதாவாக இருந்தால் உண்மைநிலையைச் சொன்ன அதிகாரிகளை சஸ்பென்ட் செய்து விடும் அளவுக்கு ‘ஜனநாயக உணர்வு’ கொண்டவர். வரப் போவது அதிமுக ஆட்சிதான் என்பதாலேயே தமிழக மக்களின் அடுத்த ஐந்து ஆண்டுகளைப் பற்றி இப்போதே எனக்குக் கவலையாக இருக்கிறது. ஏனென்றால், தமிழ்நாட்டை இரண்டு திராவிடக் கட்சிகளும் குத்தகை எடுத்துக் கொண்டு கொள்ளை அடிக்கின்றன. ஆனால், திமுக ஆட்சியில் கொள்ளையின் அளவு அதிகம். அவர்கள் 100 கோடி என்றால் இவர்கள் 60,000 கோடி 70,000 கோடி என்று அடிக்கிறார்கள். கக்கன் போன்ற தலைவர்களை எண்ணி ஏக்கம் கொள்கிறேன்’’நன்றி.சுர்யகதிர்.காம்

Friday, 29 October 2010

anna parri chokkan

ஈரோட்டு பெரியவரால் வெளிச்சத்திற்கு வந்தவர்கள் அதிகம்.அதில் நாத்திகம் பேசி பேச்சுத்திறமையால் பாமர மக்களை கவர்ந்தவர் அண்ணா,புள்ளிவிவரங்களை கூறி பேசும் நாவலர்,மக்களின் பிரச்சனைகளை பேசும் மதியழகன்(அவர் தம்பி தான் கே.எ.கிருஷ்ணசாமி)பார்ப்பனர்களை ஆவேசமாக திட்டும் என்.வி.நடராசன்,சொல்லின் செல்வர்
ஈ வே.கி.சம்பத், இவர்களைத்தான் ஐம்பெரும் தலைவர்கள் என்று அழைப்பார்கள்.அதில் கருணாநிதி இல்லை.
காங்கிரெஸ் எதிர்ப்பு,ரேஷனில் அரிசி கிடைக்காதது,வேலை கிடைக்காதது என்று மக்களின் கோபத்தை அண்ணாவின் பேச்சு ஆட்சியில் அமர்த்தியது.இது அண்ணாவே எதிர்பார்க்காத ஒன்று. ம்ம்ம் இதெல்லாம் பேசி என்ன பயன்.ஈரோடு செல்ல காசில்லாதவர் இன்று ஆசியாவில் குறிப்பிடத்தக்க பணக்காரர்! எப்படி?ஈரோட்டுக்காரர் நிலம் உழைப்பு,அண்ணாவின் மார்கட் தந்திரம்!மு.க.அறுவடை செய்துகொடிருக்கிறார்! ஆனால் ஒன்று நிச்சயமையா! ஒரு அந்நிய மொழியை மைய்யப்படுத்தி(பூச்சாண்டி காட்டி மாணவர்களை போராட்ட களத்தில் இறக்கி ஆட்சியை பிடித்து கோடி கொடியாக சம்பாதிப்பதற்கு வழி வகுத்த அண்ணா தீர்கதரிசி !! ஆனால் அவர் வளர்த்த மகன் பரிமளம் வறுமையில் இறந்துபோனார் என்கிறார்கள் வயித்தெரிச்சல் பிடித்த மக்கள்! அண்ணா நாமம் நல்லா விலை போகுது.
Krishnan Balaa also commented on Parasuram Sv's குறிப்பு "அறிவியல்பூர்வமான இந்து மதம்".

Krishnan எழுதியது
மேலும் ஜோதிடம் எந்த மத்தையும் சார்ந்திருக்கவில்லை.

இன்று உலகம் முழுவதிலும் ஜோதிடங்கள் ஆராயப் படுகின்றன;பேசப் படுகின்றன.எழுதப் படுகின்றன.

இந்தியாவில் இது காலாகாலமாய் ரிஷிகளாலும் விசேஷ அறிவுள்ளவர்களாலும் பின் பற்றப் பட்டு அரசர்களுக்கும் தேவைப் படுவோருக்கும் சொல்லப் பட்டு வந்தது.

அவ்வாறு ஜோதிடம் கேட்கும் சமயங்களில் அதற்கென்று தனி மரியாதைகளும் நேரங்களும் ஒதுக்கி,பய பக்தியோடு நம் முன்னோர் இதைக் கேட்டு வந்தனர்.

ஜோதிடம் ஒரு அறிவியல் என்பதற்கு இன்றுள்ள பஞ்சாங்கத்தை உலகம் முழுவதும் பின் பற்றி வருவது ஒன்றே சான்று.

இதைப் ’பழைய பஞ்சாங்கம்’ என்று எவராவது எள்ளி நகை செய்வாரானால்,அவரை என்ன என்போம்?

josiam

Krishnan Balaa also commented on Parasuram Sv's குறிப்பு "அறிவியல்பூர்வமான இந்து மதம்".

Krishnan எழுதியது
மேலும் ஜோதிடம் எந்த மத்தையும் சார்ந்திருக்கவில்லை.

இன்று உலகம் முழுவதிலும் ஜோதிடங்கள் ஆராயப் படுகின்றன;பேசப் படுகின்றன.எழுதப் படுகின்றன.

இந்தியாவில் இது காலாகாலமாய் ரிஷிகளாலும் விசேஷ அறிவுள்ளவர்களாலும் பின் பற்றப் பட்டு அரசர்களுக்கும் தேவைப் படுவோருக்கும் சொல்லப் பட்டு வந்தது.

அவ்வாறு ஜோதிடம் கேட்கும் சமயங்களில் அதற்கென்று தனி மரியாதைகளும் நேரங்களும் ஒதுக்கி,பய பக்தியோடு நம் முன்னோர் இதைக் கேட்டு வந்தனர்.

ஜோதிடம் ஒரு அறிவியல் என்பதற்கு இன்றுள்ள பஞ்சாங்கத்தை உலகம் முழுவதும் பின் பற்றி வருவது ஒன்றே சான்று.

இதைப் ’பழைய பஞ்சாங்கம்’ என்று எவராவது எள்ளி நகை செய்வாரானால்,அவரை என்ன என்போம்?
ignorant?
Krishnan Balaa also commented on Parasuram Sv's குறிப்பு "அறிவியல்பூர்வமான இந்து மதம்".

Krishnan எழுதியது
மேலும் ஜோதிடம் எந்த மத்தையும் சார்ந்திருக்கவில்லை.

இன்று உலகம் முழுவதிலும் ஜோதிடங்கள் ஆராயப் படுகின்றன;பேசப் படுகின்றன.எழுதப் படுகின்றன.

இந்தியாவில் இது காலாகாலமாய் ரிஷிகளாலும் விசேஷ அறிவுள்ளவர்களாலும் பின் பற்றப் பட்டு அரசர்களுக்கும் தேவைப் படுவோருக்கும் சொல்லப் பட்டு வந்தது.

அவ்வாறு ஜோதிடம் கேட்கும் சமயங்களில் அதற்கென்று தனி மரியாதைகளும் நேரங்களும் ஒதுக்கி,பய பக்தியோடு நம் முன்னோர் இதைக் கேட்டு வந்தனர்.

ஜோதிடம் ஒரு அறிவியல் என்பதற்கு இன்றுள்ள பஞ்சாங்கத்தை உலகம் முழுவதும் பின் பற்றி வருவது ஒன்றே சான்று.

இதைப் ’பழைய பஞ்சாங்கம்’ என்று எவராவது எள்ளி நகை செய்வாரானால்,அவரை என்ன என்போம்?
Krishnan Balaa also commented on Parasuram Sv's குறிப்பு "அறிவியல்பூர்வமான இந்து மதம்".
மேலும் ஜோதிடம் எந்த மத்தையும் சார்ந்திருக்கவில்லை.

இன்று உலகம் முழுவதிலும் ஜோதிடங்கள் ஆராயப் படுகின்றன;பேசப் படுகின்றன.எழுதப் படுகின்றன.

இந்தியாவில் இது காலாகாலமாய் ரிஷிகளாலும் விசேஷ அறிவுள்ளவர்களாலும் பின் பற்றப் பட்டு அரசர்களுக்கும் தேவைப் படுவோருக்கும் சொல்லப் பட்டு வந்தது.

அவ்வாறு ஜோதிடம் கேட்கும் சமயங்களில் அதற்கென்று தனி மரியாதைகளும் நேரங்களும் ஒதுக்கி,பய பக்தியோடு நம் முன்னோர் இதைக் கேட்டு வந்தனர்.

ஜோதிடம் ஒரு அறிவியல் என்பதற்கு இன்றுள்ள பஞ்சாங்கத்தை உலகம் முழுவதும் பின் பற்றி வருவது ஒன்றே சான்று.

இதைப் ’பழைய பஞ்சாங்கம்’ என்று எவராவது எள்ளி நகை செய்வாரானால்,அவரை என்ன என்போம்?

Thursday, 28 October 2010

இந்து மதத்தின் பெருமையை 'நாசா'உறுதிப்படுத்துகிறது.

www.LiveTips.bizஅறிவியல்பூர்வமான இந்து மதம்by Parasuram Sv on 28 அக்டோபர் 2010, 12:34 க்கு
சில வருடங்களுக்கு முன்பு,ஒரு அமெரிக்க செயற்கைக்கோள் பூமியின் குறிப்பிட்ட பகுதியினைக் கடக்கும் போது மட்டும் 3வினாடிகள்

ஸ்தம்பித்து விடுகிறது.3வினாடிகளுக்குப் பிறகு வழக்கம் போல வானில் பறக்க ஆரம்பித்துவிடுகிறது.
எந்த வித பழுதும் செயற்கைக்கோளில்-அதன் கருவிகளில் ஏற்படுவதில்லை
.இந்த சம்பவம் நாசாவிற்கு அதிர்ச்சி கலந்த ஆச்சரியத்தை தந்தது.இது எப்படி சாத்தியம்?என்பதை ஆராய்ந்தது.kiடைத்த ஆய்வு முடிவு-நாசாவை மட்டுமல்ல..உலகத்தையே மிரள வைத்தது.ஆம்!நமது இந்து மதம் எவ்வளவு விஞ்ஞானபூர்வ மானது என்பதை நமக்கே உணர்த்தியுள்ளது.
எந்த ஒரு செயற்கைக்கோளும் பூமியில்-இந்தியாவின்-தமிழ்நாடு அருகில் உள்ள-புதுச்சேரியின் திருநள்ளாறு-ஸ்ரீதர்ப்பணே…வரர் கோயிலுக்கு நேர் மேலே உள்ள வான்பகுதியினைக் கடக்கும் போது 3 வினாடிகள் …தம்பித்துவிடுகின்றன.அப்படி ஸ்தம்பிப்பதற்குக் காரணம்.. ...ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வினாடியும் சனிக்கிரகத்திலிருந்து கண்ணுக்குப் புல்னாகாத கருநீலக்கதிர்கள் அந்தக் கோயில் மீது விழுந்து கொண்டே இருக்கின்றன.
2 1/2 வருடங்களுக்கு ஒரு முறை நடக்கும்-ஒவ்வொரு சனிப் பெயர்ச்சியின் போதும் இந்த கருநீலக்கதிர்களின் அடர்த்தி 45நாட்கள் வரை மிக அடர்த்தியாக இருக்கின்றன.
விண்வெளியில் சுற்றிக் கொண்டிருக்கும் செயற்கைக் கோள்கள் இந்த கருநீலக்கதிர்கள் பாயும் பகுதிக்குள் நுழையும் போது ஸ்தம்பித்துவிடுகின்றன.
அதே சமயம்,செயற்கைக்கோளுக்கு எந்த வித பாதிப்பும் ஏற்படுவதில்லை.
இதில் குறிப்பிடத் தக்க அம்சம் என்னவென்றால்
,இந்தக் கோவில்தான் இந்துக்களால் “சனிபகவான்”…தலம் என்று போற்றப்படுகிறது.
ஆக,இந்துக்கள் உலகிலேயே அறிவுத்திறனும்,அறிவியலில் மிக நீண்ட பாரம்பரியமும் கொண்டவர்கள் என்பது இதன் மூலம் புலனாகிறது.
இந்த சம்பவத்திற்குப் பிறகு,நாசா வின்நானிகள் பல முறை திருநள்ளாற்றிக்கு நேரில் வந்து பல ஆராய்ச்சிகள் செய்துவிட்டனர்.
மனிதனுக்கு மீறிய சக்தி உண்டு என்பதினை உணர்ந்தனர்
.அவர்களும் திருநள்ளாறு சனிபகவானை கையெடுத்துக் கும்பிட்டு வழிபட்டனர்.
இன்று வரையிலும்,விண்ணில் மனிதனால் ஏவப்பட்டுள்ள செயற்கைக்கோள்கள் திருநள்ளாறு பகுதியைக் கடக்கும் போது 3 வினாடிகள் ஸ்த்தம்பித்துக் கொண்டே இருக்கின்றன
.இப்போது சொல்லுங்கள்... ...உலகில் மிகச் சிறந்தது நமது இந்து மதமா? இல்லை மற்றவைகளா?
நாம் ஏன் நமது பெருமைகளை நமது சந்ததிகளுக்குச்
சொல்லுவது இல்லை.
raஜஸ்தானில் (ஜெய்சல்மீர் அருகில்) தனோடு (இந்திய எல்லை) என்னுமிடத்தில் அம்மன் கோவிலின் மீது இந்-பாக் ப...ோரின் போடப்பட்ட குண்டுகள் எதுவும் வெடிக்காமல் பார்வைக்கு கோவிலில் வைக்கப்பட்டுள்ளது.இந்த கோவில் எல்லை பாதுகாப்பு படையின் கீழ் உள்ளது.இந்த கோவிலில் வழிபட்டே எந்த போருக்கும் (கார்கில் உட்பட) செல்வார்கள் என்று அங்கிருந்த மக்கள் கூறினர்.(இது எவ்வலு உண்மை என தெரியவில்லை).வெடிக்காத குண்டுகள் உண்மை -நான் சென்று வந்த கோவிலில் இதுவும் ஒன்று.மேலும் பார்க்க
Krishnan Balaa தெய்வீக நம்பிக்கை கொண்டோர்க்கு இது தேவையான தகவல்.
ஒருவருக்குப் பிடித்தைச் சொலவ்தில் ஏன் கலைகொள்ள வேண்டும்?நண்பரே
Krishnan Balaa பைத்தியங்கள் சொல்லத்தான் செய்யும்?
Thamiz Parayar நண்பர்களே நான் ஒரு மூட ஆத்திகனாக இருந்து அரைகுறை நாத்திகனாக மாறி பின்பு முழு ஆத்திகனாக மாறியதால் சொல்கின்றேன். இந்தியாவின் மிகப் பெரிய பொக்கிஷம் அதன் தனித்தன்மை , ஜோதிடம் ,மதம் ...சில குப்பையான விஷயங்களும் இருக்கின்றன...சாதியம்/லஞ்சம் இப்படி. மதத்தில் ஒன்றிய ஜோதிடம் இந்தியாவில் வலிமையாக இருக்கின்றது.
thanks to Mr.parasuram for the rare information

இந்து மதத்தின் பெருமையை 'நாசா'உறுதிப்படுத்துகிறது.

அறிவியல்பூர்வமான இந்து மதம்by Parasuram Sv on 28 அக்டோபர் 2010, 12:34

சில வருடங்களுக்கு முன்பு,ஒரு அமெரிக்க செயற்கைக்கோள் பூமியின் குறிப்பிட்ட பகுதியினைக் கடக்கும் போது மட்டும் 3வினாடிகள்
ஸ்தம்பித்து விடுகிறது.3வினாடிகளுக்குப் பிறகு வழக்கம் போல வானில் பறக்க ஆரம்பித்துவிடுகிறது.

எந்த வித பழுதும் செயற்கைக்கோளில்-அதன் கருவிகளில் ஏற்படுவதில்லை

.இந்த சம்பவம் நாசாவிற்கு அதிர்ச்சி கலந்த ஆச்சரியத்தை தந்தது.இது எப்படி சாத்தியம்?என்பதை ஆராய்ந்தது.
கிடைத்த ஆய்வு முடிவு-நாசாவை மட்டுமல்ல..உலகத்தையே மிரள வைத்தது.ஆம்!நமது இந்து மதம் எவ்வளவு விஞ்ஞானபூர்வ மானது என்பதை நமக்கே உணர்த்தியுள்ளது.
எந்த ஒரு செயற்கைக்கோளும் பூமியில்-இந்தியாவின்-தமிழ்நாடு அருகில் உள்ள-புதுச்சேரியின் திருநள்ளாறு-ஸ்ரீதர்ப்பணே…வரர் கோயிலுக்கு நேர் மேலே உள்ள வான்பகுதியினைக் கடக்கும் போது 3 வினாடிகள் …தம்பித்துவிடுகின்றன.அப்படி ஸ்தம்பிப்பதற்குக் காரணம்.. ...ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வினாடியும் சனிக்கிரகத்திலிருந்து கண்ணுக்குப் புல்னாகாத கருநீலக்கதிர்கள் அந்தக் கோயில் மீது விழுந்து கொண்டே இருக்கின்றன.
2 1/2 வருடங்களுக்கு ஒரு முறை நடக்கும்-ஒவ்வொரு சனிப் பெயர்ச்சியின் போதும் இந்த கருநீலக்கதிர்களின் அடர்த்தி 45நாட்கள் வரை மிக அடர்த்தியாக இருக்கின்றன.
விண்வெளியில் சுற்றிக் கொண்டிருக்கும் செயற்கைக் கோள்கள் இந்த கருநீலக்கதிர்கள் பாயும் பகுதிக்குள் நுழையும் போது ஸ்தம்பித்துவிடுகின்றன.
அதே சமயம்,செயற்கைக்கோளுக்கு எந்த வித பாதிப்பும் ஏற்படுவதில்லை.
இதில் குறிப்பிடத் தக்க அம்சம் என்னவென்றால்
,இந்தக் கோவில்தான் இந்துக்களால் “சனிபகவான்”…தலம் என்று போற்றப்படுகிறது.
ஆக,இந்துக்கள் உலகிலேயே அறிவுத்திறனும்,அறிவியலில் மிக நீண்ட பாரம்பரியமும் கொண்டவர்கள் என்பது இதன் மூலம் புலனாகிறது.




இந்த சம்பவத்திற்குப் பிறகு,நாசா வின்நானிகள் பல முறை திருநள்ளாற்றிக்கு நேரில் வந்து பல ஆராய்ச்சிகள் செய்துவிட்டனர்.

மனிதனுக்கு மீறிய சக்தி உண்டு என்பதினை உணர்ந்தனர்

.அவர்களும் திருநள்ளாறு சனிபகவானை கையெடுத்துக் கும்பிட்டு வழிபட்டனர்.

இன்று வரையிலும்,விண்ணில் மனிதனால் ஏவப்பட்டுள்ள செயற்கைக்கோள்கள் திருநள்ளாறு பகுதியைக் கடக்கும் போது 3 வினாடிகள் ஸ்த்தம்பித்துக் கொண்டே இருக்கின்றன

.இப்போது சொல்லுங்கள்... ...உலகில் மிகச் சிறந்தது நமது இந்து மதமா? இல்லை மற்றவைகளா?

நாம் ஏன் நமது பெருமைகளை நமது சந்ததிகளுக்குச்

சொல்லுவது இல்லை.



· கருத்து ·விருப்பம்விருப்பமின்மை · பகிர்தல்2 நபர்கள் இதை விரும்புகிறார்கள்
Krishnan Balaa நன்றி திரு.பரசுராம்.மிகப் பயனுள்ள கருத்து,விஞ்ஞானம்,மெய்ஞ்ஞானம் இரண்டுக்கும்.

இன்னொரு உண்மையையும் நண்பர்கள் அறிந்து கொள்ள வேண்டும். அது;சனி பகவான் ‘மந்தன்’ என்ற பெயரும் உடையவர். எதையும் தாமதப் படுத்தும் ஆற்றல் உடையவர்.அதனால்தான் தாங்கவொண்ண...... துரயம் வருங்காலத்தில் அவரிடம் சென்று மறாடும்போது துன்பகளை மட்டுப் படுத்தி அவற்றின் வேகத்தைக் கட்டுப் படுத்தி அருள்கிறார் என்பது ஜோதிட அறிவியல் ரீதியான உண்மை. நூற்றுக் கணக்கான பழம் ஜோதிட நூல்கள்ளை ஆராய்ந்து படைத்து உணர்ந்தவன் என்ற முறையில் நான் சொல்லும் இக்கருத்தை எனது அருமை நண்பர் திரு பரசுராம் அறிவார் என்று நம்புகிறேன்.மேலும் பார்க்க
19 மணி நேரம் முன்பு · விருப்பம்விருப்பமின்மை · ஒருவர்
ஏற்றப்படுகின்றது...Mathavan Muniandy உலகில் மிகச் சிறந்தது நமது இந்து மதமா? இல்லை மற்றவைகளா?
நாம் ஏன் நமது பெருமைகளை நமது சந்ததிகளுக்குச்
சொல்லுவது இல்லை.........

sir.... its really a good question.....for few years i oso wondering y our people failed to do so.....
19 மணி நேரம் முன்பு · விருப்பம்விருப்பமின்மைKrishnan Balaa அதன் இயல்பே அதுதான்.

அது ஒன்றும் மதம் என்று எவராலும் தோற்றுவிக்கப் படவில்லை என்பதே உண்மை.

உலகில் இறை அவதாரங்கள் அனைத்தையும் அங்கீகரித்து
...அனைவரும் ஈச்வரனின் அங்கங்களே என்று பறைசாற்றும் தத்துவப் பீடமே இது.மேலும் பார்க்க
18 மணி நேரம் முன்பு · விருப்பம்விருப்பமின்மைRaj Saravanan sir this is really stunning is this data authenticated ?
15 மணி நேரம் முன்பு · விருப்பம்விருப்பமின்மைParasuram Sv YES.
15 மணி நேரம் முன்பு · விருப்பம்விருப்பமின்மைKrishnan Vaidyanathan GREAT INFORMATION FOR MANKIND.
12 மணி நேரம் முன்பு · விருப்பம்விருப்பமின்மை · ஒருவர்
ஏற்றப்படுகின்றது...Venkatesan Kj Hinduism is science based- no second thought about it.but v r not get into the depth of what says (real meaning). அதிசயங்கள் நிறைய உண்டு: ராஜஸ்தானில் (ஜெய்சல்மீர் அருகில்) தனோடு (இந்திய எல்லை) என்னுமிடத்தில் அம்மன் கோவிலின் மீது இந்-பாக் ப...ோரின் போடப்பட்ட குண்டுகள் எதுவும் வெடிக்காமல் பார்வைக்கு கோவிலில் வைக்கப்பட்டுள்ளது.இந்த கோவில் எல்லை பாதுகாப்பு படையின் கீழ் உள்ளது.இந்த கோவிலில் வழிபட்டே எந்த போருக்கும் (கார்கில் உட்பட) செல்வார்கள் என்று அங்கிருந்த மக்கள் கூறினர்.(இது எவ்வலு உண்மை என தெரியவில்லை).வெடிக்காத குண்டுகள் உண்மை -நான் சென்று வந்த கோவிலில் இதுவும் ஒன்று.மேலும் பார்க்க
11 மணி நேரம் முன்பு · விருப்பம்விருப்பமின்மை · ஒருவர்
ஏற்றப்படுகின்றது...Krishnan Balaa தெய்வீக நம்பிக்கை கொண்டோர்க்கு இது தேவையான தகவல்.
11 மணி நேரம் முன்பு · விருப்பம்விருப்பமின்மை · 2 பேர்
ஏற்றப்படுகின்றது...Venkatesan Kj இந்து மதம் ஒரு கலாச்சாரம் என சொன்னால் என்னை பைத்தியம் என்பார்களோ?
11 மணி நேரம் முன்பு · விருப்பம்விருப்பமின்மை · ஒருவர்
ஏற்றப்படுகின்றது...Krishnan Balaa ஒருவருக்குப் பிடித்தைச் சொலவ்தில் ஏன் கலைகொள்ள வேண்டும்?நண்பரே
11 மணி நேரம் முன்பு · விருப்பம்விருப்பமின்மை · ஒருவர்
ஏற்றப்படுகின்றது...Krishnan Balaa பைத்தியங்கள் சொல்லத்தான் செய்யும்?
11 மணி நேரம் முன்பு · விருப்பம்விருப்பமின்மை · ஒருவர்
ஏற்றப்படுகின்றது...Thamiz Parayar நண்பர்களே நான் ஒரு மூட ஆத்திகனாக இருந்து அரைகுறை நாத்திகனாக மாறி பின்பு முழு ஆத்திகனாக மாறியதால் சொல்கின்றேன். இந்தியாவின் மிகப் பெரிய பொக்கிஷம் அதன் தனித்தன்மை , ஜோதிடம் ,மதம் ...சில குப்பையான விஷயங்களும் இருக்கின்றன...சாதியம்/லஞ்சம் இப்படி. மதத்தில் ஒன்றிய ஜோதிடம் இந்தியாவில் வலிமையாக இருக்கின்றது.
3 மணி நேரம் முன்பு · விருப்பம்விருப்பமின்மை · ஒருவர்
ஏற்றப்படுகின்றது...உங்கள் கருத்தைச் சொல்லுங்கள்...
Facebook © 2010 · தமிழ்எங்களைப் பற்றி · விளம்பரம் · உருவாக்குநர்கள் · தொழில் வாழ்க்கைகள் · ரகசியக்காப்பு · விதிகள் · உதவி

Sunday, 24 October 2010

election-2011

திருவள்ளூரும் தி.மு.க.வும்:

தமிழ் நாட்டில் கலைஞர் தலைமையில் ஜனநாயக முற்போக்கு கூட்டணி அமோக வெற்றி பெற்று ஊடகங்களின் கருத்துக்கணிப்பை பொய்யாக்கிவிட்டது. சென்ற முறை 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்ற இந்த கூட்டணியில் இருந்து வெளியேறிய பா.ம.க.,கம்யுனிஸ்ட் கட்சிகளால் பெரிய பாதிப்பு ஏற்படும் என்ற கணக்கை மக்கள் மாற்றிவிட்டார்கள். கூட்டணிக்கணக்கு செல்லாது என்பதை மக்கள் தி,மு,க, கூட்டணிக்கு ஓட்டு போட்டதின் மூலம் நிருபித்து காட்டிவிட்டர்கள். சென்னை, திருபெரும்புதூர் திருவள்ளூர் தொகுதிகளில் வெற்றி பெற்றவர்கள் 25000,31000,19000,33000 என்ற அளவில்தான் அதிக
ஓட்டுக்கள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்கள். திருவள்ளூர் தி.மு.க.கோட்டை என்று இருந்த நிலை இந்த முறை மாறியுள்ளது. தொகுதி சீரமைப்பால் அ.தி.மு.க.ஓட்டு வங்கி அதிகமாக உள்ள தொகுதியாக மாறியுள்ளது, உள்ளங்கை நெல்லிக்கனி போல தெள்ளத்தெளிவாக தெரிகிறது. கூட்டணி ஓட்டுக்களும் சேர்ந்து அ.தி.மு.க.வேட்பாளருக்கு வெற்றி வாய்ப்பை கொடுத்திருக்கிறது. ஊடகங்கள், விலைவாசி, இலங்கைத்
தமிழர் பிரச்சினை, மின்வெட்டு ஆகியவற்றை மையப்படுத்தி பெரும் கூக்குரலிட்டன. ஆனால் மக்கள் மத்தியில் ஒரு பெரும்பான்மையுலள்ள அரசு அமைய வேண்டும் என்பதை நன்றாக உணர்ந்து தி.மு.க.கூட்டணிக்கு
வாக்களித்துள்ளனர். அப்படியானால், திருவள்ளூர் தொகுதியில் ஏன் தோல்வி என்ற கேள்விக்கு பதில்:
தொகுதி சீரமைப்பில் அ.தி.மு.கவும் கூட்டணி கட்சிகளும் அதி அளவிலான வாக்குகளைப் பெற்றன.
2.ஊடகங்களின் தி.மு.க. கூட்டணிக்கு எதிரான பிரச்சாரம்.3.வேட்பாளர், மக்களிடையே மட்டுமல்ல,
கட்சி பிரமுகர்கள், தொண்டர்கள் மத்தியில் அறிமுகம் இல்லாத நிலை. 4.பூந்தமல்லி, ஆவடி போன்ற
பகுதிகளில் இன்னும் அதிகமான வாக்குகள் விழவில்லை.5.மக்கள் ஓட்டிற்கு பணம் எதிர்பார்க்கும் ஒரு சூழ் நிலை. தேர்தல் ஆணையின் கெடுபிடியால் வேட்பாளர் கொடுக்க முடியாத நிலை. இவை எல்லாம் சட்டசபைத்தேர்தலுக்கு வேலை செய்யும் போது கவனத்தில் எடுத்துக்கொண்டால் மறுபடியும் திருவள்ளூர் தி.மு.க.கோட்டை மாறுவது திண்ணம்.
this was written on the outcome of result of last parliment election.
It is applicable for all constituency today for Legislative assembly election-2011.

Saturday, 23 October 2010

simbu's threatining rajinikanth daughter aiswarya

Rajini & Sathyaraj Angry Speech Tamil Actress Bhuvaneshwari Prostitute I...

T.Rajender Angry Speech on Rajini : Adhikaalai.com

Naan yaanai illai kudhirai...summa Taknnu endhiruppen

Naan yaanai illai kudhirai...summa Taknnu endhiruppen

takes a few minutes

Vadivelu comedy 1a

Vadivelu comedy 1

Vadivelu comedy 1

Vadivelu comedy 1c

Vadivelu comedy 1b

M.G. Ramachandran&Bhanumati in Masila Unmai - Alibabavum 40 Thirudargalum

Singara velane deva

Kundrathilae Kumarrunukku

Vel Muruga Vel Muruga Vel (Thaipusam Song) by Bangalore A.R Ramani Ammal...

Friday, 22 October 2010

நன்றிங்க ராசா.. அவர் தளத்தில் இதை பார்த்தால் இன்னும் கொஞ்சம் அவரது சேவையை உணரலாம் http://www.akshayatrust.org/visuals.php

Saturday, 2 October 2010

Thursday, 12 August 2010

ஓடிப் போனவள்

 பால்காரியின் குரல் வழக்கத்தை விட அதிகமாக இருக்கவே வெளியில் வந்து பார்த்தேன். தெருவின் நடுவில் கூட்டமாக இருந்தது. பால்காரிதான் எங்களுக்கு ஏரியா செய்தியாளர். ஒவ்வொரு வீட்டிற்கும் பாலோடு வம்புகளையும் சேர்த்து ஊற்றிவிடுவாள்.
அயல்நாட்டு வங்கி அதிகாரியின் வீட்டின் முன்னால் போலீஸ் ஜீப் நின்றிருந்தது. அவருடைய மகன் ஓடி வந்து "அங்கிள்" அப்பா உங்களை கூப்பிடுகிறார் என்றான். விசாரிக்க வந்த சப் -இன்ஸ்பெக்டர் என்னைப்பார்த்ததும் சல்யூட் அடித்தார். இவருடைய பெண்ணை காணவில்லை என்றும் எதிர் வீட்டுப்பையனும் அவனுடைய பெற்றோரும்தான் காரணம் என்று புகார் கொடுத்திருக்கிறார். இரு தரப்பினருமே எனக்கு நன்கு அறிமுகமானவர்கள். எஸ்.ஐ.யை, புகாரை பதிவு செய்ய வேண்டாம் சொல்லிவிட்டு இருவரையும் என்னுடைய வீட்டிற்கு அழைத்து வந்தேன். ஜீப் சென்றுவிட்டது. வங்கி அதிகாரியின் பெண்ணிற்கு திருமண ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கின்ற நேரத்தில் அவர் மனம் படும் வேதனையை என்னால் உணர முடிகிறது.
ஒரு வாரம் வரை பொறுமையாக இருப்போம் என்று இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தி அனுப்பிவிட்டு பையனையும் பெண்ணையும் தேடும் பணியை முடுக்கிவிட்டேன்.இரண்டே நாட்களில் இருவரும் பெங்களூரில் இருப்பதை கண்டுபிடித்து தக்க ஆட்களின் மூலம் கோவைக்கு கொண்டு வரப்பட்டார்கள். இருவரையும் தனித்தனியாக விசாரித்ததில் வெளி வந்த செய்தி அதிர்ச்சியானது. பெண்ணிற்கு ஏற்பாடு செய்த பையனை பிடிக்கவில்லை. அப்பாவிடம் எடுத்து கூறியும் கேட்காததால் அம்மாவும் தனக்காக பேசவில்லை என்ற கோபத்தில் பெங்களூரில் உள்ள தோழியின் பெற்றோரிடம் போனில் தகவல் சொல்லிவிட்டு எதிர் வீட்டு பையனுடன் கிளம்பிவிட்டாள். தனக்கு பிடிகாத பையனை திருமணம் செய்து வைக்கிறார்கள். என்பது தான் பெண்ணின் புகார். சரி கூடச்சென்ற பையன்? எட்டு வயது சிறுவன் அவன். வங்கி நண்பரை அழைத்து புத்தி மதி கூறி அனுப்பினேன்.

இடுகையிட்டது thamizhan நேரம் 10:25 am இதை மின்னஞ்சல் செய்க BlogThis! Twitter இல் பகிர் Facebook இல் பகிர் Google Buzz க்கு பகிர்க 0 கருத்துரைகள்:



கருத்துரையிடுக







பழைய இடுகைகள் முகப்பு

இதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom) பக்கங்கள்

முகப்பு

ஒரு வாரம் வரை பொறுமையாக இருப்போம் என்று இரு தரப்பி...

வலைப்பதிவு காப்பகம்

▼ 2010 (2)

▼ August (1)

ஒரு வாரம் வரை பொறுமையாக இருப்போம் என்று இரு தரப்பி...

► July (1)

குஞ்சு மிதித்த கோழிகள்

என்னைப் பற்றி

thamizhan

எனது முழு சுயவிவரத்தைக் காண்க











Simpleடெம்ப்ளேட் உருவாக்கியதுJosh Peterson. இயக்குவது Blogger.

Friday, 30 July 2010

குஞ்சு மிதித்த கோழிகள்

நள்ளிரவில் கேட்ட பயங்கரமான அலறலால் திடுக்கிட்டு விழித்து வெளியில் வந்தேன். காரின் பின்னால் கத்திக்கொண்டே ஒரு பெரியவர் ஓடிக்கொண்டிருந்தார். வேகமாக படிகளில் இறங்கி என் வண்டியை கிளப்பி பாய்ந்தேன். என்.எஸ்.ஆர்.ரோடிலிருந்து, தடாகம் ரோட்டில் திரும்பிய கார் வேகமெடுத்தது. அருகில் சென்று கார் எண்ணை மொபைல் கேமராவில் பதிவு செய்தேன். பிரச்சினை தெரியாமல் காரை மடக்கவேண்டாம் என்று பெரியவரை வண்டியில் ஏற்றி அருகில் இருந்த டீக்கடையில் நிறுத்தினேன். அவர் தேங்காய் பன்னும், டீயும் சாப்பிட்டு முடித்ததும் விசாரித்ததில், மருமகளின் வற்புறுத்தலால், மகன், பெற்ற தகப்பனை கேரள கிராமத்திலிருந்து 150 கி.மி. தொலைவில் உள்ள கோவையில் விட்டுச் சென்றிருக்கிறான்.அவர் பேசிய தூய மலையாளத்தை டீக்கடை நாயர் மொழிபெயர்த்து சொன்னார். மலையாளம் தவிர வேறு மொழி தெரியாத அவர் திரும்பி வரமாட்டார் என்றெண்ணி செய்திருக்கிறான்.அந்த நள்ளிரவில், உதவி கமிஷ ணரை செல்லில் அழைத்து விவரம் கூறிக்கொண்டிருக்கும்போதே ரோந்து போலீசார் வந்து இறங்கினர்.பெரியவரையும் டீக்கடை நாயரையும் ஆர்.எஸ்.ப்புறம் காவல் நிலையத்தில் விசார்த்தார்கள். வாளையார் செக் போஸ்டில் கார் மடக்கப்பட்டு கொண்டுவரப்பட்டது.போலீஸாரின் முறையான விசாரிப்புக்கு பிறகு மகனும் உடன் வந்த நண்பனும் உண்மையை ஒப்புக்கொண்டனர். பெரியவரின் மருமளையும் வரவழைத்து முறையாக வழக்கு பதிவு செய்து ரிமான்ட் செய்துவிட்டார்கள்.இதை விசாரித்த காவல் துறை உதவி ஆணையர் அடுத்த நாள் காலையில் என்னை பார்க்க வந்திருந்தார். அந்த பெரியவரின் கேசை விசாரித்ததில் இருந்து மனசே சரியில்லை என்றும் நான் அவருக்கு ஒரு உதவி செய்யவேண்டும் என்று கேட்டார். செய்கிறேன் என்று கூறியதும், சென்ற வாரம் அவருடைய தந்தையை முதியோர் இல்லத்தில் சேர்த்ததாகவும், இப்போது அவரை வீட்டுக்கு அழைத்து வர முடிவு செய்துருப்பதாகவும், நீங்கள்தான் அவரிடம் பேசி சமாதானம் செய்ய வேண்டும் என்றார். வண்டி சாவியை கையில் எடுத்தேன்.