சென்னை 7-வது மண்டலம்-அம்பத்தூர்-கூட்டம் இன்று நடந்தது.இந்த கூட்டத்திற்கும் அ.தி.மு.க.உறுபினர்கள் கலந்துகொள்ளாததால், சாதாரண
கூட்டமாகிவிட்டது.உறுப்பினர்கள் குப்பை தேங்கி கிடப்பதையும்,குடிநீர் சரியான முறையில் விநியோகிக்க ப்பட வில்லை என்று புகார் கூறினர்.ஜோனல் அலுவலர் பொறுமையாக என்னென்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.மாமன்ற உறுப்பினர்கள்,ஆண்ட்ருஸ்,நீலகண்டன்,தமிழ்செல்வன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
Wednesday, 27 June 2012
Monday, 25 June 2012
தி.மு.க.வின் போராட்டம்
ஜனாதிபதி வேட்பாளர் பிரணாப் முகர்ஜி அவர்களின் சென்னை விஜயத்தை சிறப்பான வரவேற்பளித்து சாதனை படைக்கவேண்டும் என்றும் தீர்மானம் போடப்பட்டது.விழா ஏற்பாடுகளை நகர செயலாளர் ஜோசப் சாமுவேல் செய்திருந்தார்.
Thursday, 14 June 2012
வட்டி கட்டினால்தான் பணம் கொடுக்க முடியும்
யுவகிருஷ்ணா
June 14, 2012
ஓர் அணில் உதவி
நாமக்கல் அருகே உள்ள நல்லிப்பாளையம் என்ற கிராமத்தைச் சேர்ந்த விக்னேஷ் என்ற மாணவர் திண்டுக்கல்லில் உள்ள கல்லூரி ஒன்றில் பொறியியல்
படித்து வருகிறார். ஆறு செமஸ்டர்களை நிறைவு
செய்துவிட்டு ஏழாவது செமஸ்டரில் அடியெடுத்து வைக்கும் அந்த மாணவர், நல்லிப்பாளையம்
UCO வங்கியில் கல்விக் கடன் பெற்று படித்து வருகிறார். ஏழை மாணவர் என்பதால் வட்டிக்கு
அரசு அளிக்கும் மானியம் பெறத் தகுதியானவர்.
கல்விக் கடன் பெறும் மாணவர்கள் படிக்கும் காலத்தில் வட்டியைச் செலுத்த வேண்டியதில்லை. தொழிற்கல்வி பயிலும் பொருளாதாரத்தில் பின் தங்கிய மாணவர்களுக்கு வட்டிக்கான மானியமும் உண்டு.இந்த மானியத்தை கடனளிக்கும் வங்கிகள் அவர்களே அரசு நியமித்துள்ள வங்கிளிடமிருந்து பெற்றுக் கொள்ள வேண்டும். இந்தத் தகவல்களை ஜூன்7 2012 புதிய தலைமுறையில் வெளியிட்டிருந்தோம்
விதிகள் இவ்வாறிருக்க வட்டித் தொகையான 24000 ரூபாயைக் கட்டினால்தான் இந்த செமஸ்டருக்கான கடன் தொகையைத் தரமுடியும் என வங்கி மேலாளார் கண்டிப்பாகச் சொல்லி விட்டார். கடந்த ஆண்டும் இதே போல வற்புறுத்தி 16500 ரூபாயைச் செலுத்தச் சொல்லியிருக்கிறார். கல்லூரி திறக்கிற நேரமானதால் அவரது பெற்றோருக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை.கந்து வட்டிக்காரர்களிடம் 36 சதவீத வட்டிக்குக் கடன் வாங்கி வங்கியில் பணம் கட்டிவிட்டனர்.
கல்விக் கடன் பெறும் மாணவர்கள் படிக்கும் காலத்தில் வட்டியைச் செலுத்த வேண்டியதில்லை. தொழிற்கல்வி பயிலும் மாணவர்களுக்கு வட்டிக்கான மானியமும் உண்டு. என்ற தகவல்களை வெளியிட்டிருந்த புதிய தலைமுறைக் கட்டுரையில் Education Loan Task force (ELTF) என்ற அமைப்பின் இணைய முகவரியையும் வெளியிட்டிருந்தோம். இந்த அமைப்பு அப்துல் கலாமின் கனவான விஷன் 2020 என்பதால் உந்தப்பட்டு அவரது ஆசியுடன் நடந்து வரும் அமைப்பு. ஸ்ரீநிவாசன் என்ற விருப்ப ஓய்வு பெற்ற வங்கி அதிகாரி/ இந்த அமைப்பை முன்னின்று நடத்தி வருகிறார். .
புதிய தலைமுறையைப் படித்த விக்னேஷ், ஸ்ரீநிவாசனை ஜூன் 7ம் தேதி இரவு மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொண்டு தனது பிரச்சினையத் தெரிவித்துள்ளார். ஸ்ரீநிவாசன் மறுநாள் UCO வங்கியின் நல்லிப்பாளையம் கிளை மேலாளரைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு விதிகளைச் சுட்டிக் காட்டியுள்ளார். ஆனால் வங்கி மேலாளார் ஆணவமாகப் பதில் சொன்னதாக ஸ்ரீநிவாசன் தெரிவிக்கிறார். “நீ யார் கிட்ட வேணா போய்ச் சொல்லிக்கோ, வட்டி கட்டினால்தான் பணம் கொடுக்க முடியும். எங்கள் பாங்க் விதிகள் அப்படித்தான் சொல்கின்றன” என்று சொல்லிவிட்டார்.
உடனே ஸ்ரீநிவாசன் அன்றே மேலதிகாரிகளை மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொண்டு நடந்ததைத் தெரிவித்திருக்கிறார். அவரது மின்னஞ்சலில் புதிய தலைமுறைக் கட்டுரையைப் பற்றியும் குறிப்பிட்டுள்ளார். அன்று மாலை (ஜூன் 8) வங்கியின் துணைப் பொது மேலாளர் திரு வெங்கடாச்சலம் ஸ்ரீநிவாசனுடன் தொடர்பு கொண்டு விவரங்கள் கேட்கிறார். அவர் கிளை மேலாளரைத் தொடர்பு கொண்டு விதிகளைப் பின்பற்றுமாறு அறிவுறுத்தியிருந்திருக்க வேண்டும். சிறிது நேரத்தில் வங்கிக் கிளை மேலாளரே விக்னேஷைத் தொடர்பு கொண்டு அடுத்த செமஸ்டருக்கான கல்விக் கட்டணத்திற்குரிய வரைவோலையை வங்கியில் வந்து வாங்கிக் கொள் என்று சொல்லியிருக்கிறார். ஜூன் 9ம் தேதி விக்னேஷ் வங்கிக்குச் சென்று வரைவோலையைப் பெற்றுக் கொண்டுவிட்டார்.

இது போல் இந்தக் கிளையில் இன்னும் எத்தனை மாணவர்களுக்கு நடந்திருக்குமோ என்ற சந்தேகத்தை ஸ்ரீநிவாசன் வங்கி நிர்வாகத்திடம் தெரிவிக்கிறார். ஜூன் 9ம் தேதி மாலை கோவை மண்டல மேலாளர் பாஷா ஸ்ரீநிவாசனைத் தொடர்பு கொண்டு தான் ஜூன் 11ம் தேதியன்று வங்கிக் கிளைக்கே சென்று விசாரணை நடத்த இருப்பதாக தெரிவித்தார் .
அவர் விசாரணைக்கு வந்த போது 20க்கும் மேற்பட்ட மாணவர்கள்
அவரிடம் வங்கிக் கிளை மேலாளர் மூலம் சந்தித்து
வரும் பிரச்சினைகளத் தெரிவித்ததாக அறிகிறோம். தகுதியுள்ள மாணவர்களுக்கு அவர்களிடம்
வட்டியாக வாங்கிய பணத்தைத் திருப்பியளிக்க ஆவன செய்வதாக உறுதியளித்துள்ளதாக திரு. பாஷா
புதிய தலைமுறையிடம் தெரிவித்துள்ளார்.
புதிய
தலைமுறையைப் படித்து முறையிட்ட மாணவருக்கு மின்னல்
வேகத்தில் உதவிகளைப் பெற்றுத் தந்த ELTF அமைப்பிற்கும், ஸ்ரீநிவாசனுக்கும்,
அவர் மின்னஞ்சலின் அடிப்படையில் உடனடியாக நடவடிக்கை எடுத்த
UCO வங்கியின் மேலதிகாரிகளுக்கும் பணிவன்போடு எங்கள் நன்றியைத்
தெரிவித்துக் கொள்கிறோம்.
அவர்கள் ஆற்றிய பணி மிகப் பெரிது.
இது ஒரு வங்கியில் ஒரு கிளையில் மட்டும் ஏற்பட்ட பிரச்சினை
அல்ல. இது போன்று அநேகமாக எல்லா வங்கிகளிலும் ஏதோ ஒன்று அல்லது ஒன்றிற்கு மேற்பட்ட
கிளைகளில் மாணவர்களும் பெற்றோர்களும் பிரச்சினைகளைச் சந்தித்து வருகிறார்கள்.
வங்கிகளின் மேல் அதிகாரிகள் வங்கிக் கிளைகளில் விதிமுறைகளின்படி
தகுதியான மாணவர்களுக்கு கல்விக் கடன் வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும். இதை மேற்பார்வையிட
மண்டல வாரியாக சமூக அமைப்புக்கள், பத்திரிகையாளர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொண்ட
குழுக்கள் அமைக்கப்பட வேண்டும். அதே போல் கல்விக் கடன் தொடர்பான புகார்களை மின்னல்
வேகத்தில் விசாரித்து அவற்றைத் தீர்ப்பதற்கென்று பிரத்யேக குறை தீர்க்கும் மையங்கள்
அமைக்கப்பட வேண்டும் எனப் புதிய தலைமுறை வலியுறுத்துகிறது.
(நன்றி : புதிய தலைமுறை - ஆசிரியரின் தலையங்கத்திலிருந்து...)

புதிய தலைமுறை - ஆசிரியரின் தலையங்கத்திலிருந்து.
எழுதியவர்
Saturday, 2 June 2012
வைகுண்டம்:
சுடுகாடு, சாவு என்று பேசினாலே மக்கள் விரும்புவதில்லை.பூமியிலேயே என்றும் வாழ்வோம் என்ற நம்பிக்கை.இறப்பும் பிறப்பும் இயற்கையின் ரகசியம். பிறப்பையாவது ஓரளவு கணிக்கலாம்.இறப்பை யாராலும் கணிக்க இயலாது.இது வரமா, சாபமா?
மூன்று நாள் வெளியூர் சென்றுவிட்ட மாலையில் திரும்பியபோது, எதிர்வீட்டில் ஷாமியானா போட்டிருந்தது.இப்போதெல்லாம் வீட்டில் நல்லது கெட்டது எல்லாவற்றிற்கும், ஷாமியானா போடுவது தவிர்க்க முடியாத பாஷன்.
எதிரில் வந்தவரை விசாரித்தால் என்னுடைய நண்பருடைய அப்பா (92) இறந்து விட்டதாக சொன்னார்.நண்பரும் என்னைபோல இதய நோயாளி. ஆனால் அவருடைய அப்பா நல்ல ஆரோக்கியத்துடன் இருந்தார்.கால் முட்டி மடக்க முடியாததால் வெளியே வரமாட்டார்.மற்றபடி
உட்கார்ந்தபடி எல்லா வேலைகளையும் செய்துகொள்வார்.
நண்பரை பார்த்துவிட்டு ஆக வேண்டிய வேலைகளை செய்ய முதல் வேலையாக சுடுகாட்டின் பொறுப்பாளருக்கு போன் செய்து விவரத்தை சொன்னேன்.அடுத்த நாள் 4 .00 மணிக்கு நேரம் ஒதுக்கி தந்தார்.(நேரம்!)
பயோ காஸ் முறையில் எரிப்பதால் மிகவும் குறைவான கட்டணம்.Rs.1300 /- மட்டுமே!வாகனமும் அவர்களே அனுப்பி உடலை மயானத்திற்கு எடுத்து செல்லுகிறார்கள்.அதற்கு தனி கட்டணம் கிடையாது.
இடத்தை பார்த்தால் கல்யாண மண்டபம் போல பளீர்! ஆபீஸ் ரூம் ஏ.சி.,தியான மண்டபம் ஏ.சி.,சாதாரண விறகு கட்டைகளை போட்டு பர்னசை எரிய விடுகிறார்கள்.மின்சாரம் தேவையில்லை.
ஒரு மணி நேரத்தில் உடல் சாம்பலாகிவிடுகிறது.
ஒரு தனியார் ட்ரஸ்ட் நடத்தும் இதற்கு வைகுண்டம் என்ற பெயர் பொருத்தமானதே!

Tuesday, 29 May 2012
பெட்ரோல் விலை உயர்வை எதிர்த்து அதிமுக தமிழகமெங்கும் போராட்டம்!
பெட்ரோல் விலை உயர்வை எதிர்த்து அதிமுக தமிழகமெங்கும் இன்று போராட்டம் நடத்தியது. மத்திய மாநில அரசுகள் வரிகளை குறைத்தாலே போதுமானது! கலைஞர்!!!
டெல்லி, கேரளா,உத்திரகான்ட் ஆகிய மாநிலங்களில் செய்தது போல பெட்ரோலுக்கு விதிக்கப்படும் மதிப்பு கூடுதல் வரியை குறைத்தாலோ,நீக்கிவிட்டாலோ(!), பெட்ரோலின் விலை கணிசமாக குறையும். மத்திய அரசும் மாநில அரசும் இதை செய்யவேண்டும். இந்த கருத்தை எல்லா அரசியல்(வாதிகளும்-தலைவர்களும்)கட்சிகளும் ஏற்று செயல்பட்டால் தீர்வு உண்டு!!செய்வாங்களா? ---பெட்ரோலுக்கு நாயா பேயா அலையும் மக்கள் சார்பாக வாக்காளன்.

Friday, 18 May 2012
வாழ்கபோலிஸ்!!! வாழ்க டெக்னாலஜி!!!
வாழ்கபோலிஸ்!!! வாழ்க டெக்னாலஜி!!!
போலிஸ் என்றால் படத்திலலேட்டா கடைசில வருவாங்க.
நடைமுறையில போலிசு கிட்ட போகவே சாதாரண மக்களிடம்
இன்றும் அச்சம் உள்ளது.
இது அந்த மாதிரி அல்ல.
சென்னை கிண்டி நூறடி ரோடில் எம்.எம்.டி.எ. நிறுத்தத்தில் நடந்து சென்றுகொண்டிருந்த நடு வயது பெண்மணியிடம் செயினை அறுத்துக்கொண்டு
ஒரு "பைக்"காரன் வேகமாக சென்றுவிட்டான்.
அந்த பெண்மணி நாடு ரோட்டில் "ஐயோ, என் புருஷன் கொன்று விடுவானே"என்று பெருங்குரலில் அழ, யாரோ ஒரு புண்ணியவான்
போலிசுக்கு போன் பண்ண 'சர்'ரென ஜீப்பில் வந்த உதவி
கமிஷனர்,விசாரணையில் இறங்கினார்.
கமிஷனர்,விசாரணையில் இறங்கினார்.
பிறகு, லேப்டாப்பில் தட்டி, கண்காணிப்பு கேமராவில்
திருடனின் வண்டி நெம்பரை கண்டுபிடித்து
ஆளை பிடிக்க வைத்து விட்டார்.
திருடனின் வண்டி நெம்பரை கண்டுபிடித்து
ஆளை பிடிக்க வைத்து விட்டார்.
அந்த பெண்மணியிடம் ஸ்டேஷனில் வந்து
செயினை வாங்கிகொள்ளும்படி சொன்னார்.
செயினை வாங்கிகொள்ளும்படி சொன்னார்.
வாழ்கபோலிஸ்!!! வாழ்க டெக்னாலஜி!!!! நம்ப முடியுதா?
Friday, 4 May 2012
அம்மணியும் அணிலும்
அம்மணியும் அணிலும் :
காலையில் குயிலின் குரலை கேட்டு கண்விழிப்போம்.எதிரில் மிகப்பெரிய காலி மனையில், ஏராளமான மரங்கள்.விதவிதமான பறவைகள்.மாலையில் திரும்பி வந்து கூடுகளில் அடையும் இரைச்சல் இனிமை.பலவித குரல்கள்.கூடவே குஞ்சுகளின் கொஞ்சல்கள்!!!!
நடு இரவில் ஆந்தையின் அட்டகாசம்.
நடு இரவில் ஆந்தையின் அட்டகாசம்.
பகலில் கிளியின் குரல்கள் அவைகளை
தேடவைக்கும்.
அணில்கள் துள்ளி விளையாடுவதே அழகோ அழகு. குயில்கள் அவ்வளவு எளிதாக கண்ணில் படாது. இதெல்லாம் எங்கோகிராமத்தில் இல்லைங்க.

சென்னையின் மத்தியில்.
இதெல்லாம் போன வருடம்..அந்த காலி மனையை சேட்டு, வீட்டு மனைகளாக்கி விற்றுவிட்டதால், அங்கிருந்த மரங்களை எல்லாம் வெட்டிகொண்டிருக்கும்போது, சில மரங்களையாவது விட்டு வைக்க சொன்னோம்.
ம்ஹும்..
வாங்கியவன் அரசியல்வாதி.ஒரு பிட் இடம் கூட விடாமல் படம் போட்டு விற்று விட்டான். அந்த மரங்களில் இருந்த பறவை கள், அணில்கள் தவித்த தவிப்பு இருக்கிறதே, கொடுமை. அணில் குஞ்சுகள் சிலவற்றை எடுத்து வந்து வளர்த்தோம்.

அம்மணிக்கு இதெல்லாம் அலர்ஜி. ஜன்னலில் வைக்கும் உணவை காகமும், அணிலும் போட்டி போட்டு உண்ணும். ஒரு சமயம் நான் வெளியூர் போயிருந்தபோது, அம்மணி சரியாக ஜன்னலில் உணவு வைக்கவில்லை. அது சமையல் அறைக்குள்ளேயே வர ஆரம்பித்து விட்டது.
அம்மணி போட்ட கூச்சலில் (என்னைத்தான்) வலை போட்டுவிட்டேன் .உணவு வைப்பது தொடர்கிறது.
Subscribe to:
Posts (Atom)