talk show:
டாக் ஷோ ::::
விசுவின் அரட்டை அரங்கம் மற்ற டி.வி.சீரியல்களில் இருந்து வித்தியாசமா இருந்ததால் முக்கியத்துவம் பெற ஆரம்பித்தது. அவரை தொடர்ந்து பலரும் பல சேனல்களில் டால்க் ஷோ நடத்துகிறார்கள்.
எல்லோருமே சினிமா பிரபலங்கள்.
ஆனால் விஜய் டி .வி.யில் "நீயா நானா" நிகழ்ச்சிய நடத்தும் கோபிநாத்
இந்த நிகழ்ச்சியின் மூலமாக பிரபலமானார்....
நிகழ்ச்சியும் பிரபலமானது.
அதற்கு காரணம் இயக்குனரின் தலைப்பு தேர்வும்,
அதை கோபிநாத் மூலமாக வெளிக்கொணரும் சாமர்த்தியமும்தான்!
இன்றைய இளைய சமுதாயம், திருமணம், புது மனை புகுவிழா போன்ற உறவினர்களின் நிகழசிகளுக்கு வருவதற்கு,கலந்துகொள்வதற்கு ஆர்வம் காட்டுவதில்லை.
இதை தலைப்பாக வைத்து பெரியவர்களையும், இளைஞர்களையும் பேச வைத்து எல்லோரையும் நெகிழ வைத்துவிட்டார்கள், என்று நண்பர் ஒருவர் தன்னுடைய 'ப்ளாக்கில்' எழுதியது முற்றிலும் உண்மை.
No comments:
Post a Comment