Thursday, 28 June 2012

பிறந்த நாளும், குழப்பங்களும்-பிறந்த நாளை கொண்டாடுவது பிடிக்காது.

பிறந்த நாளும், குழப்பங்களும் :
மாலையில் வீடு திரும்பிய மகள் கேட்டாள் "அப்பா, இன்னிக்கு உனக்கு பிறந்த நாளா?"
"சர்டிபிகேட் படி ஆமாம்."
"பேஸ் புகல வாழ்த்துக்கள் பார்த்தேன்!"
"அப்போல்லாம், ப்ளே ஸ்கூல் கிடையாதேம்மா. அதிக குறும்பு செய்ததால், ஒரு வருடம் முன்னேயே 4 வயதிலேயே ஸ்கூலில் சேர்க்க பிறந்த தேதிய மாத்தி குடுத்துட்டாங்க."
"எங்க அம்மா தான் என் பிறந்த நாளை ஞாபகம் வைத்து கொண்டாடுவார்கள்.எனக்கு பிறந்த நாளை கொண்டாடுவது பிடிக்காது.
நான் அன்று வீட்டிற்கே வரமாட்டேன்! இரவு இரண்டாவது ஷோ முடிந்ததும்தான் வருவேன்!
திருமணத்திற்கு பின்பும் இது தொடர்ந்தது. இப்போது கூட உங்கள் மகிழச்சிக்காகதான் புது துணியை கூட அணிகிறேன்!"
"ஆமாம், இப்போதுகூட பிறந்த நாள் அன்னிக்கு காலையில் சென்று  இரவில் தானே வருகிறீர்கள். அப்படி எங்க தான் போறீங்க!"
"ஏதாவது ஒரு முதியோர் இல்லத்திலோ, ஆதரவற்றோர் இல்லத்திலோ உணவு பரிமாறி விட்டு, உண்டு, அன்றைய பொழுதை அவர்களுடன் கழிப்பேன்! "
இதை இன்று வரை யாரிடமும் சொன்னது கூட கிடையாது.

Wednesday, 27 June 2012

சென்னை 7-வது மண்டலம்-அம்பத்தூர்-கூட்டம் இன்று நடந்தது.இந்த கூட்டத்திற்கும் அ.தி.மு.க.உறுபினர்கள் கலந்துகொள்ளாததால், சாதாரண


கூட்டமாகிவிட்டது.உறுப்பினர்கள் குப்பை  தேங்கி கிடப்பதையும்,குடிநீர் சரியான முறையில் விநியோகிக்க ப்பட வில்லை என்று புகார் கூறினர்.ஜோனல் அலுவலர் பொறுமையாக என்னென்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.மாமன்ற உறுப்பினர்கள்,ஆண்ட்ருஸ்,நீலகண்டன்,தமிழ்செல்வன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

Monday, 25 June 2012

தி.மு.க.வின் போராட்டம்


தி.மு.க.வின் முக்கிய தலைவர்களை பொய் வழக்கு போட்டு உள்ளே தள்ளுவதிலேயே குறியாக இருக்கும் ஜெ .அரசை எதிர்த்து ஜூலை 4-ந் தேதி தமிழகம் முழுவதும் சிறை நிரப்பும் போராட்டம் நடத்தப்படும். மாவட்ட,வட்ட ஆட்சியர் அலுவலகங்களின் முன்பு நடத்தப்பட இருக்கும் இந்த ஆர்பாட்டத்தில் யார் யார் பங்கு பெறுவார்கள் தலைமை ஏற்பார்கள் என்பது பற்றி ஆ லோசனை கூட்டம் திருவள்ளூர் மாவட்ட பொறுப்பாளர் சுதர்சனம் தலைமையில் அம்பத்தூரில் நடைபெற்றது.புரசை ரங்கநாதன்,கிருஷ்ணசாமி,சுந்தரம்,நீலகண்டன்,மற்றும் திருவள்ளூர் மாவட்ட வட்ட கழக நிர்வாகிகள் கலந்துகொண்டார்கள்.
ஜனாதிபதி வேட்பாளர் பிரணாப் முகர்ஜி அவர்களின் சென்னை விஜயத்தை சிறப்பான வரவேற்பளித்து  சாதனை படைக்கவேண்டும் என்றும் தீர்மானம் போடப்பட்டது.விழா  ஏற்பாடுகளை நகர செயலாளர் ஜோசப் சாமுவேல் செய்திருந்தார்.

Thursday, 14 June 2012

வட்டி கட்டினால்தான் பணம் கொடுக்க முடியும்












Saturday, 2 June 2012

வைகுண்டம்:
சுடுகாடு, சாவு என்று பேசினாலே மக்கள் விரும்புவதில்லை.பூமியிலேயே என்றும் வாழ்வோம் என்ற  நம்பிக்கை.இறப்பும் பிறப்பும் இயற்கையின் ரகசியம். பிறப்பையாவது ஓரளவு கணிக்கலாம்.இறப்பை யாராலும் கணிக்க இயலாது.இது வரமா, சாபமா?
மூன்று நாள் வெளியூர் சென்றுவிட்ட மாலையில் திரும்பியபோது, எதிர்வீட்டில் ஷாமியானா போட்டிருந்தது.இப்போதெல்லாம் வீட்டில் நல்லது கெட்டது எல்லாவற்றிற்கும், ஷாமியானா போடுவது தவிர்க்க முடியாத பாஷன்.
எதிரில் வந்தவரை விசாரித்தால் என்னுடைய நண்பருடைய அப்பா (92) இறந்து விட்டதாக சொன்னார்.நண்பரும் என்னைபோல இதய நோயாளி. ஆனால் அவருடைய அப்பா நல்ல ஆரோக்கியத்துடன் இருந்தார்.கால் முட்டி மடக்க முடியாததால் வெளியே வரமாட்டார்.மற்றபடி
உட்கார்ந்தபடி எல்லா வேலைகளையும் செய்துகொள்வார்.
நண்பரை பார்த்துவிட்டு ஆக வேண்டிய வேலைகளை செய்ய முதல் வேலையாக சுடுகாட்டின் பொறுப்பாளருக்கு போன் செய்து விவரத்தை சொன்னேன்.அடுத்த நாள்  4 .00 மணிக்கு நேரம் ஒதுக்கி தந்தார்.(நேரம்!)
பயோ காஸ் முறையில் எரிப்பதால் மிகவும் குறைவான கட்டணம்.Rs.1300 /- மட்டுமே!வாகனமும் அவர்களே அனுப்பி உடலை மயானத்திற்கு எடுத்து செல்லுகிறார்கள்.அதற்கு தனி கட்டணம் கிடையாது.
இடத்தை பார்த்தால் கல்யாண மண்டபம் போல பளீர்! ஆபீஸ் ரூம் ஏ.சி.,தியான மண்டபம் ஏ.சி.,சாதாரண விறகு கட்டைகளை போட்டு பர்னசை எரிய விடுகிறார்கள்.மின்சாரம் தேவையில்லை.
ஒரு மணி நேரத்தில் உடல் சாம்பலாகிவிடுகிறது.
ஒரு தனியார் ட்ரஸ்ட் நடத்தும் இதற்கு வைகுண்டம் என்ற பெயர் பொருத்தமானதே!

Tuesday, 29 May 2012

பெட்ரோல் விலை உயர்வை எதிர்த்து அதிமுக தமிழகமெங்கும் போராட்டம்!

 பெட்ரோல் விலை உயர்வை எதிர்த்து அதிமுக தமிழகமெங்கும் இன்று போராட்டம் நடத்தியது. மத்திய மாநில அரசுகள் வரிகளை குறைத்தாலே போதுமானது! கலைஞர்!!!
டெல்லி, கேரளா,உத்திரகான்ட் ஆகிய மாநிலங்களில் செய்தது போல  பெட்ரோலுக்கு விதிக்கப்படும் மதிப்பு கூடுதல் வரியை குறைத்தாலோ,நீக்கிவிட்டாலோ(!), பெட்ரோலின் விலை கணிசமாக குறையும். மத்திய அரசும் மாநில அரசும் இதை செய்யவேண்டும். இந்த கருத்தை எல்லா அரசியல்(வாதிகளும்-தலைவர்களும்)கட்சிகளும் ஏற்று செயல்பட்டால் தீர்வு உண்டு!!செய்வாங்களா? ---பெட்ரோலுக்கு நாயா பேயா அலையும் மக்கள் சார்பாக வாக்காளன். 

Friday, 18 May 2012

வாழ்கபோலிஸ்!!! வாழ்க டெக்னாலஜி!!!


வாழ்கபோலிஸ்!!!   வாழ்க டெக்னாலஜி!!!

போலிஸ் என்றால் படத்திலலேட்டா கடைசில வருவாங்க.
நடைமுறையில போலிசு கிட்ட போகவே சாதாரண மக்களிடம்  
இன்றும் அச்சம் உள்ளது.
இது அந்த மாதிரி அல்ல.
சென்னை கிண்டி நூறடி ரோடில் எம்.எம்.டி.எ. நிறுத்தத்தில் நடந்து சென்றுகொண்டிருந்த நடு வயது பெண்மணியிடம் செயினை அறுத்துக்கொண்டு 
ஒரு "பைக்"காரன் வேகமாக சென்றுவிட்டான். 
அந்த பெண்மணி நாடு ரோட்டில் "ஐயோ, என் புருஷன் கொன்று விடுவானே"என்று பெருங்குரலில் அழ, யாரோ ஒரு புண்ணியவான் 
போலிசுக்கு போன் பண்ண 'சர்'ரென ஜீப்பில் வந்த உதவி 
கமிஷனர்,விசாரணையில் இறங்கினார்.
பிறகு, லேப்டாப்பில் தட்டி, கண்காணிப்பு கேமராவில் 
திருடனின் வண்டி நெம்பரை கண்டுபிடித்து 
ஆளை பிடிக்க வைத்து விட்டார்.
அந்த பெண்மணியிடம் ஸ்டேஷனில் வந்து 
செயினை வாங்கிகொள்ளும்படி சொன்னார்.


வாழ்கபோலிஸ்!!!   வாழ்க டெக்னாலஜி!!!! நம்ப முடியுதா?