கிராமத்து வீட்டினுள்ளே சிட்டு குருவி கூடு கட்டும். முட்டையிட்டு குஞ்சு பொறித்து உணவிற்காக சிவப்பு வாயை கூண்டிற்கு வெளியே நீட்டுவது கண்கொள்ளா காட்சியாகும்.
பூனை, பசு மாடு என்று அடுத்தடுத்து குட்டி,கன்று போடும்போதும், அவைகளை மடியில் வைத்து கொஞ்சும் போதும் கிடைக்கும் மகிழ்ச்சிக்கு ஈடு இணையே இல்லை.
கன்று, தெரு முழுவதும் துள்ளி குதித்து ஓடும் அழகும், தாய் பசு ஹம்ம்மா..என்று அதை அதட்டுவதும்...ரசிக்க ரசிக்க திகட்டாதவை.
படிப்பதற்காக பக்கத்து நகரத்திற்கு குடி பெயர்ந்தபோது, நரிக்குறவர்கள்,மைனா, கிளி,அணில் குட்டி, புறா இவற்றை பிடித்து சந்தைக்கு கொண்டுவருவதை காசிற்கு வாங்கி வளர்த்ததில் நிறைய நண்பர்கள் கிடைத்தார்கள்.ஏமாந்த சமயத்தில் பூனை இவைகளை கபளீகரம் செய்துவிடும்.
நண்பர் ஒருவர் வீட்டில் உள்ளே நுழைந்ததும் கிளி"யாரோ வராங்க " "பப்பிமா" என்றது.
பழைய பறவை பாசத்தில் விசில் அடித்தேன். திருப்பி அருமையா விசில் அடித்தது.
No comments:
Post a Comment