இந்திய சுதந்திரம் அடைந்து 65 ஆண்டுகள். சும்மா கிடைக்கவில்லை சுதந்திரம்.பல தியாகிகளின் உழைப்பு! தியாகம்.சிறை சென்று கொடுமைகளை அனுபவித்தார்கள்.அதன் பலனை இன்று நாம் அனுபவிக்கிறோம்!!! தமிழ்நாடு சாதி ஒழிப்பிலும் ஒடுக்கப்பட்ட மக்களின் முன்னேற்றத்திலும் முன்னணி மாநிலம்.
சென்னை மாநகராட்சியின் ஏழாவது மண்டலமான அம்பத்தூரில், மண்டல தலைவர் ஜோசப் சாமுவேல், தேசிய கோடியை ஏற்றுகிறார்.அருகில் மண்டல அலுவலர், சிவஞானம் மற்றும் அலுவலக ஊழியர்கள்,பள்ளி சிறுவர்கள் மற்றும் பொதுமக்கள்.ஈ.வெ.ராமசாமி நாயகர், "பெரியார்" என்று அழைக்கப்பட்டது அவர் பிறந்த ஜாதியால் அல்ல.
ஜாதி ஆதிக்கத்தை ஒழிக்கவும் ஒடுக்கப்பட்டவர்கள், வறுமையிலிருந்து விடுபட்டு பொருளாதார மேம்பாடு அடைய வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்திற்காக பாடுபட்டதால்தான்.
அந்த நோக்கத்தை "கக்கன்"அவர்களை அமைச்சர் ஆக்கியதன் மூலம் காமராஜர் நிறைவேற்றினார்.
கலைஞர் தாழ்த்தப்பட்ட மக்களின் பிரதிநிதிகளின் சார்பாக உயர்ந்த பதவிகளை அவர்களுக்கு அளித்து கவுரவ படுத்தினார்.
No comments:
Post a Comment