Wednesday, 28 November 2012
Tuesday, 27 November 2012
Wednesday, 21 November 2012
ambatturum ---developmentum...
உள்ளாட்சி தேர்தலின் போதே அம்பத்தூர் ராம் நகர் ஏரியாவில் தார் ரோடு போட்டுக்கொண்டிருந்தார்கள். அதன் பிறகு மெட்ரோ,drainage என்று ரோடுகளை தோண்டியதில், அம்பத்தூர் என்றாலே ஆட்டோ,கால் டாக்சி காரர்கள் வர தயங்கினார்கள்.வந்தாலும் உள் ரோடுகளுக்கு வர மறுத்தார்கள்.சொந்த வண்டிக்காரர்கள் எல்லாம் ட்ராக்டரில் பயணிப்பதை போல குதித்து குதித்து பயணம் செய்து எலும்புகள் இடம் மாறியதும்,ஆங்காங்கே சதை பிடிப்பால் அவதியுடன் டாக்டரிடம் ஓடியதும், வண்டிகளுக்காக செலவு செய்ததும் தனி கதை.
பஸ் ஓடும் பாதைகள் புதிதாக போட ஆரம்பித்ததும், ரோடை ஓரடி ஆழத்திற்கு நோண்டி எடுத்து பிறகு சரளை கல் மண் போட்டு அதன் மேல் தார் ரோடு grid road போட்டதால் வீடுகள் தாழ்வான நிலைக்கு செல்லுவது தவிர்க்க பட்டுள்ளது.
பஸ் ஓடும் பாதைகள் புதிதாக போட ஆரம்பித்ததும், ரோடை ஓரடி ஆழத்திற்கு நோண்டி எடுத்து பிறகு சரளை கல் மண் போட்டு அதன் மேல் தார் ரோடு grid road போட்டதால் வீடுகள் தாழ்வான நிலைக்கு செல்லுவது தவிர்க்க பட்டுள்ளது.
Tuesday, 20 November 2012
talk show:
டாக் ஷோ ::::
விசுவின் அரட்டை அரங்கம் மற்ற டி.வி.சீரியல்களில் இருந்து வித்தியாசமா இருந்ததால் முக்கியத்துவம் பெற ஆரம்பித்தது. அவரை தொடர்ந்து பலரும் பல சேனல்களில் டால்க் ஷோ நடத்துகிறார்கள்.
எல்லோருமே சினிமா பிரபலங்கள்.
ஆனால் விஜய் டி .வி.யில் "நீயா நானா" நிகழ்ச்சிய நடத்தும் கோபிநாத்
இந்த நிகழ்ச்சியின் மூலமாக பிரபலமானார்....
நிகழ்ச்சியும் பிரபலமானது.
அதற்கு காரணம் இயக்குனரின் தலைப்பு தேர்வும்,
அதை கோபிநாத் மூலமாக வெளிக்கொணரும் சாமர்த்தியமும்தான்!
இன்றைய இளைய சமுதாயம், திருமணம், புது மனை புகுவிழா போன்ற உறவினர்களின் நிகழசிகளுக்கு வருவதற்கு,கலந்துகொள்வதற்கு ஆர்வம் காட்டுவதில்லை.
இதை தலைப்பாக வைத்து பெரியவர்களையும், இளைஞர்களையும் பேச வைத்து எல்லோரையும் நெகிழ வைத்துவிட்டார்கள், என்று நண்பர் ஒருவர் தன்னுடைய 'ப்ளாக்கில்' எழுதியது முற்றிலும் உண்மை.
Subscribe to:
Posts (Atom)