Sunday, 7 October 2012

enna nadakkuthu என்ன நடக்குது: தங்கள் தலைவரின் கட்டளைப்படி தமிழகமெங்கும் அதிமுகவி...

enna nadakkuthu என்ன நடக்குது: தங்கள் தலைவரின் கட்டளைப்படி தமிழகமெங்கும் அதிமுகவி...: தங்கள் தலைவரின் கட்டளைப்படி தமிழகமெங்கும் அதிமுகவின் ஆட்சியின் குறைகளை பிட் நோடிஸ் களாக வீடு வீடாக தெரு தெருவாக ஊர் ஊராக திமுக தொண்டர்கள், ...
தங்கள் தலைவரின் கட்டளைப்படி தமிழகமெங்கும் அதிமுகவின் ஆட்சியின் குறைகளை பிட் நோடிஸ் களாக வீடு வீடாக தெரு தெருவாக ஊர் ஊராக திமுக தொண்டர்கள், விநியோகித்து வருகிறார்கள்.

அம்பத்தூரில் திருவள்ளூர் மாவட்ட திமுகழக பொறுப்பாளர்-சுதர்சனம்,சென்னை மாநகராட்சியின் 7-வது மண்டல தலைவரும்,அம்பத்தூர் நகர திமுகழக செயலாருமான ஜோசப் சாமுவேல் திரளான தொண்டர்களுடன் துண்டு பிரசுரங்களை விநியோகித்தார்கள். 



Friday, 5 October 2012

enna nadakkuthu என்ன நடக்குது: செருப்ப தலைமாட்டில் வைத்து

enna nadakkuthu என்ன நடக்குது: செருப்ப தலைமாட்டில் வைத்து: வெளியூருக்கு செல்ல வேண்டுமென்றால், எனக்கு இனிப்பு சாப்பிடுவது போல.சிறிய வயதிலேயே வெளியூர்களுக்கு செல்ல ஆரம்பித்ததால் பயம் என்பதோ எங்கு தங்...

செருப்ப தலைமாட்டில் வைத்து

கிங்பிஷர் நிறுவனத்திற்கு மனிதாபிமான அடிப்படையில் வங்கிகள் நிதியுதவி: ஊழியர்களுக்கு சம்பளம் கிடைக்குமா?
வெளியூருக்கு செல்ல வேண்டுமென்றால், எனக்கு இனிப்பு சாப்பிடுவது போல.சிறிய வயதிலேயே வெளியூர்களுக்கு செல்ல ஆரம்பித்ததால் பயம் என்பதோ எங்கு தங்குவது என்ன சாப்பிடுவது என்ற பயமோ யோசனையோ கிடையாது.எங்கு என்ன சாப்பிட கிடைக்கிறதோ சாப்பிட்டு விடுவேன். இது பிடிக்கும் இது பிடிக்காது என்றெல்லாம் வரை முறை எல்லாம் கிடையாது. மாமா வீடு,தாத்தா ஊரு என்று தனியாக செல்ல ஆரம்பித்த பழக்கம் வேலையில் சேரும்போது பயனுள்ளதாக இருந்தது. சேல்ஸ் டாக்ஸ் கணக்கு முடிக்க, ஆர்டர் எடுக்க, வசூல் செய்ய என்று எல்லாவற்றிற்கும் என்னை அலுவலகம் முழுமையாக பயன்படுத்தியது. பல பேசும் மொழிகளை கற்றுக்கொள்ள நல்ல வாய்ப்பாக அமைந்தது மட்டுமல்லாமல் எந்த இடத்தில் என்ன கிடைக்கும்/கிடைக்காது என்பது தெரிந்தது.
வெளியூர்களுக்கு செல்லும்போது இயற்கை காட்சிகளை படம் பிடிக்கும் பழக்கம் ஒட்டிக் கொண்டது. அந்த படங்களுக்கு குறிப்புகள் எழுதி பத்திரிகைகளுக்கு அனுப்புவேன்!!!அதன் மூலம் பெரிய அளவில் காசு கிடைக்கவில்லை என்றாலும் நல்ல நண்பர்கள் கிடைத்தார்கள்.வெளியூர்களிலும்,பயணத்திலும் என்று  நண்பர்கள் வட்டம் பெரிதானது.கான்பூர் சென்றபோது முகம் பார்க்கும் கண்ணாடி போல உள்ள ஷூ வாங்கினேன். அந்த காசுக்கு 6 ஷூக்கள் வாங்கியிருக்கலாம். பயணத்தின்போது பெட்டியை நடுவில் வைத்து தூங்குவேன்.
ஆபீஸ் வேலையா எர்ணாகுளம் செல்ல கொச்சி எக்ஸ்ப்ரஸில் பயணம்.நன்றாக தூங்கிவிட்டேன்.வண்டி ஒரு இடத்தில் வெகு நேரமாக நின்றதால்,கீழே இருந்த ஒருவரிடம், இது எந்த இடம் என்றதற்கு, "ஹார்பர்" என்றார். கையில் செய்தி தாளில் எதையோ சுருட்டி எடுத்து சென்றார். அதுதான் கடைசி ஸ்டேஷன்  என்பதால் இறங்கி பெட்டியை எடுத்துகொண்டு இறங்கினேன். ஷூவை எடுக்க கீழே குனிந்து தேடினேன்.காணவில்லை.ஷூவை யார் எடுக்கப்போகிறார்கள் என்று கீழே  போட்டிருந்தேன். அது விலை உயர்ந்தது என தெரிந்தவன் எடுத்து சென்றுவிட்டான், அரை விலைக்கோ கால் விலைக்கோ வித்துவிட...சுரீல் என நினைவுக்கு வந்தது. "ஹார்பர்" என்று சொன்னானே அவன்தான்!!!  
பேன்ட கழட்டி வைத்துவிட்டு வேட்டிய கட்டிக்கிட்டு வெறும் காலுடன் ஸ்டேசன விட்டு வெளியில் வந்தேன்.
இப்போல்லாம் செருப்ப தலைமாட்டில் வைத்து தான் தூங்குவேன்,பயணத்தின் போது ......

Monday, 24 September 2012

ஷீரடி சாய் பாபா கோவில்


                                                                                   

ஷிர்டி :

ஷீரடி சாய் பாபா கோவில் சென்னையில் மயிலாப்பூரில் ஒன்றும் கிண்டியில் மெயின் ரோடிலேயும் உள்ளது....முதன்முதலில் சென்னைக்கு அப்பாவுடன் வந்த போது, சென்றது நினைவுள்ளது.
கோவையில் மேட்டுப்பாளையம் ரோடில் அமைந்துள்ளது.
சென்ற டிசம்பர் மாதம் மும்பை சென்றிருந்தபோது, ஷீரடி செல்லலாம் என்று பேச்செடுத்தபோது, இரண்டு விதமாக பயமுறுத்தினார்கள். 
1. ஏழு மணி நேர பஸ்  பயணம், மும்பையிலிருந்து.
2. ஷீரடியில் பக்தர்கள் கூட்டத்தில் தள்ளுமுள்ளு அதிகம்.....உங்களால் சமாளிக்க முடியாது.அதனால் போகாமலே திரும்ப வேண்டியதாயிற்று.
இன்னொன்றும் சொன்னார்கள். திருப்பதிக்கு எப்படி அந்த சாமி நினைத்தால்தான் 
போகமுடியுமோ, அதே போல ஷிர்டி சாய் பாபா நினைத்தால்தான் ஷிர்டி செல்லமுடியும் என்றார்கள்.
இந்த தடவை சொன்னதும்,மகள், ஆன் லைனில் (போக, வர) டிக்கட் புக் பண்ணிவிட்டார்.

காலை 7.15 க்கு கிளம்பிய பஸ் இரண்டு இடங்களில் நிறுத்தப்பட்டது. இட்லி,வடை, ரவாதோசை,மசால் தோசை என்று தென்னிந்திய,தமிழக உணவுகள் கிடைத்தது ,ஆச்சர்யம். மூன்றரை மணிக்கு ஷிர்டி போய் சேர்ந்தோம். கோவிலுக்கே எதிரிலேயே (துளசி பார்க்) ஓட்டலில் ஒய்வு எடுத்துவிட்டு, 4 மணிக்கு தரிசனத்திற்கு சென்றோம்.அதிக கூட்டம் இல்லாததால் அரை மணிக்குள்,தரிசனம் செய்ய முடிந்தது.தள்ளு முள்ளும் இல்லை. ஆந்திரா வகை உணவு கிடைத்தது. நண்பர்களுக்கு பிரசாதமும்   சாய்பாபா உருவ பொம்மைகளும் வாங்கிக்கொண்டேன். சிறிது நேர ஓய்விற்கு பிறகு, 7.30 மணிக்கு கிளம்பிய பஸ் விடியலில் (3.30) மும்பை கொண்டு வந்து சேர்த்தது. வால்வோ ஏ ஸி பஸ்.
இதில் என்ன விசேஷம் என்றால் மயிலாப்பூர் சாய் பாபா கோவிலுக்கு அழைத்து சென்றது,
 அப்பா. 
ஷிர்டி சாய் பாபா கோயிலுக்கு அழைத்து சென்றது 
மகள் .

Friday, 21 September 2012

flight No.6E-279..தொடர்ச்சி ....



தொடர்ச்சி ....
ஓடு பாதையிலேயே நல்ல உயரத்திற்கு சென்ற விமானம், இடது இறக்கையை  கீழிறக்கி சர்ரென்று திரும்பியது..கீழே தண்ணீர், சற்று நேரத்தில் கடலுக்கு மேலே. பத்து நிமிடத்தில் வெண் மேக கூட்டத்திற்கு மேலே, இன்னும் மேலே.......இனி வேடிக்கை பார்க்க ஒன்றுமில்லை..கீழே மேக கூட்டம் .தொலைவில் நீல நிறத்தில் வானமா, கடலா? 
பெல்டை விடுவித்துவிட்டு ரெஸ்ட் ரூம் போக ஒரு கூட்டம் அலை மோதியது. 
அது அடங்கியதும், தள்ளு வண்டியில் காபி, மினி தோசை, என்று வந்ததை வேண்டியவர்கள்  வாங்கி உள்ளே தள்ள ஆரம்பித்தார்கள்.
இந்த உணவெல்லாம் நமக்கு ஒத்து வராது..எடுத்து வந்தால் சாப்பிட அனுமதிப்பார்களோ,மாட்டார்களோ என்ற சந்தேகத்தில் 
உணவு எதுவும் எடுத்து வராததால் ஒரு புத்தகத்தை படிக்க ஆரம்பித்தேன்.
 "விமானியின் அறிவிப்பில்,பறந்து கொண்டிருப்பது 10 ஆயிரம் மீட்டர்(33,000-அடி)உயரத்தில்,விமானத்தின் வேகம் மணிக்கு-800 கிலோமீடர் என்பதும்,வானிலை சாதாரணமாக இருக்கிறது என்பதையும் தெரிந்துகொள்ள முடிந்தது. 
திருப்பதிமலையையும் அடுத்து, நீர்த்தேக்கத்தை பார்க்கவும்,சீட் பெல்டை போட்டுகொள்ளவும், எலக்ட்ரானிக் சாதனங்களை அணைக்க சொல்லி அறிவிப்பு வரவும் சரியாக இருந்தது.
புழல் ஏரியை நெருங்கும்போது மிக கீழே பறக்க ஆரம்பித்த விமானம் திருவொற்றியூர் தாண்டி, கடலில் வெகு தூரம் சென்று வலது பக்கம் திரும்பி, திருவல்லிக்கேணி மயிலை (பறக்கும் ரயில்-மிக அழகாக)வழியாக அடையார் பிரிட்ஜ்,கிண்டி பாலம், கத்தி பாரா, ராணுவ இடத்தின் பசுமையான பகுதியை தாண்டி, இன்னும் கீழே, கீழே, "தட்"டென்று ஓடுபாதையில் டயர்களை இறக்கி இறக்கையின் மேல்பகுதி முழுவதுமாக திறக்கப்பட்டது.
ஒவ்வொரு இஞ்சினாக அணைத்து, வேகத்தை குறைத்து........ஓடு பாதையில் ஓடி சரியாக நிறுத்த வேண்டிய 
இடத்தில் நின்றது. 
இறங்குவதற்கு அவசரப்படும் கூட்டத்தில் முட்டி மோதாமல், அமைதியாக அமர்ந்திருந்தேன்.கார்கோ வண்டி வந்து, கீழே கதவு திறக்கப்பட்டு பெட்டிகள் அதில் ஏற்றப்படுவதை பார்த்தேன்.என் பெட்டி ஏற்றப்பட்டதை பார்த்து விட்டு எழுந்தேன்.
வெளியே வால்வோ பஸ்ஸில் மக்களுடன் கலந்து "காமராஜர் உள்நாட்டு விமான" நிலையத்தினுள் நுழைந்தேன்.
அரை மணி நேரம் காத்திருந்ததில் கன்வேயரில் பெட்டி வந்தது.எடுத்து நாய் குட்டியை இழுத்து வருவது போல் இழுத்து கொண்டு வெளியில் வந்தேன்.
கால் டாக்சிகாரன் அம்பத்தூருக்கு 750 ரூபா, பிக்ஸ்டு ரேட் என்றதும் "சரி" என்று 
ஏறி அமர்ந்தேன். வீட்டிலிருந்து போன்....."சென்னை வந்துட்டேன்,சமைச்சு வை,கொலை பசி".என்றேன்.

enna nadakkuthu என்ன நடக்குது: FLIGHT No.6E-279

enna nadakkuthu என்ன நடக்குது: FLIGHT No.6E-279:        கடைசி நிமிடத்தில் ரயிலில் ஏறும் பழக்கத்தை என் மனைவி மக்கள் கேலி செய்வார்கள்.அதனால் விமானப்பயணத்திற்கு, என்னை சென்னையிலிருந்து மகளும...