Saturday, 26 November 2011
Thursday, 24 November 2011
அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா!
அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா!
உள்ளாட்சி தேர்தல்:
சென்னை மாநராட்சி மண்டல தலைவர்கள்:
நகராட்சியில் சேர்மன் பதவிக்கு சற்றும் குறைவில்லாத பதவிதான் சென்னை மண்டல தலைவர் பதவியும்.எல்லா மண்டலங்களிலும் அதிமுகவினரே மெஜாரிட்டியாக இருப்பதால்,எல்லா மண்டலங்களிலும் அவர்களே தலைவர்களாக வருவதில் எந்த வித சந்தேகமும் எழவில்லை.
ஒரு மண்டலத்தில் மட்டும் போட்டி:
ஒரு மண்டலத்தில் மட்டும் போட்டி என்றார்கள்.எந்த மண்டலம் என்று விசாரித்ததில், 7 வது மண்டலமான அம்பத்தூர் என்றார்கள்.15 கவுன்சிலர்கள் கொண்ட அந்த மண்டலத்தில்,admk 10, dmk 4, காங்-1,. இந்த நிலையில் தி.மு.க.எந்த அடிப்படையில் போட்டிக்கு மனு போடுகிறார்கள் என்று யாரும் சந்தேகப்படவில்லை.பத்து கவுன்சிலர்களின் வோட்டில் அதிமுக அலக்சாண்டர் வெற்றி உறுதி என்று இருந்தார்கள்.
மேயர் மற்றும் கமிஷனர் முன்னிலையில் ரகசிய வாக்கு பதிவு நடந்தது.
ஒட்டு எண்ணிக்கையில் திமுகவிற் எட்டு ஓட்டுக்களும் அதிமுகவிற்கு ஏழு ஓட்டுக்களும் பதிவாகியிருந்தது.திமுக கவுன்சிலர் ஜோசப் சாமுவேல் மண்டல தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
அன்றிரவே அம்பத்தூர் அதிமுக நகர செயலாளர் (இவர் எம்.எல்.ஏ வும்,கூட)பதவி பறிக்கப்பட்டு, அலக்சாண்டரிடம் தரப்பட்டது.
உள்கட்சி பூசலால் தி.மு.க. ஒரு மண்டல தலைவர் பதவியை
கைப்பற்றியுள்ளது.
இதில் பணம் விளையாடியுள்ளது என்கிறார்கள் பொறாமை பிடித்தவர்கள்.

Sunday, 6 November 2011
IdlyVadai - இட்லிவடை: சிறுவனுக்கு உதவுங்கள்
IdlyVadai - இட்லிவடை: சிறுவனுக்கு உதவுங்கள்: இட்லிவடை நண்பர்களுக்கு சில சம்பவங்கள் நடந்து முடிந்தவுடன் அய்யோ இது ஏன் இப்படி ஆனது காலம் திரும்பவம் ஐந்து நொடிகள் பின்னோக்கி நகர்ந்து முன்...
Saturday, 29 October 2011
Wednesday, 26 October 2011
தீபாவளி
புதிய துணி,நகை பட்டாசு வாங்குவதில் நகரெங்கும் மக்கள் சுறுசுறுப்பாக இருந்தார்கள்.வெளியூரு க்கு செல்லுவோர்கள் கூட்டம் கோயம்பேட்டிலும்,எக்மோ ர்,சென்ட்ரல், தாம்பரம் எங்கும் நிரம்பியது. எல்லோருக்கும் தீபாவளி மகிழ்ச்சி!பெரிய பாத்திரங்களில் உணவு வகைகளோடு அன்னை தெரசா இல்லத்தில் இறங்கினோம்!பரிமாறும் போது, காலில் தட்டி கூப்பிட்ட மூதாட்டி, "இன்னும் கொஞ்சம் போடு!இது போல சாப்பிட்டு வருஷக்கண்க்காயிற்று! " வீட்டிற்கு வந்து சாப்பிட உட்கார்ந்தேன்! உணவு இறங்கவில்லை.
புதிய துணி,நகை பட்டாசு வாங்குவதில் நகரெங்கும் மக்கள் சுறுசுறுப்பாக இருந்தார்கள்.வெளியூரு
Monday, 24 October 2011
விடிந்தால் தீபாவளி!
விடிந்தால் தீபாவளி!கை(பை)யில் சுத்தமாக காசில்லை.கோவையில் குண்டு வெடித்ததில் இருந்து இதே நிலைமை.மில்லில் வேலை செய்யும் நண்பர்கள் நிலைமை அதை விட மோசம்.இன்னும் போனஸ் பிரச்சினை தீர்ந்தபாடில்லை.வீட்டிலிருந்து போன்.தயக்கமாகவே ஆன் செய்து பேசினேன்."அப்பா, உனக்காக வெள்ளிங்கிரி அங்கிள் காத்துக்கிட்டிருக்காரு.பேசுங்க." ஹலோ! குமாரு வீட்டுக்கு வா.நிறைய விசயம் பேசணும்"."டேய்! எப்படா துபாயிலிருந்து வந்த! அங்கேயே இரு வந்துர்றேன்!" 14 வருடங்கள் முன்பு ஊரை விட்டு சென்றவன் வந்திருக்கிறான்.இனிய நண்பன்.வெள்ளந்தியானவன்.யாரும் கிண்டல் செய்து பேசினாலும் சீரியசாக பதில் சொல்லிக்கொண்டிருப்பான்.வீட்டிற்கு வந்ததும் கட்டிப்பிடித்துகொண்டவனின் கண்களில் நீர் வழிந்தது."என்னடா எப்படி இருக்கே!" ரொம்ப நல்ல இருக்கேன் குமாரு!குழந்தைங்க அடையாளமே தெரியல!" "டே! நீ மாறவே இல்ல! வேலையெல்லாம் எப்படி? கலியாணம்?"ஆமாம் இதெல்லாம் என்ன?" ஸ்வீட் பாக்ஸ்,பட்டாசு,துணி மணிகள் அடுக்கி வைத்திருந்தது.
"அன்னைக்கு மட்டும் நீ எனக்கு பாஸ்போர்ட் எடுத்து வெளிநாட்டுக்கு போக பணம் தரலேன்னா என் வாழ்க்கையே பால்காரனாவே முடிந்திருக்கும்.உன்ன என் வாழ் நாளில் மறக்கவே மாட்டேன்! இந்த பணத்தையும் இந்த பரிசுகளையும் எடுத்துக்கணும்.அப்போதான் எனக்கு சந்தோசம்.வேண்டாம்னு மட்டும் சொல்லாதே!"
அதற்குள் மற்றொரு நண்பனும் வந்து சேர்ந்தான்.இவன் அமெரிக்கவாசி.இருவரும் சேர்ந்து எனது நெடு நாள் கொள்கையை உடைத்துவிட்டார்கள்.பிறகென்ன! கே.ஜி.தியேடரில் அன்றிரவு ஒரே ரகளைதான்.திரும்பி வந்ததும் பட்டாசு கொளுத்தி அக்கம்பக்கத்துக்காரர்களின் தூக்கத்தை கெடுத்து எழுப்பினோம்.
Labels:
deepaavali,
Deepavali,
kaasu,
nanbenda,
sontha oor
Tuesday, 18 October 2011
Subscribe to:
Posts (Atom)