Thursday, 2 February 2012

சென்னை விமான நிலையமா இது?




         I-DISO - Alitalia Boeing 777-200ER aircraft
                             


சென்னை விமான நிலையமா இது?

.சென்னை விமான நிலையமா இது?
நம்ப முடியாத அளவிற்கு மாற்றங்கள்!!!!
எண்பதுகளில் டக்கோடா,பிரன்ஷிப்,போயிங், ஜம்போ என பல வகையான விமானங்கள், அலுமினிய பறவைகளாக வீடு அதிரும்படி மேலே பறக்கும். அப்போது கிண்டியில் இருந்தோம். அண்ணாந்து பார்த்தால் முன்பக்க சக்கரம்
மெதுவாக இறக்கப்படுவதை காணலாம். விமானங்களின் நிழல் வீடுகளின் மீது போய்க்கொண்டிருக்கும். மீனம்பாக்கத்தில் இறங்கும்போது பெரிய ஓசை  இங்கே கேட்கும். காரவீல் எனும் விமானம் வீட்டை கடக்கும்போது அதிர்வும்,ஓசையும் மிகவும் அதிகமாக இருக்கும்.
அப்பாவுடன் :::
அப்பாவுடன் முதலில் விமான நிலையத்திற்கு சென்று பார்த்தபோது நுழைவுக் கட்டணம் இல்லை.ஹிந்து பேபரின் இரண்டு குட்டி விமானங்களும்(பெங்களூர்,மதுரை,கோவை,விஜயவாடா ஆகிய இடங்களுக்கு இங்கிருந்துதான் பேப்பர் செல்லும்) பிளையிங் கிளப் குட்டி விமானங்களும் வரிசை கட்டி நிற்கும்.
15 ஆண்டுகளுக்கு பிறகு ::::
அதற்கடுத்து 15 ஆண்டுகளுக்கு பிறகு ஒரு முக்கியமான மீடிங்கிற்காக அவசரமாக பெங்களூருக்கு வரசொல்லி விமான டிக்கட் அனுப்பினார்கள். ஊர் நமக்கு புதியதல்ல.வாகனம் புதியது. (அப்பாவுடன், பல வருடங்களுக்கு முன் வந்தது நினைவிற்கு வந்தது மட்டுமல்லாமல், அப்போது அவர் உயிருடன் இல்லாததும் வருத்தமாயிருந்தது.
அம்மாவிடம் சொன்னால் பயப்படுவார்கள் என்று சொல்லவில்லை.இரவே திரும்பிவிட்டதால் பிரச்சினை இல்லை.)
உடன் மேலதிகாரியும் வந்ததால் மீட்டிங்கில் என்ன எடுத்து சொல்லவேண்டும் 
என்பதை பற்றி விவாதித்துக்கொண்டே வந்ததில் ஊர் வந்ததே தெரியாமல் உட்கார்ந்து பேசிக்கொண்டேயிருந்தோம். ஏர்-ஹோஸ்டஸ் வந்து சொன்னதும், தெரிந்தாற்போல சமாளித்து வெளியே வந்தோம்.
மூன்றாவது முறை ::::::
அடுத்தது கொச்சியில் இருந்தபோது, மாலை சென்னையில் இருக்கவேண்டிய கட்டாயம்.அலுவலகத்தில் இருந்து உடனே வரச்சொன்னார்கள்.அந்த பயணம் தான் நின்று நிதானமாக வெளியில் பார்த்து ரசித்து வந்தேன்.
எல்லா பயணங்களிலும், பயணிகளின் எண்ணிக்கை, 15 லிருந்து 30 ஐ தாண்டாது.
இன்று காலை 
இன்று காலை மகனும் மகளும் மும்பைக்கு செல்ல டிக்கட் எடுத்திருந்தார்கள்.இன்றும் நாளையும் விடுமுறை திங்கள் செவ்வாய் சேர்த்தால் 4 நாட்கள்.
காலையில் அவர்களை எழுப்பி (இரவு இரண்டு மணிக்குத்தான் படுத்தார்கள்)கால் டாக்சியில் சென்று திருசூலம் உள்நாட்டு நிலையம் அடைந்தோம்.
பிராட்வே பஸ் ஸ்டாண்ட்   
விசிட்டர்கள் உள்ளேஅனுமதி இல்லை. வெளியே சங்கீதா ஹோட்டல் (டீ கடை  லுக்கு!)
மேம்பாலத்திற்கு கீழே, நாற்காலிகளில், விமானத்தில் வந்த பயணிகள்.சூபர் பஜாரில் இருப்பது போல தள்ளு வண்டிகள்.அதில் பெட்டி லக்கேஜுகள்.
பிராட்வே பஸ் ஸ்டாண்ட் ரேஞ்சுக்கு இருந்ததை பார்த்ததும் ஜீரணிக்கவே முடியவில்லை.
வாரிசுகளிடம் சொல்லிவிட்டு கிளம்பிய போது என்னவோ போல இருந்தது.
எதிரே இருக்கும் திருசூலம் ஸ்டேஷனில் பிளாட்பார்மில் நின்று பிளைட் டேக் ஆப்- ஆகும்வரை காத்திருந்தபோது சிவப்பு பட்டையுடன் சரியான நேரத்தில் 
பரங்கிமலைக்கு மேலே "மீன் கொத்தி"போல அலுமினிய பறவை பறந்தது,என் மக்களை சுமந்து கொண்டு. 
அப்பாவின் நினைவு வந்து கண்களை நீரால் நிரப்பியது.

0 கருத்துரைகள்:

Sunday, 22 January 2012

தி.மு.க.புள்ளிகள் கைது



முன்னாள் தி.மு.க.அமைச்சர் வெள்ளக்கோவில் சுவாமிநாதன் கைது:  
  தி.மு.க புள்ளிகள் கைதாவதும் நீதிமன்றம் அவர்களை விடுவிப்பதும் ஜெ.ஆட்சிக்கு வந்ததும் தினசரி நிகழ்ச்சி ஆகிவிட்டது.
பொட்டு சுரேஷில் இருந்து அன்பழகன் வரை கைதாகி இப்போது வெளியே வந்துள்ளனர்.
ஆனால் புரசை ரங்கநாதன் வழக்கில், அவர் மீது போடப்பட்ட வழக்கு, சட்ட விரோதம் என்று விடுதலை செய்யப்பட்டதில் இருந்தே ஜெ.அரசின் நோக்கம் என்ன என்பது தெளிவாகிவிட்டது.
மின் பற்றாக்குறை,சாலை சீரமைப்பு, தானே புயலில் சீரழிந்த கடலூர் மக்களுக்கு நிவாரணம் போன்ற முக்கிய பணிகளில் கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே ஓட்டு போட்ட மக்களின் கோரிக்கை,எண்ணம், எதிர்பார்ப்பு,எல்லாம்.
முதல்வர் காதில் இந்த கோரிக்கை விழுமா? நடவடிக்கை எடுப்பாரா? 

Thursday, 19 January 2012

புத்தக விற்பனை திருவிழா 2012

புத்தக   விற்பனை  திருவிழா :

அண்ணா சாலையில் நடக்கும் புத்தக கண்காட்சி சிறிய இடமாக இருப்பதால் நூறு பேர் வந்தாலே நெரிசலாக இருக்கும்.வரும் கூட்டம் வாங்கும் கூட்டம் என்று சொல்ல முடியாது.
பச்சையப்பன் கல்லூரி எதிரில் பள்ளி வளாகம் சரியான தேர்வு!
இந்த வருடம் எல்லா நாட்களிலும் கூட்டம் அலை மோதியதை பார்த்ததில் ஒரு அலாதி மகிழ்ச்சி...கற்றோரை கற்றோரே காமுறுவர்!
நேருக்கு நேர் இடத்தில் மக்கள் உட்கார்ந்து களைப்பாற மிகவும் உதவியது.
கடைசி நாளன்று ஐந்து பேர் மத்தியில் ஒருவர்."சிறு கதை எழுதுவது எப்படி"என்ற கேள்விக்கு விஸ்தாரமாக பதில் சொல்லிக்கொண்டிருந்தார்.
எல்லா ஸ்டால்களிலும் 4,5 பேர் நின்றுகொண்டு புத்தகங்களை படித்துகொண்டு,
மற்றவர்களை உள்ளே வர விடாமல் நன்மை செய்துகொண்டிருந்தார்கள்.
இந்த வருடம் சில ஸ்டால்களில் கிரடிட் கார்டுகளை அனுமதித்ததால் அதிக அளவில் புத்தகங்கள் வாங்க முடிந்தது.
உயிர்மை,கிழக்கு பதிப்பகங்கள் ஸ்டாலில் கூட்டத்தையும், மனுஷ்ய புத்திரன்,பிரசன்னாவையும் பார்க்க முடிந்தது.

 புத்தகங்களின் எடை அதிகமாக இருந்ததால் ஆட்டோ பிடிக்க நேர்ந்தாலும் தேடி வந்த புத்தகங்கள் கிடைத்த மகிழ்ச்சிக்கு அளவேது!

Monday, 2 January 2012

INDIAGATE

 INDIAGATE:
மும்பையில் குண்டு வைத்தவர்கள் புகுந்த இடம் தாஜ் ஹோட்டல்.
எதிரே உள்ள இடம் இந்த இந்தியா கேட். இரண்டு கி.மி.தூரத்தில் உள்ள சத்ரபதி சிவாஜி டர்மினல்.மிகப்பெரிய ரயில் நிலையம்.கசாப், இங்கிருந்து தப்பியபோது பிடிபட்டவன்.ஒபேரா மற்றொரு இடம்.
அன்றைய தினம் மும்பைவாசி மட்டுமல்ல எந்த ஒரு இந்தியனும் மறக்க முடியாத நாளாகும். இந்த சம்பவத்தில் யாராருக்கு தொடர்பு என்பது இறந்துபோன முக்கிய புலனாய்வு அதிகாரிக்கே வெளிச்சம்.

Wednesday, 28 December 2011

மும்பை அதிசயங்கள்:3 பவர் கட்!!!

மும்பை அதிசயங்கள்:,3 
ஆட்டோகாரரிடம் போகவேண்டிய இடத்தை சொன்னதும், "பந்த்ரா" என்றார்.
வியாபாரத்திற்காக கத்து வைத்திருந்த எண்-இந்தி கைகொடுத்தது.
செல்ல வேண்டியதூரம் ராயபேட்டை மணிகூண்டிலிருந்து  போலீஸ் ஸ்டேஷன்
 வரை இருக்கும். அவர் கேட்டது பதினைந்து!   சரியாக நண்பரின் வீட்டு எண் கேட்டு வண்டியை நிறுத்தினார்.இருபது
ரூபாய்க்கு ஐந்து ரூபாய் சில்லறை கொடுத்தார்.
நண்பரின் இடம் மூன்றாவது தளம். 
வேர்த்து விறுவிறுத்து மேலே சென்று காலிங் பெல்லை 
அழுத்தினோம்! நண்பர் வந்து கதவை திறந்தார்.  
மும்பையில் அதிக குளிர்! நண்பகல் இரண்டு மணிக்கும்
குளிர்தான்.வேர்த்திருந்ததால் :.பேனை போடச்சொன்னேன்!
நண்பர் சொன்னார் பவர் கட்.காலையில்,மாலையில் ஒவ்வொரு மணி நேரம்.
பிளாஸ்டிக் விசிறி கை கொடுத்தது.
திரும்புகையில்,நடந்தே ரயில்வே ஸ்டேஷனக்கு வந்துவிட்டோம்.முப்பது ரூபா
கூப்பனை மெஷினில் செலுத்தி எடுத்துக்கொண்டேன்.
வந்த வண்டியில் ஏறிவிட்டோம். சக பயணி சொன்னார்.அது விரைவு வண்டி என்று!
தானே ஸ்டேஷனில் இறங்கி வேறு வண்டி பிடிக்க முயன்றோம்.மனிதர்களா அவர்கள்
.ஒ வென்று கூச்சலிட்டபடி தள்ளிக்கொண்டு ஓடியதில் எங்களுக்கு புரிந்து விட்டது.இந்த
கூட்டத்தில் நம்மால்  ஏற முடியாது.ஏறினாலும், இறங்க வேண்டிய இடத்தில் இறங்க முடியுமா
என்பதும் சந்தேகமே!
வெளியில் வந்து ஆட்டோ பிடித்து டோல்கேட் வரை வந்து,அங்கிருந்து மற்றொரு ஆட்டோ பிடித்து வீடு வந்து சேர்ந்தோம்!
நல்ல அனுபவம்!!