Tuesday, 2 November 2010

charu niveditha writer:வரும் தேர்தலில் தி.மு.க.தோற்பது உறுதி.-சாரு.

‘‘எழுதி வைத்துக் கொள்ளுங்கள்; வரும் தேர்தலில் திமுக தோற்கப் போவது உறுதி. காங்கிரஸைப் பொறுத்தவரை ராகுல் காந்தி அதிமுகவுடன் கூட்டணி வைக்கலாம் என்ற எண்ணம் கொண்டவர். சோனியாவின் விருப்பம் அதற்கு மாறானது. காரணம், தன்னுடைய அடியாளான ராஜபக்ஷேவை வைத்து இலங்கைத் தமிழர்களை ஒழித்துக் கட்டிய படுபாதகச் செயலை கருணாநிதி கண்டுகொள்ள வில்லை; முரசொலி என்ற பத்திரிகையில் கவிதை மட்டுமே எழுதினார் என்பதால் சோனியாவுக்கு கருணாநிதியின் மீது தனிப்பட்ட நன்றி உணர்வு உண்டு. ஆனால் தமிழ்நாட்டில் காங்கிரஸில் உள்ள தொண்டர்களின் எண்ணிக்கையை விட தலைவர்களின் எண்ணிக்கை ஜாஸ்தி என்பதால் காங்கிரஸ் திமுகவுடன் இருந்தாலும் இல்லாவிட்டாலும் திமுக தோற்பது உறுதி. இது கருணாநிதிக்கும் தெரியும். தமிழ்நாட்டின் உளவுத்துறை அதிகாரிகள் அவ்வளவு ஒன்றும் திறமைக் குறைவானவர்கள் இல்லை. இதற்குள் கருணாநிதியிடம் மக்களின் எண்ண ஓட்டத்தை அவரிடம் சொல்லியிருப்பார்கள். இந்த விஷயத்தில் கருணாநிதி பரவாயில்லை. குறைந்த பட்சம், அதிகாரிகள் சொல்வதை காது கொடுத்தாவது கேட்பார். ஜெயலலிதாவாக இருந்தால் உண்மைநிலையைச் சொன்ன அதிகாரிகளை சஸ்பென்ட் செய்து விடும் அளவுக்கு ‘ஜனநாயக உணர்வு’ கொண்டவர். வரப் போவது அதிமுக ஆட்சிதான் என்பதாலேயே தமிழக மக்களின் அடுத்த ஐந்து ஆண்டுகளைப் பற்றி இப்போதே எனக்குக் கவலையாக இருக்கிறது. ஏனென்றால், தமிழ்நாட்டை இரண்டு திராவிடக் கட்சிகளும் குத்தகை எடுத்துக் கொண்டு கொள்ளை அடிக்கின்றன. ஆனால், திமுக ஆட்சியில் கொள்ளையின் அளவு அதிகம். அவர்கள் 100 கோடி என்றால் இவர்கள் 60,000 கோடி 70,000 கோடி என்று அடிக்கிறார்கள். கக்கன் போன்ற தலைவர்களை எண்ணி ஏக்கம் கொள்கிறேன்’’நன்றி.சுர்யகதிர்.காம்

No comments: