Tuesday, 18 October 2011

உள்ளாட்சி தேர்தல்:வாக்கு பதிவு 17th oct.2011

உள்ளாட்சி தேர்தல்:வாக்கு  பதிவு
முதல் நாளே மறுநாள் காலை 6 மணிக்கெல்லாம் பூத்தில்
இருக்கவேண்டும் என்று சொல்லிவிட்டார்கள்.
சரியாக 5 .30க்கெல்லாம் ஆட்டோ  வந்து பிக் அப் பண்ணியது.
சரியான நேரத்தில் துவங்கவேண்டும் என்ற பரபரப்பு.
அதிகாரி டெமோ செய்து காண்பித்தார்.
சீல் வைக்கும்போது close பட்டனில் கை தவறி பட்டதால்
மீண்டும் ஒன்று முதல் முப்பத்திரண்டு வரை மெஷின் ஓட காத்திருந்தோம். பிறகு மெஷின்களை அதன் இடத்தில் வைத்து விட்டு அவரவர் இடத்தில் அமர்ந்தார்கள்.
முதல் ஆளாக ஒட்டு போட்டு விட்டு எனது முகவர்(தி.மு.க)பணியை தொடங்கினேன்.
தாமதமாக தொடங்கியதால் கூட்டம் அதிகமாகிவிட்டது.
இந்த பூத்தில்  மொத்த வாக்காளர்கள்  1157 
பத்து மணி நேரத்தில் எல்லோரும் வாக்களிக்கவேண்டும்.
இரண்டு பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர்கள்.
மேயருக்கு 32 பேர்.
கவுன்சிலருக்கு 7  பேர்.
மேயருக்கு இரண்டு மெஷின்கள்.
கவுன்சிலருக்கு ஒன்று.
ஒரு நிமிடத்திற்கு இரண்டு பேர் வாக்களித்தால் மட்டுமே எல்லோரும் வாக்களிக்க முடியும்.
வழக்கமாக திமுக கூட்டணி சார்பாக ஒரு முகவரும் அதிமுக
சார்பாக ஒருவரும் டம்மி வேட்பாளர் சார்பாக ஒரிவரும்தான் இருப்போம்.சுயேச்சைகள் எல்லா பூத்துகளிலும் முகவரை போட மாட்டார்கள்.
ஆனால் இந்த முறை,திமுக அதிமுக பாமக காங்கிரஸ் தேமுதிக மதிமுக கம்யுனிஸ்ட் என்று ஏழு முகவர்களும் சுயேச்சைக்கான முகவர்களும் சேர்ந்ததால் உட்கார நாற்காலிகள் இல்லை. எப்படியோ
சமாளிக்கவேண்டியதாயிற்று.
நடுத்தர மற்றும் தொழிலாளிகள் அதிகம் வாழும் பகுதியாதலால், டீ குடிக்ககூட
நேரம் இல்லாத அளவிற்கு வேலை பார்த்தோம்.
இந்த முறை தேர்தல் கமிஷன்  அளித்த 
பூத் சிலிப் சரியாக மக்களை அடையாததால், வாக்காளரின் வரிசை எண் கண்டுபிடித்து சொல்ல 
அதிக நேரம் செலவானது.
காலை சிற்றுண்டியும், பகல் உணவும் வந்தும் சாப்பிட முடியவில்லை.
unreserve compartment ல் இடம் பிடித்தவன் கதை போல, எழுந்தால்
இடம் போய்விடும்.
கூட்டம் வந்துகொண்டே இருந்தது.
இரண்டு முறை டீ வந்தது மட்டுமே ஆறுதல்.
வீட்டிலிருந்து மகன் சாப்பாடு கொண்டுவந்ததுடன்,மாத்திரை
சாப்பிட்டாயா என்று கேட்டுவிட்டு ஒட்டு போட்டுவிட்டு போனான்.
கூட இருந்த பையன்கள் தம்பி ஒங்க அப்பா ஒண்ணுமே சாப்பிடவில்லை என்று போட்டு கொடுத்தார்கள்.நான் அந்த பக்கமே திரும்பாமல் வேலையிலேயே
கவனமாக இருந்தேன். சரியாக ஐந்து மணிக்கு, வரிசையில் இருந்தவர்கள் டோக்கன் பெற்றவுடன்
கேட் மூடப்பட்டது.கடைசி வாக்காளர் ஒட்டு போட்டவுடன்
சாப்பிட உட்கார்ந்தேன்.
பசி அடங்கிவிட்டது.மூடி வைத்துவிட்டு
மேயர் முகவர் என்ற முறையில் நான்கு இடத்தில் கையொப்பமிட்டுவிட்டு,
பாத் ரூம் எங்கே என்று கேட்டு வெளியில் சென்றேன்.
 என் வாழ்நாளில் தொடர்ந்து 9 மணி நேரம் நகராமல் உட்கார்ந்திருந்தது இன்றுதான்.
 உங்களை போல நானும்
21 ந்தேதிக்காக காத்திருக்கிறேன்! 
 

 

No comments: