Saturday, 2 June 2012

வைகுண்டம்:
சுடுகாடு, சாவு என்று பேசினாலே மக்கள் விரும்புவதில்லை.பூமியிலேயே என்றும் வாழ்வோம் என்ற  நம்பிக்கை.இறப்பும் பிறப்பும் இயற்கையின் ரகசியம். பிறப்பையாவது ஓரளவு கணிக்கலாம்.இறப்பை யாராலும் கணிக்க இயலாது.இது வரமா, சாபமா?
மூன்று நாள் வெளியூர் சென்றுவிட்ட மாலையில் திரும்பியபோது, எதிர்வீட்டில் ஷாமியானா போட்டிருந்தது.இப்போதெல்லாம் வீட்டில் நல்லது கெட்டது எல்லாவற்றிற்கும், ஷாமியானா போடுவது தவிர்க்க முடியாத பாஷன்.
எதிரில் வந்தவரை விசாரித்தால் என்னுடைய நண்பருடைய அப்பா (92) இறந்து விட்டதாக சொன்னார்.நண்பரும் என்னைபோல இதய நோயாளி. ஆனால் அவருடைய அப்பா நல்ல ஆரோக்கியத்துடன் இருந்தார்.கால் முட்டி மடக்க முடியாததால் வெளியே வரமாட்டார்.மற்றபடி
உட்கார்ந்தபடி எல்லா வேலைகளையும் செய்துகொள்வார்.
நண்பரை பார்த்துவிட்டு ஆக வேண்டிய வேலைகளை செய்ய முதல் வேலையாக சுடுகாட்டின் பொறுப்பாளருக்கு போன் செய்து விவரத்தை சொன்னேன்.அடுத்த நாள்  4 .00 மணிக்கு நேரம் ஒதுக்கி தந்தார்.(நேரம்!)
பயோ காஸ் முறையில் எரிப்பதால் மிகவும் குறைவான கட்டணம்.Rs.1300 /- மட்டுமே!வாகனமும் அவர்களே அனுப்பி உடலை மயானத்திற்கு எடுத்து செல்லுகிறார்கள்.அதற்கு தனி கட்டணம் கிடையாது.
இடத்தை பார்த்தால் கல்யாண மண்டபம் போல பளீர்! ஆபீஸ் ரூம் ஏ.சி.,தியான மண்டபம் ஏ.சி.,சாதாரண விறகு கட்டைகளை போட்டு பர்னசை எரிய விடுகிறார்கள்.மின்சாரம் தேவையில்லை.
ஒரு மணி நேரத்தில் உடல் சாம்பலாகிவிடுகிறது.
ஒரு தனியார் ட்ரஸ்ட் நடத்தும் இதற்கு வைகுண்டம் என்ற பெயர் பொருத்தமானதே!

No comments: